நிரஞ்சன் என்பதைக் கவனிப்போம். பெண்பாற் சொல்லாக, நிரஞ்சி என்ற சொல் ஒன்று அமையவில்லை என்று சொல்லலாம். அல்லது எங்கோ இருந்து வழக்குப் பெற்றிலது என்று வைத்துக்கொள்ளுதலும் கூடும். நிரஞ்சன் என்பதை ரஞ்சன் என்று சுருக்கிவிட்டால், ரஞ்சிதா என்ற சொல் கிட்டிவிடும். இதற்கு நல்ல பல பொருள்களைக் கூட்டி உரைக்கலாம். மிகப்பழைய நாட்களில் இது : ரஞ்சி ஆத்தா என்றிருந்து, ஆத்தா என்பது தா வாகி, பழையதிலிருந்து புதிய சொல் ஒன்று வந்திருக்கின்றது. மொழி என்பது இப்படி அமைவதுதான். புதிய சொற்கள் விரியும் கற்பனைகேற்ப சொற்களும் பெருகும்.
நிறைந்தவன் > நிறைந்தான் > நிறஞ்சான் > நிரஞ்சன் > ரஞ்சன்.
பழைமையில் தோன்றியதுதான் புதுமை. வெற்றிடத்தில் எதுவும் விளவதில்லை.
என்னதான் புதுமை மனிதனாக இருந்தாலும் அந்தக் காற்று இருக்கும் வரைதான் நீ மனிதன். இதை உணர்கிறோம் அன்றோ?
அ, இ, உ என்பவை திரிந்து பல ஆயிரக்கணக்கான சொற்களாயின என்று சிலர் கூறுவது அதனால்தான். ஆனால் பேசுகிறவனுக்கு ஒவ்வொரு சொல்லும் தனித்தனி அர்த்தம் உள்ளதாகத் தோன்றவேண்டும். அப்போதுதான் மொழியின் இயக்கம் சரியாக நடைபெறும். இதனால்தான் சட்ட நூல்களில் சொற்கள் வரையறவு ( definitiions ) செய்யப்படுகின்றன.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக