ஞாயிறு, 15 மே, 2016

அர்த்த நாரீஸ்வரர் ஆண்டவர் ஆலயம்

அருள்மிகு அர்த்த நாரீஸ்வரர்  ஆண்டவர்  ஆலயம்
பண்டார் செலசா  ஜய    ஸ்கூடாய்  ஜோஹோர்

கட்டளைக்  கலித்துறை

அலசா இடமெலாம் ஆண்டவர்த்  தேடி அலுத்தவரும்
செலசா ஜயாவினுள்  சீர்பசுஞ்  சூழல் எழுந்தருளி
பலசார்  பினர்பணி அர்த்தநா  ரீசுவர்  ஆண்டவரின்
நிலைசேர் அடியில் நெகிழ்வீர்   நெடுவினை தீர்வுறுமே

---சிவமாலா .




No.1  Silat Harimau
24 Bandar Selasah Jaya
81300 Skudai Johor

LMT 1602
0718 - 07 - JHR

Indulgences solicited for student:
DOB 29.11.2004
Tharsha 
for exam success.

சனி, 14 மே, 2016

தானுண்டு தன்வேலை ......LIVING ALONE1

தானுண்டு தன்வேலை
உண்டென்றே இருக்காமல்
 தாய்தந்தை  உடன்பிறந்தார்
 நட்புடையோர் எல்லவரும்
வீணன்று  விழைந்து நீர்
வீட்டிலும்  வெளியிலும்
எதிர்கொண்டு பேசலோடு
 நலமுசாவி  மகிழல்தானே

இன்றிருப்பார் இனிநாளை
 இல்லையென்றே ஆகிடுவார்
எங்குசென்று  தேடிடுவோம்
இப்படியாய் உலகுசெலும்
என்றுகாண்பேன்  என்றுகாண்பேன்
என்றழுதே இளைத்திடினும்
எந்நாளும் வருவதில்லை
என்றிடுதல் நின்றவுண்மை;


நன்றுநன்று நாளிருக்கும்
இதுபோதே அவர்களையே
சென்றுகண்டு சேர்ந்திருந்து
கையமர்த்திப் பிரிந்துவந்தால்
வென்றுநித்தல் விழைந்தினிய
வாழ்க்கைஇனி  உமக்குவரும்
வெறிதுதனி  இருப்படைதல்
வேண்டாமே கலந்துறைவீர்,


மாண்புமிகு  பிரதமரே  சொல்கிறார்:

Spend time with family while they're still alive - Prime Minister Najib

https://sg.news.yahoo.com/spend-time-family-while-theyre-073124129.html?nhp=1


உண்மை உண்மை.  பிரதமரைப் பாராட்டுகிறோம்.

.

மனிதமுக ஆட்டுக் குட்டி

மனிதமுகம் தன்னுடனோர் ஆட்டுக் குட்டி
மனிதர்தமை வியப்புறுத்திப் பிறந்தி றக்க‌
அணுக்களுக்குள் ஆளைப்போல் அரத்த சாரம்
அதற்குண்டோ அறிவியலார் அதனை ஆய‌
கணக்குகளில் சாரமிதோ வேறொன் றென்று
கண்டறிந்து கழறினரே கருத்துக் கொண்டு;
தணிவிலதாம் தார்வினியத் தெரிவி  யல்காண்
தான்மீண்டும் வன்புடனே நிமிர்ந்த தன்றே!

ஆளைப்போல்  -  மனிதனைப்போல் 
அரத்த சாரம் -  இரத்தத்தின் சாரம் (DNA)   அர்த்தம் = இரத்தம் .
கணக்குகளில் - in their DNA calculations
தணிவிலதாம் -   பாதிக்கப் படாததாம் 
தார்வினியம் -  Darwinism 
வன்புடனே - பலமாக 
தெரிவியல் -theory

விரிவாகத் தெரிந்துகொள்ள:


No human DNA found in kid with human-like features, says Vet Department



https://sg.news.yahoo.com/no-human-dna-found-kid-110219079.html?nhp=1