A poem on international relations....
நாடுகளே நீங்களே ஒன்றுபடுங்கள்
கோடுயரப் பேட்டைகளில் தொழில்நிறுவுங்கள்!
ஒத்துழைப்பு மிக்குறவே பாடுபடுங்கள்!
சொத்துமிகு முன்முயற்சிக்கு ஈடுகொடுங்கள்.
அணுக்கமதே ஆல்போல் இணக்கவிரிப்பால்
சுணக்கமறச் சூழ்பயனாய்ச் சுரக்கவிடுங்கள்.
தொழில்தொடங்கு நோக்குடனே வானவூர்தி
எழில்பயணம் எல்லையின்றி மேனிலையாக!
பங்காளித் தன்மையாண்டும் பரக்கவேண்டும்;
தங்காமல் எப்பணியும் சிறக்கவேண்டும்!
குமுகங்கள் புதுமையிலே குதூகலிக்க
குழந்தைகளும் மிகுந்தமகிழ் வதில்சொலிக்க!
புத்தாக்கம் புதுமுனைப்புப் பரிமாற்றங்கள்
பூத்துவந்தால் நாடுபெறும் உருமாற்றங்கள்!
பண்டுவந்த உறக்கத்தைக் களைந்துவிட்டுத்
தொண்டுசெய்து தூயமனம் விளைந்துவாழ்க!
சிதலரித்த சீர்கேட்டுக் கொள்கைநீங்கி
முதலீட்டால் முன்மைபெற்று உயர்க நீரே.
அருஞ் சொற்பொருள் :
கோடு = வரம்பு . தேசத்தின் செழிப்பு வரம்பு.
குமுகம் = சமுதாயம்.
பேட்டை - தொழில் பேட்டை
பரக்க - விரிவு அடைய .
குதூகலிக்க - மகிழ்வில் துள்ள
சிதல் = கரையான் .
முன்மை = முன் நிற்கும் தன்மை .
அருஞ் சொற்பொருள் :
கோடு = வரம்பு . தேசத்தின் செழிப்பு வரம்பு.
குமுகம் = சமுதாயம்.
பேட்டை - தொழில் பேட்டை
பரக்க - விரிவு அடைய .
குதூகலிக்க - மகிழ்வில் துள்ள
சிதல் = கரையான் .
முன்மை = முன் நிற்கும் தன்மை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக