திங்கள், 9 செப்டம்பர், 2024

இந்திரியம் --சொல் புனையும் தந்திரங்கள்.

 இச்சொல் ஒன்றுபாட்டின்போது உடல்நிலை திரிந்து  வெளியேறும் திரவம்.

இச்சொல்லில் :

இன்  -  இது இன்பம் என்ற தமிழ்ச்சொல்லின் முன்பகவு.

திரி -  இது உடல்நிலையில் ஆண்மகற்கு உண்டாகும் மாற்றங்களைக் குறிக்கிறது.

அம்  -  விகுதி.  அமைதல் குறிக்கிறது.

இச்சொல் ஒரு புனைவு.  திரி என்று உள்ளிடாமல் தி என்று ஓரெழுத்துமட்டும் இட்டும் இது புனைவுபடுதல் உண்டு. அப்போது இது இந்தியம் என்று அமைதல் காண்க.

"கண்முதல் இந்தியங்களையும் பரார்த்தத்தில் சாதித்து

சயனா சனவானைப்  போலாகி  

கண்முதல் இந்தியத்துக்கும் பரனாய் சாதிக்கிற"

என்று மணிமேகலைக் காப்பியத்தில் வரும்,   இதைத் தவத்திறம் பூண்டு தருமங் கேட்ட காதையில் காண்க.

புனைவில் இந்திரியம் என்றே உண்டாகிப் பின் குறைப்பட்டிருப்பின்,  இடைக்குறை எனலாம். இன்பத்துக்கு இன் மட்டும் சொல்லுட் புகுந்திருப்பதால் திரிதல் என்பதற்கு தி மட்டும் இட்டுச் சொல்லாக்கி யிருக்கவும் கூடும்.  அவ்வாறாயின் இந்திரியம் என்பது இடைமிகை ஆகும்.

பரார்த்தம் என்றால் ஆன்மாவிற்குப் பயனாவது, சயன  ஆசனம் - படுத்தலும் அமர்ந்திருத்தலும்.  ஆசனவான் - ஆசனம்கொள்வான்.   பரனாய் -  பயன் கொள்வோனாய்.

கண்முதல் இந்தியம் என்றதால்  இது ஐம்பொறிகள் என்றும் உறுப்புகளைக் குறிக்கும் சொல். 

சொல்லாக்க உத்திகளை இச்சொல்லிலும் கண்டுகொள்ளலாம்,

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

கருத்துகள் இல்லை: