இமாலய வெற்றி என்று கூறுவதுண்டு.
இதை இவ்வாறு பிரித்தறிக.
இ - இது; மா - பெரிய; ஆல் ( அகல் என்பதன் திரிபு) - அகன்ற; அய - அடைந்த அல்லது அருகிலான.
இந்த அய என்பது இரண்டு மூலச்சொற்களின் இணைப்பு. அ என்பது அருகில் அல்லது அயலில் என்பதற்கும் மூலம். அங்கு என்பதற்கும் மூலமாகும். அ அ என்பது அய என்று வந்ததில் யகர உடம்படுமெய் வந்தது.
மா+ அகல்+ அ+ அ , அகல்> ஆல் என்று திரியும்.
மா+ ஆல் > மால் என்று, ஆ கெட்டது அல்லது வீழ்ந்தது. இது மக+ அன் > மகன் என்று அ வீழ்ந்தது போலுமே. வகர உடம்படு மெய் வரவில்லை. மக அன்> மான் என்றுமாகும். பகு> பகுதி> பாதி, காண்க. ககர வருக்கம் வர முதல் நீளுதல். அதியமான், புத்திமான். பெருமகன் > பெருமான். தொகு+ஐ> தோகை. தொகை என்றுமாகும். பகு+ ஐ> பாகை.
சொல்லாக்கப் புணர்ச்சி வேறு. முழுச்சொற்கள் புணர்ச்சி வேறு. இவ்விரண்டிலும் ஒற்றுமைகளும் உண்டு, வேறுபாடுகளும் உண்டு.
இமைய ஆலய என்ற சொற்களின் இணைப்பு எனினும் ஒன்றே. இதை விரிவாக மேலே கூறியுள்ளோம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக