Pages

ஞாயிறு, 29 ஜூலை, 2018

சூரியன் ஒரு "சூடு இயன்".

சூரியன் என்ற சொல் தமிழில் பெரிதும் வழங்கிவரும் சொல்லாகும்.  சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்தது என்று சொல்வது தமிழ்நாட்டில் வழக்கமாகும்.சிற்றூர்களிலும் அறியப்படும் இச்சொல் தமிழ்ச்சொல்லே ஆகும்.

டகரம் ரகரமாய் மாறுதல்:

டகரம் ரகரமாக மாறும் தன்மையுடையது.  இது தமிழில் மட்டுமின்றி ஏனை இந்திய மொழிகளிலும் காணப்படுவது.  ஒடிஷா என்பது ஒரிசா என்று மாறும்; இதில் டி என்பது ரியாக மாறிற்று,  இன்னொன்று: சோப்டா என்ற பெயர் சோப்ரா என்றும் மாறுகிறது.   டா> ரா.  வாடி என்பதை வாரி என்பதும் செவிமடுக்கலாம்.

மாடாஹாரி  ( மாற்றாஹாரி அல்லது மாத்தாஹாரி )  என்ற மலாய்ச்சொல் இந்தோனேசியாவின் சில பகுதிகளில் மாராஹாரி என்று ஒலிக்கப்படுதலும் கவனிக்கத்தக்கதாகும்.   ட ர ஒலி இணைவைப்பு.

மடி > மரி ,  அடு>அரு திரிபு:

அட்டை முதலியன இரண்டாக மடிந்து இறக்கின்றன,  இறந்தன என்னாமல் மடிந்தன என்றாலே இறந்தன என்பதே பொருளாகிறது,   மடி  ( செத்துப்போ) என்பது தமிழில் மரி என்று  திரிந்து பொருள்மாறாமல் இயல்கின்றது.

நெருங்கிவரல் கருத்தில்  அடு ( அடுத்தல்)  என்பதும்  அரு ( அருகு ) என்பதும்  உள்ளன. ஆதலால் அடு = அரு.  இங்கும்  டு > ரு என்று காண்கிறோம்.

விடு விரி என்பனவும் ஆய்க.  ஒட்டி இருப்பன விடுதலின் பின்பே அவை விரியும். விடுவதும் விரிவதும் தொடர்  நிகழ்வுகளாகும். இங்கு டு>ரி திரிபு காண்க.  விடு>விடி>விரி. விடி என்பது ஒளி விரிவே.

மரி என்பது இறத்தல் என்னும் பொருளில் தமிழின் இனமொழிகளில் பெருவழக்காகிறது,    மரி என்பதும் மரணம்  ( மரி +அணம் )  மற்றும் மாரகம் ( மரி+அகம்) என்ற இறத்தற் பொருட் சொற்களைப் பிறப்பிக்கிறது.

பேச்சுமொழிச் சொல்:

சூரியன் என்பதோ ஒரு பேச்சுவழக்குச் சொல்லாகும்.  சிற்றூர்களிலும் வழங்கும் சொல். பகலோன், கதிரவன் என்பன இலக்கியச் சொற்கள்.  பேச்சு வழக்கிலிருந்து அதாவது நாட்டுப்புறத் தமிழைச் சலித்துச்  சூரியன் போலும் சொற்கள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிக.  சூட்டுடன் இயல்வது சூடியன் ஆகும்: இது சூரியன் என்று திரிந்தது.  மடி > மரியை நினைவிலிருத்திக்கொள்க.  இயல் > இயன் ;  லகர னகரப் போலி.ஆண்பால்  விகுதி பெற்றது போல் வடிவு கொள்கிறது.

திரிபொப்புமை:  (விடதம் > விரதம்):
உணவில் சில பொருள்களை விட்டு உண்பது விரதம் ஆகும்.  இது உண்மையில் விடுதற் கருத்துடையது. விடதம் என்பது விரதம் என்று பொருந்துமாறு வருகிறது. விடு>  விரு>  விரு+அது +அம் =  விரதமானது.
அது, இது. து என்பன சொல்லாக்கத்துக்குப் பெரிதும் பயன்பட்ட இடைநிலைகள்.

அது இது து இடைநிலைகள்: 

 மிகப் பரியது மலை; அப்பொருளில் பரு+ அது + அம் என்று அமைந்து பருவதமாகிறது. இங்கு அது என்ற இடைநிலை இல்லையென்றால் பரு+ அம்=  பரம் என்று அமைந்து  பர+ அம்= பரம் என்ற கடவுட் சொல்லுடன் குழம்பிவிடுமாதலால்  ஓர் இடைநிலை தேவைப்படுவதை அறியலாம். பரு என்பது மலைமகளைக் குறிக்க, பார் என்று திரிந்து பார்+வதி ஆகிறது.  பருத்தது அல்லது பரியது மலை.  பார்த்து எப்படிக் கடப்பது என்று மலைப்பை உண்டாக்கும் தடையாய் இருப்பது மலை. அதுவும்  பருமைக் கருத்துத்தான். அதன் பருமையால் ஏற்படுவது மலைப்பு.

சூடு அல்லது வெம்மை காரணப் பெயர்

இதுகாறுங்  கூறியவாற்றால் சூடியனே சூரியன் என்பதை அறிக. வெய்யோன் என்பதே பொருள்.  வெம்மை அல்லது சூடு காரணமாக ஏற்பட்டதே இப்பெயர். சூடு என்ற சொல் தமிழிலேயே உள்ளதும் டகர ரகர ஒலிமாற்றியல்பும் ஆழ்ந்து சிந்தித்தறிதற்குரித்தாம்.


உலக மொழிகளில் சூரியன் 
தமிழ் ஒப்புமை

உலக மொழிகளில் பல சூரியனின் பெயரை  ஸொல் ஸொன் ஸொர் என்று தொடங்குதல் கவனிக்கப்படுகிறது.

இலத்தினில் இது சொலிஸ் ஆகும்.  சொலிஸ்டிஸ் சோலார்  முதலிய பெறப்பட்ட ஆங்கிலச்  சொற்களையும் காண்க. கிரேக்கத்தில் "இலியோஸ்  "   எனப்படும். இவை சமஸ்கிருதத்திலிருந்து அவர்கள் பெற்றவை. ரகர  லகர போலி.

சுடர் என்ற சூரியப் பெயரும் சுடு என்பதன் அடிப் பிறந்ததே.  சுடு+அர் = சுடர். சுடர்தல் என்பது ஒளிர்தல் என்று பொருள்தரும் சொல்.

சுடு > சுரு> சுரன்:  இது சூரியனைக் குறிக்கும்.  சூரி என்பதும் சூரியன். சூரன் என்பதும் சூரியன், (முதனிலை நீட்சி)

மாத்தா ஹரி என்னும் மலாய் பகலின் கண் என்று பொருள் தருவது.  காரணத் தொடர்மொழி.  தகலோக்  மொழி இதை  "ஆராவ் "  என்பது அறியலாம்.

 மண்டரின் சீன மொழியில் வழங்குவது சூரியன் என்பதனோடு ஒலியொப்பு அற்றது. இவற்றை நுணுகிக் கவனித்து மூலம் அறிய இயலாது.  

சூரியன்  அல்லது சூரிய  என்பது  ஐரோப்பிய மொழிகளுக்குரிய சொல் அன்று. இச்சொல் வேதங்களிலும் காணப்படுவது. என்றாலும் வேதம் பாடியோர் எல்லோரும் பிராமணர் அல்லர் என்பதாலும்  வேதங்களில் தமிழ்ச் சொற்களும் உளவென்பதாலும் ஆரியர்1 என்போர் வெளி நாட்டிலிருந்து வந்தோர் என்பது வெள்ளையர்கள் தெரிவியல் (theory )  என்பதாலும் அதற்கு ஆதாரங்கள் இல்லை  என்பதாலும் இங்குக் கூறியதே சரியாகும்.

1 Note:  Aryan Migration is a myth created by the European colonizers and is a theory coined on the basis of  words  in Skrt which are also found in European languages.Per Romila Tapar, these could be borrowed words. Indians of darker hue are usually found in hot climates and this skin colour could have been caused by the abundant sunlight received in those areas.  Fair skin  does not automatically become evidence of Aryan migration. Foreigners entering India is not denied; they are/ were not "Aryans".


சனி, 28 ஜூலை, 2018

ஆட்டை வன்புணர்வு செய்த அறிவிலிகள்

1.  Eight men have been accused of raping a pregnant goat after which the animal died. The incident took place in Haryana's Mewat district.

https://www.indiatoday.in/india/story/pregnant-goat-dies-after-8-men-gang-raped-it-in-haryana-1299168-2018-07-28

ஆட்டை  வன்புணர்வு செய்த அறிவிலிகள்

அட பாவிகளே,  பாவம் அந்த ஆட்டைக்கூட நீங்கள் விட்டுவைக்காத மிருகங்கள் ஆகிவிட்டீர்களே .

2 A n 80-year-old retired lieutenant in Indian Navy was brutally beaten by a man for feeding stray dogs and other animals in the......... on Tuesday evening in Thiruvizha Apartment of Sector-10, Dwarka.

https://www.indiatoday.in/mail-today/story/ex-soldier-beaten-up-for-feeding-stray-dogs-1296457-2018-07-26?ref=taboola

விலங்குகள் மேல் இரக்கப்பட்டாலும் உதைதான் பரிசா ,


மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான்  இது உண்மை.
குரங்கு மனிதர்களுக்காக நாம் கவலைதான் கொள்ளலாம்.

3     The British Royal family is not allowed to eat these foods!

https://recipes.timesofindia.com/articles/features/the-british-royal-family-is-not-allowed-to-eat-these-foods/garlic/photostory/65120885.cms 

வெங்காயம் பூண்டு முதலியவை வாய் நாற்றம் உண்டாக்கும் பொருள்கள். ஒரு விழாவிற்குப் போய் வாய் திறக்கும்  3 நாட்களுக்கு முன்பே இவற்றை உண்ணாமல் நிறுத்திவிடுங்கள்.



இந்தச் செலவை மிச்சப்படுத்த வெளியூர்களுக்குப் போய்ப் பேசாமல் இருந்தால் சீனாவும் பாகிஸ்தானும் உதைக்கும்போது உதையை வாங்கிக்கொண்டுதான் இருக்கவேண்டும்.\
போய் அவர்களிடமும் பேச வேண்டும்;  வெளி நாடுகளுக்கும் ஓட வேண்டும்.

வீட்டுக்குள் இருந்துகொண்டு மயிலே மயிலே என்றால் காட்டு மயில் இறகு  போடாது,  காட்டுக்குப் போய்த் தான் மயிலைப் பார்க்கவேண்டும்.

5 முன்னைய அரசின் ஊழல் அதிகாரிகளுடன் தான் நான் அரசை நடத்தவேண்டி உள்ளது 
----  டாக்டர் மகாதீர்  மலேசியப் பிரதமர் .Youtube

வேறு வழியில்லையே/ உத்தரவுகளுக்கு எளிதில் கீழ்ப் படிந்துவிட்ட மாட்டார்கள்.  ஐயா சாமி என்று கெஞ்சியாவது காரியம் சாதிக்க வேண்டும்.  அறவே முடியாத நிலையில் அதிகாரம் சற்று பயன்படலாம்.  சிறந்த  பற்று நிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டியுள்ளது.

ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டிருக்கிறார். அவர்களும் சரி சொல்லி இருக்கிறார்கள்.


 

சில பெயர்ச்சொற்களின் அமைப்பு ஓர் எடுத்துக்காட்டு

ஓரிரண்டு சொற்களை மட்டும் விளக்கி முதனிலைத் திரிபினை ஒருவாறு விளக்கலாமெனினும்  கேட்போருக்கு இத்தகு சொல்லமைப்புகள் முழுமையாய்ப் புரிந்துவிட்டது என்று முடிவுகட்டிவிட முடியாது.  ஆகவே இனிப்  பல உதாரணங்களைக் கையாண்டு எப்படி வினைகளிலிருந்து பெயர்கள் அமைகின்றன என்பதை ஆர்வமுடையார் யார்க்கும் இதன்பின் அறிவிப்போம்.

மிக்க எளிமையான தொழிற்பெயர் ஆக்கமென்றால் அது ஒரு வினைப்பகுதியும்  ஒரு விகுதியும் தோன்றும் அமைப்புத்தான்.  எடுத்துக்காட்டு:

தேடு > தேடுதல்.

இந்த அமைப்பில் தல் என்ற பெயர்ச்சொல்லாக்க விகுதி புணர்ந்துள்ளது.  திரிபுகள் எவையும் இல்லை.  தேடு என்ற வினைப்பகுதி அப்படியே மாற்றம் ஏதுமின்றி  உள்ளது. பெயர்ச்சொல் அமைப்புக்கு இப்படி  ஓர் எடுத்துக்காட்டினையே கொடுத்துவிட்டு இப்படித்தான் அமையும், இதுதான் தொழிற்பெயர் என்று வாத்தியார் போய்விட்டால், மாணவனுக்கோ மற்றவருக்கோ அதுமட்டுமே தெரியும்.  பலர் சொந்தமாக எதையும் விரித்தறிந்து கொள்வதில்லை.  பேரன்பேத்தி எடுக்கும்வரை அந்த ஓர் உதாரணமே தெரிந்துவைத்திருப்பான்.  வேறு உதாரணங்களைச் சொன்னாலும் அவனுக்கு ஐயப்பாடு தோன்றிவிடும்.  எதற்கும் மசியாமல் இருக்க எண்ணம் கொண்டு,  தல் சேர்ப்பது மட்டுமே தொழிற்பெயராக்கம் என்று முடித்துவிடுவான்.

தேடு> தேடல் ( இங்கு  ~அல்  விகுதி சேர்ந்தது).

இங்கு மாற்றம் ஒன்று ஏற்பட்டது.   தேடு என்ற சொல்லில் உள்ள உகரம் வீழ்ந்தது அல்லது இலக்கண நூல் கூறும் மொழியில் சொல்வதானால்  உகரம் கெட்டது.   தேட்+அல் என்று ஆகி  ட்+அ இரண்டும் இணைந்து "டல்" என்று முடிந்தது.   சொல்  தேடல் என்று அமைந்தது.  தே என்ற முதலெழுத்து மட்டுமே மாற வில்லை என்பதறிக.

இனித் தேடு என்பதனுடன் அம் விகுதி இணைய,

தேடு+அம் =  தேட்டம் என்றாகும்.   இங்கு டகர இரட்டிப்பு நிகழ்ந்தது,  தேடு+ அம் =  தே + ட் + ட்+ அம் என்று  உகரம் கெட்டு, இரண்டு டகர ஒற்றுக்கள் வந்து, இரண்டாவது டகர ஒற்று வரு விகுதி  முதலெழுத்து  அ-வுடன் ஒன்றி,  தே ட் ட ம் என்று திரிந்து " தேட்டம்" ஆயிற்று.

இது அம் விகுதியே இல்லாமல்,  தேடு > தேட்டு என்று நின்றுவிடும். அப்போதும் அது தொழிற்பெயரே.

தேடு > தேட்டு.

ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் என்பது ஒளவையின் பொன்மொழி.

ஒரு வினைப்பகுதி அவ்வாறே நின்று பெயராதலும் உண்டு. வந்துழிக் காண்க. இங்கு ஓர் உதாரணம் மட்டும் சொல்லப்படும்.  கண்டுகொள்க.
" அந்தத் திருடனை ஒரு தேடு தேடிவிட்டுத்தான் வந்தேன்"  என்பதில் தேடு என்பது "ஒரு" என்ற எண்ணிக்கை அடைவும் ஏற்றுப் பெயராய நின்றது காணலாம்.

நாம் அடுத்துக் காண்பது:வினையிலிருந்து பெயர்ச்சொல்: தலை  விரிதலும் சுருங்குதலும்.

மீண்டும் சந்திப்போம்.

பிழைகள் தோன்றின் அடுத்துத் திருத்தம் பெறும்.

வெள்ளி, 27 ஜூலை, 2018

மறைந்துவிட்ட சொல் வடிவங்கள் - நம்புதல் சொல் வடிவம்.

இறையுண்மை ஒப்பி ஒழுகுவோர் கெடுவதில்லை என்பது மறைகளின் தீர்ப்பு என்பர். உண்மைதான். அதற்குப் பலன் இருப்பதால்.

ஒருவர் இறைவன் உள்ளான் என்னும்போது நம்புவதென்பது நாமும் அக்கருத்தினுக்கு உடன்படுவதாகும்.  உடன்படவே,  அவர் கருத்து நம் கருத்தாகி விடுகிறது.  நம்பவில்லை என்றால் அவர் கருத்து அவருடன்; நம் கருத்து நம்முடன் இருந்துவிடும்.

அவர் கருத்து நம் கருத்தாகவே அது  நம்புவதாகிறது.  அதாவது நம் கருத்தாகிறது. நாம் என்பது பன்மை.  இது தன்மைப் பன்மையாகும்.

அவர் கருத்து - நம் கருத்து.  இதில் நம் என்ற சொல் எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

நம் >  நம்பு > நம்புதல்.

நம்புதலாவது நம் கருத்தாதல்.

நம் என்பது பன்மை வேற்றுமை வடிவாயினும் அது பு என்னும் வினையாக்க விகுதிபெற்று  நம்பு என்றானபின் அது பன்மையாய் நீடிக்கவில்லை. வெறுமனே ஒரு வினைச்சொல்லாக்கம் பெறுகின்றதென்பதை அறிக.

நாம் என்னும் எழுவாய் வடிவம் நம் என்று வேற்றுமை வடிவம் கொள்ளுதல்போல்  நான் என்னும் சொல் இன்றைய மொழிநிலையில் என் என்று வேற்றுமை வடிவு கொள்கின்றது.

நான் என் தொலைந்த பணப்பையைக் கண்டுபிடித்துவிட்டேன்.

நான் -  என்.   இது  நாம் - நம் என்பதிலிருந்து வடிவவேறுபாடு உடையதாய் இருப்பதை அறியவும்.

நாம் > நம் என்பதுபோல் நான் > நன் என்றன்றோ வருதல் வேண்டும்?  அப்படி வரவில்லையாதலின் முறைமாறியுள்ளது.

என் என்று வருவதாயின் அதன் எழுவாய் வடிவம் ஏன் என்றிருத்தல் வேண்டும்.  ஆனால் இந்த ஏன் என்பது இன்னும் வாழ்வுடையதாய் உள்ளது.
வந்தேன் என்பதில் ஏன் பின்னொட்டாய் உள்ளது காண்க.

எனவே: 

நான் > நன்;   ஏன் > என்.  நிரல்பொருத்தம் உள்ள வடிவங்கள்.

நன் என்ற வேற்றுமை வடிவமும் ஏன் என்ற வினாவல்லாத எழுவாய் வடிவமும் மொழிவரலாற்றின் வெள்ள ஓட்டத்தில் ஒழிந்துபோயின,

நான் ஒரு வண்டி வைத்துள்ளேன்;
அது நன் வண்டி என்பதே  பழங்காலத் தமிழ் என்பதை ஆய்வின்மூலம் மீட்டுருவாக்கம் செய்யலாம் என்பதை அறிக.

நான்  - நன் ;  ஏன் - என் என்பன முறையே எழுவாய் மற்றும் வேற்றுமை வடிவங்கள்.

நம்+பு > நம்பு என்பதில் பு இணைத்து வினைப்படுத்தியதுபோலவே   நன்+பு = நன்பு என்று வினைப்படுத்தி.  அது பின் நம்பு என்று திரிந்தது  எனினும் அதுவும் ஏற்புடைத்தே என்று கருதுக.

இவை மறைந்துபோன சொற்களாதலின் மீட்டுருவாக்கலாமே அன்றி நூல்களில் காணவியலா எனல்  அறிந்துகொள்வோம். இவற்றிற் சில ஆய்வு முடிவுகள் ஏனைத் தமிழறிஞர் ஆய்வுகளுடன் இயைபு உடையவாகும்,


புதன், 25 ஜூலை, 2018

அணையுடைந்து பெருஞ்சேதம்,

அணையுடைந்து கரையழிந்து  மக்களுமே பலியாகினார்
துணையிழந்தும் உயிரிழந்தும் பொருளழிந்தும் பலர்வாடினார்
இணைமொழிய ஏதுமில்லாப் பெருந்துயரே  இலாவோசிலே
புணையிலராய் அலைக்கழிந்தார்   பொதுக்குடிகட்  கெம்கணீரே.

செய்தி காண்க:
http://www.asiaone.com/asia/hundreds-missing-several-dead-after-laos-dam-collapses

நம்புதல் : எப்படி அமைந்தது?

எப்போதும் பல கருத்துக்களைக் கூறிக்கொண்டே இருக்கலாம்,  அதிகமாகக் கூறினாலும் பயனில்லை.  ஏனென்றால் அதிகம் தின்றதுபோல் திணறல் ஏற்படும்.

இப்போது ஒரு கேள்வி. சிவமாலாவுடன் உரையாடுங்கள்.

நம்புதல் என்ற சொல் எப்படி ஏற்பட்டது?

அதன் அடிச்சொல் என்ன?

இதைக் கூறுங்கள்.

Please use the comments coloumn.

செவ்வாய், 24 ஜூலை, 2018

குடு> குடும்பம்: மற்றும் ழகர டகர ளகர பரிமாற்றச் சொல்லுறவு.

இன்று நாம் தெரிந்துவைத்துள்ள சில நெறிமுறைகளை மறு ஆய்வு செய்து உறுதிப்படுத்திக்கொள்வோம்.

கொள் என்பது கொழு என்று  ளகர ஒற்று ழுகரமாக மாறுவதுடைத்தென்பதை முன்னர் அறிந்து இன்புற்றோம்.

கொள் >  கொழு.

கொழுப்பு உடலில் ஏற்படும்போது,  திட்பமான நெய்யை உடலானது கொண்டுவைத்துக்கொள்கிறது.

கொள் > கொண்டு.  திட்பநெய்யை உடல் கொள்கிறது. அப்படிக் கொள்ளப்படுவதே கொழுப்பு.

ஒரு பெண்ணைக் கொள்பவன் -  அதாவது மனைவியாய்க் கொள்பவனே கொழுநன்.  ( கொழுந்தன் என்பது அதிலிருந்து வருவதே என்றாலும் இன்னொரு சொல்).

கொள் >( கொள்நன் )> கொழுநன்.

ஒரு செடி இளம் இலைகளைத்  தன்னில் வளர்க்கின்றது.  ஒவ்வோர்  இள   இலையையம் அச்செடி கொள்வதால் அது கொழுந்து ஆகிறது. இங்கு கொள்வதாவது வளர்த்துக் கொள்ளுதல்.

கொள் கொழு > கொழுந்து.

தன் புருடனுக்கு இளையவனைக் கொண்டிருக்கின்றபடியால் அவன் அவளுக்குக் கொழுந்தன் ஆகிறான்.

கொள் > கொழு > கொழுந்தன்.

ளகர ஒற்றில் முடிந்த சொல் ழுகர இறுதி பெறும். இதை மேலே கண்டோம்.

ஆனால் சில சொற்களில் அது ழுகரத்தில் முடியாமல் டுகரத்தில் முடியும்.
இப்படிச் சொல்கையில் ழகர டகர பரிமாற்றத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பாழை >  பாடை  (பாஷை).
வாழகை >  வாடகை  ( வாழ்தலுக்கான கூலி).

டுகரத்தில் முடிவன:

பள் > படு.   (பள்ளம் > படுகை).
நீள் > நீடு.  ( நெட்டிமை).   நீடு வாழ்க என்பதில் பொருள் அறிக.

நீடு +அம் =  நீட்டம்.

குள் என்பது ஓர் அடிச்சொல்.  அது குடு என்று திரியும்.

மக்கள் தனித்தனியாக இருந்தால் பரவலாக இருப்பர்; அப்போது அதிக இடம் எடுத்துக்கொள்வர் என்பது உங்களுக்குத் தெரியும்.   ஒரு குறுகிய இடத்தில் பலர் இருந்தால் அவர்கள் எடுத்துக்கொள்ளும் இடம் சிறியதாகவே இருக்கும்.
அப்போது அவர்கள்  கூடி இருக்கிறார்கள் என்று பொருள்.

குடும்பம். குடி என்பதெல்லாம் சிறிய இடத்தில் பலர் இருப்பதைக் காட்டுகிறது.
சிறிய இடம்கொண்டு பலர் உளராவதுதான் கூடியிருத்தல்..  இது இடம்  ஆள் தொகை உறழ்வுக் கருத்தாகும்.

குள் > குடு

குடு > குடி.
குடு > குடும்பு.   குடும்பு> குடும்பம்.
குடு > கூடு.  (முதெலெழுத்து நீள்வது).
குடு >கூடு > கூட்டம்.
கூடு >  கூட்டு.

குள் > குடு:    குள் > குழு.      குடு> குழு.   ழு>டு,

ளகர டகர ழகரப் பரிமாற்றம்.  அறிவீர்.

பிழைத் திருத்தம் பின்
.

தோன்றும் பிழைகள்

நம் இடுகைகளில் நாங்கள் அறியாமலே பல பிழைகள் ஏற்பட்டுவிடுகின்றன.
இவற்றுக்கான தோற்றுவாய்கள் ஆவன:

1.  எங்கள் சொந்த அச்சுப் பிழைகள்.
2, கணினியில் ஒரு மாதிரியும் இடுகையில் வேறு மாதியும் தெரிவது,   (  இது கள்ள மென்பொருளால்?)
3. தன் திருத்தம் :  நாம் பயன்படுத்தும்  மென்பொருள் சில வரைவுகளை மாற்றிவிடுகிறது.

 என் க  என்று எழுதினால் எங்க என்று வந்துவிடுகிறது,
தன் கை என்பது தங்கை என்று ஆகிறது.

இதனால் இடைவெளி விட்டு அச்சு செய்யவேண்டியுள்ளது, இல்லாவிட்டால் மாறிவிடும்.

4.  வேண்டாத இடங்களில் புள்ளி வருதல்.
     வேண்டிய இடங்களில் புள்ளி போய்விடுகிறது.
இவை இடுகை வெளியிட்ட பின் வருபவை.

5  ஓரிடத்தில் அச்சு செய்வது இன்னோர் இடத்தில் போய்ப் படிந்துவிடுதல்.
தேடிக்கண்டுபிடிக்க வேண்டியுள்ளது,

6  எழுத்து அமைப்பில் வரிகளில் இன்ன பிற தோற்ற அமைப்பில் ஏற்படும் முறிவுகள்.

7 அழிக்கப்பட்டவை மறுதோற்றம் பெற்று வெளிவருவது.  இது எப்போதாவது.

8 இங்கு குறிக்காத பிற.

நீங்கள் கண்டுபிடித்தால் எங்களுக்குத் தெரிவிக்கவும்.

திங்கள், 23 ஜூலை, 2018

நம்பிக்கை வாக்கெடுப்பில் மோடி வெற்றிக்கொடி

வாக்கெடுப்பில் நம்பிக்கை மேவி நிற்க
வானுயர்ந்த ஒப்புதலைப் பெற்று  வென்றார்;
தாக்கிமொழி பேசிடுவோர் தலைக விழ்ந்தார்
தக்கதிது மோடிபெற்றார் தரணி மேலே;
ஆக்கமென நாட்டிற்குச் செய்த தொண்டே
அத்தனையும் காட்டுமிதே  ஆடி  ஆகும்
தூக்கமதில் நாட்கழித்த அரசு  முன்னாள்
தொண்டெனவே மிண்டிஎழும் அரசு  இந்நாள்;

பதவியென்ற ஆசைதலைக் குள்ளே பாய்ந்து
பாரினிலே பற்பலவும்  பகரும் பான்மை
உதவியென்றும் ஒப்புவதற் கில்லை அம்மா;
ஒதுக்கிவிட இயலாதார் இழிந்த வாய்கள்
பதமிழந்து மொழிவனவே பாவம் கீழோர்;
பார்த்திருப்போம் காத்திருப்போம் திருந்து வாரே
நிதம்காணும் உண்மைகளை மறைக்க  லாமோ
நேர்மைபெறல் எதிர்தரப்புக் கடனு மாமே.

குலதெயவமும் இட்டதெய்வமும்.

பண்டைக் காலத்தில் அம்மன் வழிபாடு எங்கும் பரந்து கிடந்தது. இதனால் மூழ்கிப்போன குமரிக்கண்டத்திற்கும்   "குமரி" எங்கிற பெயர் ஏற்பட்டது. அங்கு வாழ்ந்த பெருந்தொகையினர் அவைவரும் குமரித் தெயவத்தை வணங்கியோராய் இருந்தனர்.

அது கடலுள் சென்று மறைந்து அடுத்திருந்த நிலப்பரப்பிற் குடியேறிவிட்ட காலத்திலும் குமரித் தெய்வத்தினை மறந்திடாமல் அங்கிருந்த நிலமுனைக்குக் "குமரிமுனை" என்று பெயரிட்டுக் கோயிலெழுப்பி வணங்கினர். பழமை மறவாதோர் நம் தமிழரும்  தமிழரின்  உடன்பிறப்பாளர்களுமாம்.

பஃறுளியாற்றில் ஆற்றுவெள்ளம் அலைகள் துள்ளும்படியாக ஓடிக்கொண்டிருந்தது என்பது சொல்லாய்வில் நாம் அறிந்தது ஆகும்.   பஃறுளி என்பதை பிரித்து நோக்கினால்  பல்+துளி என்று இருசிறு சொற்கள் எழுதரும்.
இதில் பல் என்பது ஆறு அகலமுடையதென்பதைக் காட்டுகிறது. பல்>பரு>பர> பார் என்ற திரிபடிகள் பருமையையும் பரப்பையும் ஒரே சமயத்துத் தெளிவிக்கவல்லவை ஆம்.  துளி என்பது சிறு திவலையையும் குறிக்குமதே பொழுதில்,  துள்ளுதல் என்ற செயல்வினைக்கும்  இடன் தருகிறது. வினைகள் இருவகை : அசைவு குறிப்பனவும் அசைவின்மை தெளிவிப்பவையுமாம்.  ப்ஃறுளியில்  ஆற்றலைகள் மிகுந்திருந்தன. நீர் துள்ளிக் சென்றது.  பல் துள்ளி என்பது இடைக்குறைந்தாலும்   துள் > துளி;  துள் > துள்ளி என்றவாறு
  விரித்துணர்ந்தாலும்  நீரின்  அடைவெல்லையைத் தொட்டுவிடுவீர்.

குமரி நிலப்பரப்ப்பில் மலையொன்றும் இருந்தது.  மகிழ்வுறுத்தும் மலையுச்சியு மிருந்ததென்பதனை :  "குமரிக்கோடு": என்பதாம் வரணனை நமக்குத் தெரியக்காட்டுவதாகிறது.

அம்மன் வழிபாடு மிக்கப் பழையது ஆகுமென் றறிக .

நாம் இட்டப்பட்டு வணங்குவது இட்ட தெய்வம்.  இட்டமாவது  மனத்தை  இடுவது. உங்கள் கூட்டத்துக்கு உரியது  குலதெய்வம்.

கூட்டத்தை அடையாளம் கண்டுகொள்ளக் குலதெய்வம்  குறித்தல் போதாமையின்  பிற்காலத்தில் சாதிகள் தோன்றின போலும்,  இது ஆராய்வதற்கு உரியது,

Will be edited.  



சனி, 21 ஜூலை, 2018

ஒளிபொருந்திய முகம் - சொல் வதனம்.

வதனம் மதனம் என்பன மிக்க அழகாய் அமைந்த சொற்கள்.

இவை உண்மையில் செந்தமிழ் அல்ல என்று இன்று ஒதுக்குறவும் கூடிய சொற்கள்.

முதலின் யாம் முன்னரே விளக்கியுள்ள மதனம் என்னும் சொல்லை நுணுகி மீண்டும் ஆய்வோம்.

எண்ணம் நிறை மதனா  --- எழில் சேர்
ஓவியம் நீர் மதனா
பஞ்ச பாணன் நீரே என் மதனா
பாவை ரதி நானே

என்பது கண்ணதாசன் வரிகள்.  1951

மயங்குவது மது.  அதாவது நீங்கள் போதுமான  அளவு உட்கொண்டு விட்டால் ஒரு மயக்கம் தருவது.  உண்டால் மயங்குவது!!  இதில்  'யங்குவ' என்ற எழுத்துக்களை நீக்கிவிட்டால் மீதமிருப்பது மது.  இச்சொல் ஒரு இடைக்குறைச் சொல்.

இச்சொல்லை மயக்குத் தேறல் குடித்தவர்கள் தமக்குள் புழங்கி அதன்பின் அது பரவியிருக்கக் கூடும.

மதனன் என்பது:

மது > மதன் >  மதனன்  மதனி .

மது + அன்+  அன்  =  மதனன்
மது+ அன்+  இ  =  மதனி
மது + அன் =  மதன் .

மன்மதன் :  மன் -  நிலைபேறு ;  மதன்:  மயங்குதலைத் தருவோன் .

"இரதியும் மதனும் பவனி வரும் விழா  வசந்த விழா."

இடைநிலை அன் :  அன் இரட்டித்து வருகையில்  இடை வரவு சொல்லாக்க இடைநிலை என்று கொள்க ;  இறுதிநிலை அன் ,  விகுதி ஆண்பால் காட்டும்.
இரட்டிக்காமல் வருகையில் ஆண்பால் விகுதி ஆகும்.


ஓர் இடைக்குறையில் இடையில் உள்ள ஒன்றோ பலவோ எழுத்துக்கள் மறைந்து சொல் அமையும்.

தாமரை மலர்கள் தண்ணீரின்  மேலே கொஞ்சம் தலை நீட்டிக்கொண்டிருப்பதுபோல் இருந்தாலும் அவ்வப்போது  தண்ணீரால் கழுவப்படுபவை.  சில நீர்த்திவலைகள் அப்பூக்களின்  மேலும் நின்று அழகும் குளிர்ச்சியும் தரும்.  அதனால் தமிழர்கள் அதைப்  பழங்காலத்தில் கழுமலர் என்றனர்.  கழு = நீரால கழுவப்பெறும்  மலர் = பூ.   அப்புறம் கழுமலர் என்பதில் ழு-வை எடுத்துவிட அது கமல  ஆனாது.  பின் அம் விகுதி பெற்றுக்  கமலம் ஆனது.    இத்தகைய சொல்லமைப்புகள் எப்போதும்  நடைபெற்றுக் கொண்டுதான்  வந்தன. இந்தச் சொல் எங்கிருந்து கிட்டியது என்று  கடாவினவனுக்கு, மேலோகத்திலிருந்து கிட்டியது என்று சொல்ல, கேட்டவன் மடையன் ஆனான்.  சொந்தமாக ஆய்வு செய்யுங்கள்.

மடையன் என்றால் சோறுண்பவன்.  மடை = சோறு என்றும் பொருள்.

இடையிலோ முதலிலோ இறுதியிலோ நிற்கும் எழுத்துக்களை நீக்கிச் சொல்லை உண்டாக்கிக்கொள்ளலாம்.  பொருளழிவு இல்லாதிருக்குமாயின்,

இனி வதனம் என்ற சொல்லுக்கு வருவோம்.

வயங்குதல்:  ஒளிவீசுதல்.  ஒருமனிதனை வெளிச்சம் போட்டுக் காட்டிப்  பிறருக்கு அவனுடைய அடையாளத்தை ஈயும் உறுப்பு முகம்தான்.  முகத்தின் ஒளியே ஒளி.  ஒளியற்ற இருளில் யாரையும் கண்டுகொள்ள முடிவதில்லை. மிக்கப் பொருத்தமாக. முகமே வயங்குவது என்று முடிவு செய்துள்ளனர் நம் முன்னோர்.  வயங்குவது -   வது.  வயங்குவது என்பது தெளிதல், மிகுதல், விளங்குதல், நடத்தல் என்று பல பொருத்தமான பொருள்தரும் சொல்லாகும்.

வது > வது+அன்+அம் = வதனம்.  அன்: இடைநிலை /விகுதி;  அம்: விகுதி.

இது நல்ல பாடல்:

வதனமே சந்திர பிம்பமோ
மலர்ந்த ச............மோ

---- பாபநாசம் சிவன் எழுதிய பாட்டு.  முகத்தில் ஒளி இருக்கிறது என்பதை இப்பாடல் காட்டுகிறது.  முகத்தில் ஒளி இருப்பதாக அரபுமக்களும் கூறுகின்றனர். நூர் -  ஒளி.

வதனம் என்பது ஒளிமுகம்.

அந்திப்பெண்ணாளின் முகம் ஒளிமுகம் என்பர். பாரதிதாசன் உருவகம்.

உண்மையைச் சொன்னால் இப்படி அமைந்த சொற்கள் தொல்காப்பியனார் காலத்திலே இருந்தன.  தப்பு > தபு. ஒரு துறவி இவ்வுலகத் துன்பங்களிலிருந்து விடுபட்டுவிடுகிறான். மனைவியிடமிருந்தும்  தப்பி விடுகிறான்.  அவனுடைய தவத்தின் நோக்கம் உலகக் கட்டிலிருந்து தப்பித் தாம் அடையவேண்டியதை அடைவதுதான்.  தப்பு> தபு.  அப்புறம் ஒரு தல் தொழிற்பெயர் விகுதி சேர்த்துத்  தபுதல் என்ற சொல் அமைந்தது.  தபு+அம் = தபம்.  தபம்>தவம்: ப=வ போலி.

இது   இந்தச்சொல் அது அந்தச்சொல் என்று வாதமிட்டுக்கொண்டிருப்போனுக்கு  விளங்குவதில்லை.

அறிந்து மகிழ்க .

Some lines went missing after posting and this has been re-edited now.

வெள்ளி, 20 ஜூலை, 2018

பல்பொருள் ஒருசொல் அறிதல்.

ஒரே சொல் இருவேறு வகைகளில் அமைந்திருக்கக் கூடுமென்பதை நாம் நன்றாக மனத்தில் கொள்ளவேண்டும்.   அதாவது அது ஒரே வடிவில் முடியவேண்டும். இதை இலக்கணியர் "முடிபு" என்று கூறுவர். இதை எப்படி உணர்த்துவது என்றால், ஒரு மனிதனுக்கு எந்த நோயும் வரக்கூடும்.  புற்றுநோயால் இறந்தாலும் இறக்கக்கூடும். பாரியவாயுவினால்  மடியவும் கூடும். நோய்கள் வெவ்வேறு என்பது தவிர, முடிவது ஒரு மாதிரிதான்.  ஆகவே பல்வேறு நோய்கள் ஓர் முடிபு கொண்டன என்று இதனைக் குறிக்கலாம்.

தாமரை என்பது ஓர் அழகிய மலர்.  அது மலர்தான், அது ஒரு மிருகம் என்னும் விலங்கின் பெயர் அன்று   என்று கத்தி வாதிடக்கூடாது. 

தா = தாவுகின்ற;  மரை - மரை என்று குறிக்கப்படும் மான்வகை என்று ஏன் பொருள்கொள்ளக்கூடாது?  கொள்ளலாம்.  வாக்கியத்தில் என்ன பொருளில் கையாளப்பட்டிருக்கிறது என்று பார்க்கவேண்டும். அப்புறம்தான் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

நீ அப்பாவைக் கவனி என்பது   நீ உன் தகப்பனைக் கவனி என்பதாகவும்  நீ   அ = அந்த,  பா=  பாட்டினைக்  கவனி என்பதாகவும் இருக்கலாமே.

அப்பா :  அப்பன் என்ற எழுவாய் வடிவத்தின் விளிவடிவம்.
அப்பா :  அந்தப்  பாட்டு!

காதலர் இருவரும் பாவற்றுப் பிரிந்தனர்:  இப்படிச் சொன்னால் அந்த இருவரும் தொடர்பற்றுப் பிரிந்தனர் என்று பொருள்.  பழந்தமிழ்ப் பாடலாக இருந்தால் எந்தப் பொருளில் சொல் வந்துள்ளது என்று அறியவேண்டியுள்ளது.

வந்த பாவினை வதைத்துக் கொன்றான் என்றால் பாம்பினை வதம் செய்துவிட்டான் என்று பொருள்.   பாம்பு என்பதன் அடிச்சொல்லும் பா என்பதுதான்.  காரணம் பாம்பு என்பதில்  பா என்பதுதான் அடிச்சொல்.  பு என்பது விகுதி.  இந்த சொல்மிகுதியாகிய விகுதியைப் போக்கினால் மீதமுள்ளது வெறும் பா மட்டுமே.

பா> பாய்> பாம்பு    (பாய்+ம்+பு = பாய்ம்பு > பாம்பு)   யகர ஒற்று கெட்டது. 1

பா என்பது பாயைக் கூடக் குறிக்கலாம்.  பெரியவருக்குப் பா போடு உட்காரட்டும் என்று பேச்சில் கூறுவர். இது பாய் என்பதன் இறுதி யகர ஒற்று மறைந்து நின்றது. இது கடைக்குறை எனினும் ஆகும்.

பாழ் என்ற சொல்லும் பரவலைக் குறிக்கும்.  அதாவது பலவிதச் செடி கொடிகள் பரவிப் பயனற்றுக் கிடக்கும் இடத்தைப் பாழ் என்போம்.  பாழிடம். பலவித அழுக்கும் பரவிக் கிடக்கும் கிணறு பாழ்ங்கிணறு.  பலவிதக் கெடுதலான எண்ணங்களும் செயல்களும் பரவிக் கிடக்கும் மனத்தவன் பாவி.  அவன் செயல் பாவம். பாவம் பரவுவது.  அது உடலின் மூலமாய் ஆன்மாவிலும் பரவிக் கெடுக்கிறது.2

பா> பாழ் > பாழ்வு > பாழ்வம் > பாவம்.  (பரவிக் கெடுக்கும் கெடுதல்).

வாழ்> வாழ்த்து > வாழ்த்தியம் > வாத்தியம்.    வாழ்த்திசைக்குழு. இப்போது இறந்தவீட்டுக்கு வாசித்தாலும் வாத்தியம்தான். பொருள்விரிந்தது.

ழகர ஒற்று மறைவு.

மீண்டும் சந்திப்போம்
-------------------------------


அடிக்குறிப்புகள்:
1  முனைவர்: மு வரதராசனார், ஆய்வு.  இதுவும் ஏற்புடைத்தே.
2  மறைமலையடிகள் ஆய்வு முடிவு.  இது ஒப்புதற்குரிய முடிவு ஆகும்.


வதந்தி சொல்லமைப்பு

தந்தி என்ற சொல்லைப் பற்றி நன்`கு தெரிந்துகொண்டிருக்கிறீர்கள்.

அதை ஈராண்டுகட்குமுன் எழுதியிருந்தோம்.  இங்கு:

இப்போது வதந்தி என்ற சொல்லை அறிவோம்.

வதந்தி என்பது ஒருவனால் அல்லது ஒருத்தியால் கொண்டுவரப்பட்டு, இன்னொருத்தனுக்குத் தெரியவருவதாகும்.  ஒருவன் இன்னொருவன் என்பதைப் பன்மையிலும் எடுத்துக்கொள்ளவேண்டும்; ஆண்பாலுக்குக் கூறுவது இதுபோலும் காரியங்களில் பெண்பாலுக்கும் பொருந்துவதே.

வ:  வருபவன் அல்லது வந்தவன்

த:  தருகிறான் ஒரு செய்தி.

இப்படியே அது பல மடிகள் செல்லுகின்றது.   மாறிச்  செல்லச்செல்ல வதந்தி ஆகிவிடுகிறது.

ஆனால் உண்மையும் இப்படிப் பரவுவதுண்டு.  ஒன்று வதந்தியா அல்லது உண்மைச்செய்தியா என்பதை  செய்தியின் வாய்மை கொண்டே தீர்மானிக்கமுடியும்.

பெரும்பாலும் வதந்திகள் வருமிடத்து உண்மைச்செய்திகள் வருவதற்கும் எப்போதுமுள்ள வழிகள் இருக்கும். அத்தகைய ஏற்புடைய வழிகளில் வராமல் வதந்தி என்பது அஃது இல்லாத வழியில் வருவதாகும்.  எடுத்துக்காட்டு: அரண்மனை முரசறைவோர் ஏற்புடைய வழியினர் ஆவர்.

வருபவன் என்பது போகிறவனையும் உள்ளடக்கும்.  இஃது வழக்கு ஆகும்.

வ: வருவோன் வந்து  த: தரும்  செய்தி.

ஓடுகிறவன் பாடிவிட்டுப் போவான் என்ற சிற்றூர்மொழியில்  ஓடுகிறவன் என்ற சொல்லாட்சியைக் கவனிக்கவும்.  அதுபோலவே வருவோனுமாவான்.

வ+த+ தி(விகுதி) =  வதத்தி > வதந்தி.   இது மெலித்தலாகும்.  வலிக்கும்வழி வலித்தலும் மெலிக்கும்வழி மெலித்தலும் என்பது உத்தியாகும்.

வருவோன் தரும் அதிகாரப் பற்றற்ற செய்தி  வதந்தி.  வ, த, மற்றும் விகுதி: தி.

அறிக. மகிழ்க
 திருத்தம் பின்


சிவன்முன் ( விளக்கம்).

சென்ற இடுகையின் தொடர்ச்சி:  http://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_56.html


சென்ற இடுகையிலிருந்து தொடர்வோம்:

http://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_56.html 


பாட்டு: உரை வடிவில்:


பிரம்மனிந்   திரனைச் சார்ந்து  பேச்சிலா விரதம்    பூண்டும் உரம்நிகர் பத்தி மூண்டும் உலகிதை உணர்ந்  தரன்தன் திறம்திகழ் சிவமாலைதான்
சேர்ந்தவண் பணிந்து  நின்றார்;
வரம்தரப் பெற்றார் ; 
எற்கே  வந்த  கனாவே நேற்றே.

பொருளுரை:

பிரம்மன்  இந்திரனைச் சார்ந்து ----  பிரம்ம தேவனானவன் இந்திரனிடத்துச் சென்று சேர்ந்து;
உரம் நிகர் பத்தி பூண்டு  ---  ஆன்மாவுக்கு உரம் போன்ற  பக்தியினை
மேற்கொண்டு; 
பேச்சிலா விரதம் மூண்டும்  ---  மோனம் என்னும் விரத்தத்தை 
அவனுடன்  தொடங்கியும்;
உலகிதை உணர்ந்து ----   இவ்வுலகில்  மக்கள் போற்றுதலை அறிந்து;

அரன் தன் திறம் திகழ் சிவமாலைதான் சேர்ந்து  ---சிவனாரின் வல்லமை விளங்கும் சிவமாலையை அவர்கள் பார்வை அடையும்படியாக;

அவண் --- அங்கு சிவபெருமானின் முன்;

பணிந்து நின்றார் ---  வணங்கி நின்றனர்;

வரம் தரப் பெற்றார் ---  அதனால் சிவனின் வரம் பெற்றனர்;

நேற்றே ---  இன்று முன் நாளில்;

எற்கே  வந்த கனாவே    --- இது எனக்கே வந்த கனா ஆகும்.



அடிமுடி காணாப் பெரியோனாகிய சிவத்தையே பிற தெய்வங்களும்
வணங்கலுற்றன.

வியாழன், 19 ஜூலை, 2018

சிவன்முன் பிரம்மன் இந்திரன் கனவில்

 இப்பாடல் என் கனாவைக் கூறுவது.
பிரம்மனும் இந்திரனும் சிவனின் மாலையை
வந்து வணங்கினர். சிவனின் அருள்பெற்றனர்.


அறுசீர் விருத்தம்.


பிரம்மனிந்   திரனைச் சார்ந்து
பேச்சிலா விரதம்    பூண்டும் 
உரம்நிகர் பத்தி மூண்டும் 
உலகிதை உணர்ந்த    ரன்தன்
திறம்திகழ் சிவமா    லைதான்
சேர்ந்தவண் பணிந்து  நின்றார்
வரம்தரப் பெற்றார்  எற்கே
வந்தக  னாவே நேற்றே.


எற்கே =  எனக்கே.
உணர்ந்த   ரன்தன்=  உணர்ந்து அரன் தன்

முழுவிளக்கம்  இங்குக் காணவும்:

http://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_20.html 

முன்மைக் கருத்துச் சொற்கள். அடி: மு>மூ

மனிதனுக்கு விளக்கமும் ஒளியும் தருவது அவனது முகமே.  இதனால் முகத்துக்கு வதனம் என்ற பெயரும் புனையப்பட்டது.

முகம் என்ற சொல்லும் ஒரு "சொல்லியல் வரலாறு" உடையதுதான்.

முகம் என்பது தலையின் முன்பகுதியில் அமைந்திருப்பது.

முன்பகுதிக்குரிய அல்லது அது குறிக்கும் அடிச்சொல் தமிழில் 'மு"  ஆகும்.

இந்த அடியிலிருந்து ஒரு சொல் தொடங்குமாயின் அது தமிழ்ச்சொல்லாகவே இருக்கவேண்டியது  கட்டாயம்.  வேறு வழியில் சொல்லப்படுவனவெல்லாம்  பிழைபட்டவை; சொல்லியல் உணராத படித்தவனால் சொல்லப்பட்டிருத்தல் கூடும்.

இப்போது இந்த "மு" என்னும் அடியினுடன் தொடர்புடைய அல்லது அதனின்றும் நீண்டு வளர்ந்த சொற்களைக் காண்போம்,

மு> ,முன் > முன்னுதல்.  ஒரு வினைச்சொல் ஆக்கம் இது.   0ன் என்பதனுடன் ஓர் உகரம் இணைந்தது; சொல் அமைந்தது. தல் விகுதி. உகரம் சாரியை என்`க.

முன் > முன்னர்:  அல் விகுதி ( மிகுதி )

முன் > முன்னம்

முன் > முன்னிடல்

முன் >  முன்னிரை   இது முன்+ நிரை.

முன்னிலை.  முன்னிற்றல்;

முன்னீடு = தலைமை. இன்னும் பல பொருள்

முன் > முன்னுரை.

முன் > முன்னேற்றம்.

முன் >  முன்னை      முன்> முன்னோன்.

மு > முது.  து விகுதி.

முது> மூது  > மூதறிவு.   முதிர்ந்த அறிவு.


மு என்ற அடி நீள்கிறது.

மு >  மூ   ( நெடிலானது).   மூத்தல்.  இது தல் விகுதி பெற்றது.

மூ > மூப்பு.   பு விகுதி.
மூப்பு > மூப்பன்:    மூத்த அதிகாரி.

மூ >  மூல்.   அமைப்பினால், தொடக்கத்தினால், உருவாக்கத்தினால், காலத்தால் , செயல்பாட்டினால், பயன்பாட்டினால்  இன்னும் பல வகைகளில் முன்னிருப்பதை இந்த மூல் என்பது குறிக்கும்.

மூல் + அம் =  மூலம்.
மூல் > மூலி > மூலிகை.     இ, கை என்பன நீட்சிகள்.  இத்தகைய நீட்சிகளைத் தாம் விகுதிகள் என்.கிறோம்.  மிகுதி > விகுதி.  மூல் என்ற அடி மிகுந்து விகுதி ஆகிறது.  மி> வி திரிபு  மிஞ்சு > விஞ்சு  போலி போலவாகும்.  இ  மற்றும் கை என்ற விகுதிகளை சேர்த்து இகை இறுதி எனினும் அதனால் தவறில்லை.

மூ > மூஞ்சி:   முன்னிருப்புக் கருத்துடைய சொல்.   முகம்.

மூ>  மூங்கு:   ஒருவகைப் பருப்பு.  முனைக் குறி உடையது. பிற விதைகளுக்கும் இக்குறிபோல் இருப்பினும் நாற்காலி என்ற சொல்போல் இது
காரண இடுகுறி.

மூ > மூக்கு.

 இன்னொரு நாள் தொடர்வோம்.  மு என்ற அடியிற் பிறந்த சொற்கள் மிகப்பலவாகும். விடுபட்டவை போக பிற கண்டு இன்புறுக.

 

புதன், 18 ஜூலை, 2018

ஆரிய அறிவாளிகளும் அறிவில்லாதவர்களும்

இந்தியாவிற்குள் அவ்வப்போது வெளிநாட்டுக்காரர்கள் வந்து தங்கியுள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் நிகழ்ந்தவைகளாகக் கூறப்படுவனவற்றை ஆராயுங்கால் அப்படி வந்த வெளிநாட்டினர் திரும்பிச் செல்வதற்கு அக்காலத்தில் பெரிய வசதிகள் ஏதும் இல்லை என்பது எவனும் சொல்லிக்கொடுக்காமலே கேட்பவனுக்குப் புரியவேண்டும்.  எடுத்துக்காட்டாக சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்து சுற்றிபார்த்துச் சென்றவர்களைக் குறிப்பிடலாம்.  இத்தகைய யாத்திரைகள் எளியனவாய் இருக்கவில்லை.  இதன்  காரணமாகவும் இங்கிருந்த பெண்டிரை விரும்பியது முதலான நிகழ்வுகளாலும் பலர் தங்கிக் கலந்துள்ளனர். கலவாதார் வாழ்ந்த அதே குடிப்பெயரை மேற்கொண்டு கலந்தாரும் மாறா இயற்கைப் போர்வை கவித்துக்கொண்டு இதுநாள்காறும் இருந்துவந்துள்ளனர் என்பதே உண்மை.

ஆரியர் என்று யாரும் வரவல்லை --  அதாவது இந்தியாவிற்கு மேற்றிசையிலிருந்து ---  என்பது தெளிவு.  வெள்ளிய தோலுடையவர்கள் வந்து கலந்திருக்கக்கூடும். இவர்கள் ஆரியர் அல்லர்.  வந்தவர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து பிறழ்ச்சி உண்டாக்குதற்பொருட்டுத் தொன்மங்களையும் பிற நூல்களையும் வரைந்திலர். அப்போதிருந்த நிலையில் யார் எங்கு வேண்டுமானாலும் வீடுகட்டிக்கொண்டு வாழலாம்.

ஒரு கூட்டத்தினருக்கும் இன்னொரு கூட்டத்தினருக்கும் இடையில் சண்டைகள் முதலியன ஏற்படுவது இயற்கை.  உணவுப் பொருள்களைப் பகிர்ந்துகொள்ள மறுப்பதாலோ தம் வீட்டுப் பெண்பிள்ளைகளை மணஞ்செய்து கொடுக்க மறுப்பதாலோ சண்டைகள் ஏற்படுவது இயற்கையாகும். இவைபோல்வன  நடவாத மனிதக்குழுக்கள் உலகிலே இல்லை என்பது சிந்தித்தும் செய்திகள் வாயிலாகவும்  யாரும் உணரக்கூடியதே ஆகும்.

வந்து தங்கியவர்கள் தாம் தாக்கப்பட்ட காலை ஆயுதமேந்தி எதிர்த்திருக்கலாம்.   இது தெருச்சண்டைகள் போன்றவையே அன்றி ஒரு போர் என்னுமளவுக்குத் திட்டமிட்ட கட்டுக்கோப்பான படைநடத்துதல் அல்ல.
ஆரியர் என்போர் அறிவாளிகள் என்று அச்சொல்லால் தம்மைக் குறித்துக்கொண்டனர் என்பர். தங்கிய விடத்து நடைபெறும் திட்டமிடாத சண்டைகளில் ஒரு சாரார் தம்மை அறிவாளிகள் என்று கூறிக்கொள்ள எந்தக் காரணமும் இல்லை. மற்றவர்கள் அறிவுகெட்டவர்கள் அல்ல்ர். பெரும்பாலும் அறிவாளிகள் சண்டைக்குப் போகமாட்டார்கள். எழும் இடர்களைத் தம் அறிவின் துணையால் தீர்க்க முனைவோர் அவர்கள்.  மேலும் வெள்ளைக்காரன் ஆராய்ச்சியில், வந்தவர்கள்தாம் தங்களை அறிவாளிகள் என்று கூறிக்கொண்டார்கள் என்பது எப்படித் தெரியும்.   இருந்தவர்கள் தங்களை அறிவாளிகள் என்று கூறிக்கொள்ளவே வாய்ப்புகள் அதிகம். ஒரு வளமிக்க மொழியும் எழுதுவதற்கு எழுத்துமுறைகளும் சுவடிகளும் வைத்திருந்தவர்கள் இருந்தவர்கள் அல்லரோ?  வந்தவர்களுக்கு எழுத்துக்கள் இல்லை என்றும், அவர்கள் அரமாயிக் முதலிய மொழிகளில் எழுதினர் என்றும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். யார்யார் எந்தெந்த மொழிகள் பேசினர் என்பதற்கும் ஆதாரம் எதுவுமில்லை!

ஆரியர் யார்? வந்தவர்களா? இருந்தவர்களா?  சிரியாவிலிருந்து வந்தவர்களே அசுரர்கள் என்று குறிக்கப்பட்டனர்  என்றும் சிலர் கூறியுள்ளனர். இவையெல்லாம் உட்புகுந்து நோட்டமிட்டால் இனி வீழ்ச்சியடையக்கூடிய வாதங்கள் என்பது  மேலும் சொல்லாமலே புரியக்கூடியதாகும்.


தொடர்ந்து வாசிக்க:=

http://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_27.html

http://sivamaalaa.blogspot.com/2018/02/blog-post.html 


தாயித்துக்காரர்களும் செத்த வீட்டுத் தீட்டும்.

மந்திரவாதிகள் மந்திரங்களைச் சொல்லி  அவற்றின் மூலமாகத் தாம் விரும்பியதை அடையமுடியும் என்று சிலர் நம்புகின்றனர்.  ஆனால் பலர் நம்புவதில்லை என்று தெரிகிறது, I am talking about occult science. Not mantras pronounced in religious events . எனினும் அலுவலகங்களுக்குள் வேலை பார்ப்பவர்கள் தங்களுக்குள் கலாய்த்துக்கொண்டு  அக்கலகம் யாரோ மந்திரம் செய்துவிட்டதனால்தான் வந்துற்றது என்று சொல்லிக்கொள்வதும் நம் காதுகளில் வீழாமலில்லை.

உண்மையா?  மந்திரங்களுக்கு அவவள வு ஆற்றலுண்டோ என்று சரிந்துவிடுகிறவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

மந்திரங்களில் ஈடுபடுவதை  " மாந்த்ரீகம்" என்ற  அயற்சொல் குறிக்கின்றது. மலேசியாவிலுள்ள ஒரு பெரிய அரச அதிகாரிகூட மாந்திரீக வேலைகளின் மூலமாக தமக்குச் சாதகமான நிலைகளை அவ்வப்போது அடைந்துவந்தார் என்று தாளிகைகளின் மூலமாக அறிகின்றோம். (இது உடனிகழ்வு காரணமாக இருக்கலாம் . Co-incidence cannot be ruled out. காக்கை உட்காரப் பனம்பழம் விழ  என்பது பழமொழி .)

மந்திரம் செய்துகொண்டவர்கள் தாயித்து முதலியவை அணிந்துகொள்வது வழக்கம்.

சமீபத்தில் ஒரு இறப்புக்குப் போகவேண்டிய நிலை ஏற்பட்டது.   அங்கு இறந்தவருக்கு மாலை போடுவதற்கு நல்ல பெரிய மாலையும் உதிரிப்பூக்களும் தேவைப்பட்டன.  பூக்கடைகளுடன் தொடர்புடைய ஓர் அம்மையாரை அணுகினோம். எங்கள் தேவைகளைத் தெரிவித்தோம்.  அவரும் நாலு மணி மாலை அங்கு பூக்களுடன் வந்துவிடுவேன்,  காத்திருங்கள் என்று சொல்லி எங்கள் கவலையைத் தவிர்த்தார்.

மணி நாலு  ஆயிற்று. அவரைக் காணோம்.  தொலைபேசிகளைப் பயன்படுத்தியும் அவரை எட்ட முடியவில்லை. அப்புறம் பக்கத்துக் கடைக்குச் சென்று சில சிறிய மாலைகளை வாங்கிக் கொணர்ந்து காரியத்தை முடித்தோம்,

இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது ஒருவர் சொன்னார்:  நாங்கள் கேட்டுக்கொண்ட அந்த அம்மையார் தாயித்து அணிந்திருக்கிறார் என்றும் இறந்த வீடுகளுக்கு இதுபோன்ற உதவிகள் செய்யமாட்டார் என்றும் சொன்னார்கள்.  செய்தால் மந்திர ஆற்றல் போய்விடுமாம். அதனால் அவர் வசதியாகக் கம்பி நீட்டிவிட்டார் என்றார்கள்.

இப்படியும் இருக்கிறதா என்று பேசிக்கொண்டிருந்தவர்கள் வியந்தனர்.

இறந்த வீட்டுக்குப்போனால் தாயித்துக்குச் சக்தி இருக்காதாம்,

உலகில் நம்பிக்கைகளுக்கு அளவில்லை.
பிழைத்திருத்தம் பின்.

நம்பிக்கை எத்தகைய தொழிற்பெயர்?

இப்போது நம்பிக்கை என்ற சொல்லை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.

ஒரு வினையிலிருந்து அமைகின்ற பெயர்ச்சொல் -  தொழிற்பெயர் என்று நம் இலக்கணங்கள் கூறும்.  இதை வினைப்பெயர் என்று கூடப்  பெயரிட்டிருக்கலாம்.  ஆனால் வினையாலணையும் பெயர் என்று இன்னொரு வகை இருப்பதால் அதனோடு குழம்பிவிடாமல் இருக்க, இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். பெயரிடுங்கால் இதையும் கருத்தில்கொள்வது விழையத்தக்கதே, எனினும் வினைப்பெயர் என்றும் சொல்வதில் தவறில்லை என்று தோன்றுகிறது.  ஆனால் இங்கு தொழிற்பெயர் என்றே  சுட்டுவோம்.

நம்பு. நம்புதல் என்பன    வினைப்பகுதியும் வினையின் பெயருமாகும்.  எச்சவினைகளிலிருந்து பெயர்ச்சொற்கள் அமைதலானது மிகக் குறைவு ஆகும்.  அப்படி  அமைந்த பெயர்களை ஒரு முன் இடுகையில் குறிப்பிட்டிருந்தோம்.



இதுபற்றிய உரையாட்டினை மேற்கண்ட இடுகையில் கண்டு மகிழலாம்,  எடுத்துக்காட்டாக  வைத்தியம் என்ற சொல்  வைத்து என்ற எச்சவினையினின்றும் வருகிறது என்பதை எடுத்துக்காட்டியுள்ளோம்.  மருத்துவர் மருந்துமட்டும் கொடுத்துவிட்டு  உடம்பைப் பார்த்துக்கொள் என்று விடைகொடுத்துவிட்டுப் போய்விட்டார் என்றால் அது மருத்துவம் ஆகிறது,  தம் வீட்டில் வைத்து  மருந்துகொடுத்துக் கவனித்துக்கொண்டாரென்றால் அது வைத்தியம் (வைத்து உடல்நலமூட்டுதலை இயக்குவது)  என்பதே சரியாகும்,  இன்றும் இப்படி வைத்துப் பார்ப்பவர்கள் உள்ளனர். வைத்துக்கொள்வதில் இருவகை,  வைத்தியன் வீட்டில் போய்த் தங்கிய நோயாளியை முன்னவன் கவனித்துக்கொள்வது ஒரு வகை; ஒரு வைத்தியனையே வரவழைத்துத்  தம் மனையில் இடம்கொடுத்துத் தனக்கு உடல்நலம் பேணிக்கொள்வது இன்னொரு வகை.  இது பெரும் செல்வம் படைத்தோருக்கு  இயன்றது ஆகும்,  எல்லா உயிர்களையும் தன்னிடத்தே வைத்துக் காப்பவனாகிய கடவுள் வைத்தியநாதனாகிறான். வைத்துக்கொள்வதால் வைத்தியன்; பிற அறிகுறிகள் ஏதுமின்றி நாவினால் மட்டும் வணங்கப்படுபவன் நாதன் ;  எனவே வைத்தியநாதன் என்றறிக.  போற்றிப்பாடல்கள் மந்திரங்கள் முதலியவை அவன் நாதன் என்பதை அறிவுறுத்தும்,  நாவினால் குறிக்கப்பெறுகிறவன்; பின்னாளில் அமைத்த பொருள்களினாலும் குறிக்கப்பட்டான்,  நாவினாலான ஒலி நாதம் ஆகிறது,  பின்னர் இச்சொற்களின் பொருள் விரிந்தன.

எடுத்துக்காட்டாக ஒரு சிலையினால் அறியப்பட்ட கடவுளும் நாதனே ஆனான். பின் ஒலியும் பொருளும் இல்லாத காலையும் நாதனே ஆனான்,  அவனைப்பற்றி நாவினால் செய்யப்பெறும் ஒலி நாதம்,  பின்னர் கருவிகளால் செய்யப்பெற்ற பிற ஒலிகளையும் இது உளப்படுத்தியது யாரும் எதிர்பார்க்கும் வளர்ச்சியே ஆகும், இவை நிற்க:

நம்பு > நம்புதல்;
நம்பு > நம்புகை  (கை என்பது ஒரு தொழிற்பெயர் விகுதி).

நம்பிக்கை என்பது பொதுவாக ஒன்றை நம்புவது என்றாலும், அது இறந்த காலத்தைச் சுட்டும் நம்பி என்ற எச்சத்திலிருந்து தோன்றுகிறது, 

உனது திருவடி நம்பி  வந்தேன்.

இங்கு நம்பியது முதல் செயல்;  வந்தது அடுத்து நிகழ்வது என்பது உணர்க.

எனவே நம்பிக்கை என்பது ஒன்றை முடிவாக நம்பிவிட்ட தொழிலுக்குப் பெயராய் வருகிறது.  இந்த அளவில் அது நம்புதல் என்ற வினையின் பெயருடன் மாறுபாடுகிறது. முன்னும் நம்பி இன்னும் நம்பிக்கொண்டிருப்பதே நம்பிக்கை ஆகும்,

இது மற்ற வினையின் பெயர்களிலிருந்து வேறுபட்டமைந்த சொல் என்பது தெளிவு ஆகும்,  ஆனால் வகைப்படுத்துங்கால் தொழிற்பெயரே என்று இணங்கலாம் என்று அறிக. எச்சவினையிலிருந்து தோன்றிய தொழிற்பெயர்.  காலம் காட்டாது என்பதற்கும் வினைப்பகுதியினின்று தோன்றுவது என்பதற்கும்  விலக்காகுகின்றது காண்க.

PROOD READING TO BE CARRIED OUT,





 

செவ்வாய், 17 ஜூலை, 2018

சரித்திறம் சரித்திரம் சரிதை

இறந்த மனிதன் சாய்ந்துவிட்டவனே.  நின்று கொண்டிருந்தவனானாலும் இறக்குங்கால் படுத்துவிடுவான்.  சாய்தல் என்பது எதிர்பாராத விதமாக வீழ்தல். ஆனால்  இது பெரும்பாலும்  கனம் -   நீட்டமுடைய பொருள்கள் நேர் இழந்து வீழ்தலையே வழக்கில் குறிக்கிறது.

மேலிருந்து தரைநோக்கிச் சென்று படுவதையே இது தெரிவிக்கிறது.  எடுத்துக்காட்டு: பலகை சாய்ந்தது.  மரம் சாய்ந்தது. பொழுது சாய்ந்தது. பொழுது பட்டது என்றும் சொல்வதுண்டு,

படுதலாவது அடிவானத்தைச் சென்று தொடுதல்.


மனிதன் உயிரிழந்தக்கால் வீழ்தலின் சாய் என்ற சொல்லிலிருந்து  சா என்ற சொல் அமைந்தது.

சாவைக் குறிக்கத் தமிழில் பல சொற்கள் உள்ளன. இவற்றுள் மடிதல் என்பது  அவ்வடிவம் கொள்ளக் காரணம், பல உயிர்கள் சாகுங்கால் இரண்டாக மடிந்து உயிர்விடுதலே ஆகும்.  இது சில தமிழறிஞரால் விளக்கப்பட்டுள்ளது,

சாய்தலும் சரிதலும் தொடர்புடைய சொற்கள். சரிதல் என்பது ஒரு குறிப்பிட்ட சாய்வான வாட்டத்தில் வீழ்தலைக்  குறிக்கின்றது.   மண் சரிவு என்பது காண்க. இஃது ஒரேயடியான வீழ்தலன்று. சாய்மானத்துடன் ஒத்து இறங்கிக் கீழ்வருதலே சரிதலாகும்.

இதன் காரணமாகவே "சரி" என்பது ஒத்துக்கொள்தலைக் குறிக்கிறது,

இப்போது சரித்திரம் என்ற சொல்லுக்கு வருவோம்.

நடந்ததை நடந்தபடி சொல்வதே சரித்திரம் ஆகும்.சிறகுகளின் உதவி இன்றி யாரும் வானில் எழுந்து செல்லமுடியாது ஆதலினால் ஒருவன் பறந்தான் என்று கதையில் சொல்லலாம் என்றாலும் சரித்திரத்தில் சொல்ல இயலாது, ஆகவே புராணங்கள் என்னும் தொன்மங்களுக்கும் சரித்திரத்திற்கும்  வேறுபாடு உண்டாகிறது.

எனவே சரிதை என்பதும் சரித்திரம் என்பதும்  கற்பனைகள் இல்லாதவையாய் இருக்கவேண்டும்.  அவை சரியாக அறிந்தும் சொல்லப்படுதல் வேண்டும்.  எனவே " சரித் திறம்" :  அது சரித்திரம் ஆனது.  திறம் என்பது திரம் என்று திரிந்தது.

சரிதை என்பதில் தை என்பது தொழிற்பெயர் விகுதி.  சரித்திரம் என்பது திரம் என்பது தொழிற்பெயர் விகுதி ஆகும். 



திங்கள், 16 ஜூலை, 2018

கேதம் செலவு

காலைக் கதிரவனைக் கண்டு வணங்கிப்பின்
மேலெழுந்த போதொரு கேதமே கேட்டயர்ந்தேன்
அவ்வீடே யாம் குறுகி  ஆனவை  தீர்த்துவந்தேன்
ஒவ்வாதே இன்றெழுத எற்கு.

பொறுத்தருள்வீர். 



பொருள்:

மேலெழுந்த  =  இனி உள்ள வேலைகளைச் செய்ய முயன்ற .
கேதமே -  ஒரு துக்கச் செய்தி ;
அவ்வீ டே யாம் -  இது  ஆம் என்பது; புணர்ச்சியில் யாம் என்று திரிந்தது,
குறுகி =   சென்று.
ஆனவை =  ஆகவேண்டியவை
தீர்த்து -  முடித்து;
ஒவ்வாதே -  பொருந்தி வராதே ; முடியாதே;
எற்கு - எனக்கு.  

ஞாயிறு, 15 ஜூலை, 2018

விரிச்சிகம் இராசி சொல்

விருச்சிகம் என்பது யாழ்ப்பாணப் பகுதிகளில் விரிச்சிகம் என்று எழுதவும் சொல்லவும் படுதலுண்டு,  விருச்சிகம் என்பதன் மூலம் விரிச்சிகம் என்பதே.

இதற்குக் காரணம் தேள் விரிந்தபடி இருப்பதுதான்,    கொடுக்கை விரித்துக்கொண்டு ( அதாவது பேச்சு வழக்கில்  விரிச்சிக்கொண்டு) இருத்தலால் இது விரிச்சிகம் எனப் பெயர்பெற்றது.

தமிழ்ப் பேச்சுவழக்கிலிருந்து பல சொற்கள் அமைக்கப்பட்டிருத்தலை நாம் நம் முன் இடுகைகளில் விளக்கியுள்ளோம்.   அவை அறிந்தோர்க்கு ஈண்டு கூறுவது உணர எளிதாகும்.

யார் பேசியது என்று தெரியாமல் ஒரு சொல் காற்றில் விரிந்து வருமானால் அதனை விரிச்சி என்று தொல்காப்பியம் கூறுமென்பதை நீங்கள் அறிந்து வைத்திருத்தல் கூடும்.  (தொல் பொருள் 58). இது விரி என்ற பகுதியும் சி என்ற தொழிற்பெயர் விகுதியும் சேர்ந்த சொல்.   பயில் > பயிற்சி ,   என்பது காண்க. சிறுசிறு விதைகள் போலிருக்கும் அரிசி என்பதும் சி விகுதிச்சொல்லே ஆகும்.  இதனை அரி என்பதுமுண்டு.  விரிச்சிகம் என்பது விரிச்சி என்பதிலிருந்து அமைந்திருக்கிறது எனப் பிறர் சொன்னாலும் அதற்கு மறுப்பு எழுப்போம். 

விரி+சி + கு +அம் என்பது அமைந்த விதம் எனலாம்,  இது பேச்சுவழக்குத் திரிபினோடு ஒத்துநிற்பதே ஆகும்.

விரி என்பதே அடிச்சொல் ;  ஆதலின் விருச்சிகம் என்ற வடிவம் பின்னர் அமைந்த திரிபு என்று புரிந்துகொள்ளுதல் எளிதாம்,  பல தமிழ் கற்பிப்போர் தாம் நினைப்பதே சரியானது என்று எண்ணித் திருத்தித்திருத்தி இறுதியில் விரிச்சிகம் என்பது விருச்சிகம் என்று அமைந்திருத்தல் தெளிவு.

விருத்தியுரை என்ற சொல்லிலும் விரிவு குறிக்க வந்த விரி என்பதை விரு என்று திருத்தியிருத்தல் நன் கு புலனாகின்றது.  விரித்தியுரை என்பதே அடிச்சொல்லுடன் பொருந்தியது ஆகும்.

எனவே விருத்தி, விருத்தியுரை என்பன திரிசொற்களாகின்றன.

விரு என்பது உண்மையில் விரி என்பதன் திரிபே.

விர் என்பது மூலமாகவே,

விர் > விரி.  விரிச்சி.  விரிச்சிகம்.


விர் > விரு.

விருத்தம் முதலியவை.

விருத்தப்பா முதலியவை நீண்டகாலம் கீழ்மட்டத்தில் வளர்ந்து பின்னர் அவைக்களத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கக் கூடும்.   கீழ்மட்டத்திலிருந்து அவை  வெளிமொழிகளுக்கும் பரவி யிருக்க, அவ்வேளையில் தமிழிலக்கியத்தில் ஒருவாறு இடம்பெற்றிருத்தல் வியப்புக்குரியதன்று.

அது புதியது என்று சிலர் கூறுவதற்கும் ஆதாரமில்லை.

புதுக்கவிதை முதலியவற்றுக்கு இன்னும் இலக்கணம் இயற்றப்படவில்லை என்பதையும் திரைப்பாடல்களுக்கு யாரும் இதுகாறும் இலக்கணம் உரைக்கவில்லை என்பதையும் நோக்கின் இது நல்லபடியாகவே புரியும் என்று உணர்க.  எம்மை இதுவரை எதுவும் எட்டவில்லை.

முடிவாக, விரித்துக்கொண்டிருப்பதனால் விரிச்சிகம் எனப்பட்டது என்பதை அறிந்து மகிழ்க.  விரித்திகம் > விரிச்சிகம் என த - ச திரிபு அமைதலும்  கொள்ளலாகும்.

திருத்தம் பின்பு.

குப்பைமலைக்குச் சிவப்பு விளக்கு.

எப்பக்கம் பறப்பதென்று குறிக்க -----  பறவூர்திக்
கிதமான சிவப்பொளியும் நடுவீர்!
குப்பைகளும் மலையெனவே உயர்ந்து ---- தம்
கோடுயர்ந்து நிற்பனதில் லியிலே.

ஆளுநரும் அமைச்சர்களும் இணைந்து ---அதனால்
அரியபல உரைகளுமே விளைந்து 
வாளெடுத்த மறவர்களைப் புரைய ---  பல
வாறுழந்தும் ஒருவரையும் அறியார்.


இது இந்தியத் தலைநகர் தில்லி பற்றிய பாடல்.
அங்குள்ள குப்பை மேடுகள் மலைகள்போல்
உயர்ந்துவிட்டன. இவற்றைப் பற்றிக் கவலைப்
பட்டுச் சிலர் இந்திய உச்ச நீதி மன்றம் சென்றனர்.
இன்னும் கொஞ்ச நாளில் அங்குக் குப்பைமலை
 யுச்சிகளில் சிவப்பு விளக்குகள் பொருத்தி
வானூர்திகள் இடித்துவிடாமல் வழிகாட்ட
வேண்டிவரும் என்று மன்றம் குறிப்பிட்டது.
அங்குள்ள  கெஜ்ரிவால் அரசினரால் ஒன்றும்
செய்ய இயல வில்லையாம்.  பாவம் அவர்கள்.

இவை நாட்டைக்குறிஞ்சி போலும் இராகத்துக்குப்
பொருத்தமான வரிகள். கலித்தளை வரும்படியாக
ஒவ்வொரு வரியும் எழுதப்பட்டுள்ளது. பெரும்பாலும்
சிந்துகள் வெண்பா யாப்பிலே வருவன. கலி யாப்பில்
எழுதுவதில்லை. யாம் முரண்பட்டு எழுதியுள்ளோம்.
இந்த முரண்பட்ட பாடலைச் சுவையுங்கள். முடிய
வில்லையென்றால் கடிந்துரை வரைவீர். நீங்கள்
காட்டும் காரணங்களைப் பார்க்க ஆசை.

பறவூர்தி = வானூர்தி.
பற ஊர்தி என்றால் பறக்கும் ஊர்தி:  வினைத்தொகை.
சிவப்பொளி = சிவப்புவிளக்கு.  ஆகுபெயர்.
கோடு: மலையுச்சி.
தில்லி :  டில்லி.
புரைய -  ஒக்க
உழந்தும் =  துன்புற்றும்.
வரை = எல்லை. ஒரு வரை - ஒரு எல்லை என்பதாகும்.

ஒருவரையும் என்பதற்கு ஒரு நபரையும் என்று
பொருள்கொண்டு அப்புறப்படுத்தக் " குத்தகையாளர் 
ஒருவரையும்"  என்று விரிக்கலாமோ?
யாமெழுதியது எல்லை என்ற பொருளில்தான்.

வெள்ளி, 13 ஜூலை, 2018

ஒரு பக்தையின் பட்டறிவு: கொத்தமல்லி அம்மை நோய்.

கடவுள் நம்பிக்கை:

பெரும்பாலான மக்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக உலகில் வாழ்கின்றனர்.  வாழ்க்கையில் துன்பங்கள் வந்தபோது  துன்பம் வருங்கால் நகுக என்று தமிழிறைவனார் வள்ளுவனார் கூறியதுபோலச் சிரித்துவிட்டு மேற்கொண்டு ஆகவேண்டியவற்றைக் கவனிப்பதும் ஒரு நல்ல வழிதான். பலருக்கு இறைவன் ஒருவன் இருக்கின்றான். இப்போது இதை யாம் கூறும்போது,   இருக்கின்றான், இருக்கின்றாள்,  இருக்கின்றது என்று எப்படியும் கூறவேண்டுமென்றே தோன்றுகிறது.  ஏனென்றால் கடவுள் பால்பகுப்பு இல்லாதவர்.  ஆனால் மனிதனால் ஆக்கி வளர்க்கப்பட்ட மொழிகளில் இயற்கையாய் அமைந்துகிடக்கும் குறுமை காரணமாக இப்போது யாம் இங்கு  இருக்கிறான் என்று ஆண்பாலில் கூறுகிறோம்.  

கடவுள்  அம்மையும் ஆவார்; அப்பனும் ஆவார். அல்லாததும் ஆவார்.  இதை நாம் உணர்ந்து இன்புறவேண்டும்.

மகிழாசுரமருத்தினி:  (மகிஷாசுரமர்த்தினி)

எம் மகிழ்வுக்குப் பற்றுக்கோடாக நிற்பது கடவுள்தான்;  அக்கடவுள் அம்மை. தேவி என்றும் கூறுவோம்.  பற்றுக்கோடு என்றால் ஆதாரம், ஆதரவு என்று பொருள்படும்.  இதனை நம் இன்றமிழில் "ஆசு"1 என்று  கூறுவோம்.  ஆசு = ஆதாரம், ஆதரவு. மகிழ் ஆசு உற மருத்தினி என்பதே மகிழாசுறமர்த்தினி என்றும் மகிஷசுரமர்த்தினி என்றும் நம்மிடைப் பெயர்களாக உலவுகின்றன. இதை மகிழ்வுக்கு பற்றுக்கோடான கடவுள் என்னாமல் மகிழ் என்பதை மகிஷ  என்று பொருள் சொல்லி நம் தொன்ம அறிஞர்கள் கதை கூறியுள்ளனர். இவை நிற்க. இதில் நாம் போற்றத்தக்கது: தீமையை இறைமை வென்றது என்பதே.

ஆரியத் தொடர்பு:

இவை போல்வன ஆரியர்களால் புனைவு செய்யப்பட்டவை என்பர் சிலர்.  இவை நம்மிடைக் கதைபுனை ஆற்றல் உள்ளோர் புனைந்தவைதாம்,  அவர்கள் ஆரியர் அல்லர்; காரணம் ஆரியர் என்று ஒரு சாரார் இருந்தனரென்பது ஒரு தெரிவியற் கருத்தே அன்றி மெய்ப்பிக்கப்பட்ட ஒன்றாகாது.  புனைந்தவர்கள் நம் சிற்றூர்களில் கதை புனையும் திறம்வாய்ந்த புலமை உடையோர்தாம்.  வால்மீகி போன்றோரே ஆரியருமல்லர்; பார்ப்பனரும் அல்லர்.  வெள்ளையன் கூறியதெல்லாம் நம்பியதும் மூடநம்பிக்கைதான்.

நம் அம்மையார் ஒருவரின் 40+ ஆண்டுகள் கோயிற்சேவை:

இவையெல்லாம் ஒருவாறு இருக்க,  சென்ற நாற்பதுக்கு மேற்பட்ட ஆண்டுகள் மகிழாசுரமருத்தினியான அருள்மிகு துர்க்கையம்மனுக்கு அம்மையார் ஒருவர் பலரின் பொருளுதவியுடன் பெரும்பூசைகளை நம் சிங்கை துர்க்கையம்மன் ஆலயத்தில் நிகழ்த்திவந்திருக்கிறார்.

விளம்பரம் விரும்பாத இவர்தம் சேவையை இவ்வாலயம் 2016ல் வெளியிட்ட ஒரு நூல் அதன்  கவிதையில் குறிப்பிடுகின்றது:

"நாற்பது நல்லாண்டுகள்---- இங்கு
நனிபல பூசைகள் நடத்திய பூரணி;
துர்க்கையம்மன் பதம் 
நேர்ப்படும் பக்தைகளின் 
குடி நிலைப்பட நலம்பல தலைப்பட
சீர்மிகும் விநாயகனைச் சேவித்துச்
சிவனருள் பொழிதர
தவநிலை கொள்ளுவோம்.............

துர்க்கையம்மன் சுமங்கலிப் பெண்கள்
சூழ்பன்னிலைகளும் தாண்டிவரப்
பொற்கை விரித்து அபயம் தருவாள்"

என்று கூறுமிக் கவிதை,  

நூல்: தெய்வீக வரலாற்றுச் சின்னம் , பக்.90


இப்போது அவருக்கும் எழுபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் கடந்துவிட்டதால், மேற்கொண்டு அதனை நடத்த இயலவில்லை;  ஒரு பழைய நோயும் அவரைப் பாதித்துள்ளது,

பல ஆண்டுகட்கு முன்னர் அவருக்குக் கொத்தமல்லி அம்மை வந்தது.   அது கொஞ்ச நாளில் தானே நலமாகிவிட்டது.  அந்த நோயை விளைவித்த நோய் நுண்மிகள் virus முதுகெலும்பின் உள் சென்று கரந்துறைவு செய்து இப்போது வெளிப்பட்ட பின்பு  ஒரு விலாப்பக்கத்து நரம்புகளைப் பாதித்து இடைவிடாத வலியை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.  உலகில் இதுபோன்று பாதிக்கப் பட்டவர்களில் எண்பத்தைந்து விழுக்காட்டினருக்கு அது முழுமையான முறையில் குணமாகிவிடும்.  ஒரு பதினைந்து விழுக்காட்டினருக்கு அது நீங்காது நின்று வலியைத் தந்துகொண்டிருக்கும்.  அப்படிப்பட்டோரில் இவரும் ஒருவரானார். இதன் காரணமாகவும் இவரால் மேற்கொண்டு பூசைகளை ஏற்று நடத்த இயலவில்லை.  மேலும் அகவை காரணமாக முதுகெலும்பிலும் கொஞ்சம் தேய்வு ஏற்பட்டுள்ளது என்று அறிகிறோம்.  இவர் தாம் நடத்திவந்த பூசைகளை ஆலயத்துக்கே விட்டுவிட்டார்,

இறைவனும் நோயும் அதற்குத் தீர்வும்

நோய்நுண்மிகளை உண்டாக்கியவரும் நம் கடவுள்தான். இவைபோல்வன இயற்கையின் ஒரு பகுதியாகும்.  வலிவரும்போது மாத்திரைகள், தைலம் முதலியவற்றைப் பயன்படுத்தி வலியைக் குறைத்துக்கொண்டு வாழ்க்கைப் படகினைச் செலுத்திக்கொண்டிருக்க வேண்டியதுதான்.  வேறு வழியில்லை.

கொத்தமல்லி அம்மை நோயின் பின்விளைவுகளில் ஒன்று இது என்பதை உணர்ந்து,  வலியைக் குறைத்து வாழ்க்கையை வாழ்வேண்டியதுதான்.

அதுவே தவமெனப்படும்.  வள்ளுவன் கூறியது:

உற்ற நோய் நோன்றல்;  உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு   உரு.

முதலில் வந்த நோயைப் பொறுத்துக்கொள். இதைச் செய்துவிட்டால் நீ தவம் என்பதன் முதல் கட்டத்தில் தேர்வு அடைந்துவிட்டாய்;  அடுத்து எவ்வுயிர்க்கும் எத்துன்பமும் விளைவிக்காதே. அதையும் நீ செய்துவிட்டால் தவ  ஞானி ஆகிவிட்டாய்.  தவத்திற்கு உரு என்பது அதுதான் என்று வள்ளுவனார் நமக்குக் கற்பிக்கின்றார்.

இவ்வம்மையாருக்கு நம் வாழ்த்து உரித்தாகுக,  மகிழ்வுக்கு ஆசாக நிற்கும் மருத்தினி  =  மருத்துவ மேதகியாகிய துர்க்கையம்மனின் அருள் இவ்வம்மையாருக்கும் மற்றும் அனைவருக்கும் கிட்டுவதாகுக.

மகிழ்.
ஆசு.
உற.
மருந்து.
இன்,  இ. 


தொடர்புடைய மற்ற இடுகைகள்: வாசிக்கச் சொடுக்கவும்:

https://sivamaalaa.blogspot.com/2015/10/brief-further-explanation.html 


அடிக்குறிப்புகள்:

ஆசு  -  இது  ஆதல் என்ற வினைச்சொல்லினடியாகப் பிறந்த சொல் .  சு என்பது விகுதி.




மாள் மார் அடிச்சொற்கள் உறவு

மாளுதல் என்பது இறத்தலைக் குறிக்கும் தமிழ்ச் சொல். இதன் பெயரெச்சச் சொல் மாண்ட என்பது,  இது இறந்த என்று பொருள்படும். மாண்ட விலங்கு என்பதுபோலும் வாக்கியங்களிலிருந்து இதனை அறியலாம்.

மாணுதல் என்பது சிறத்தல் என்று பொருள்படுவது. இதன் பெயரெச்சமும் " மாண்ட"  என்று வரும்; அப்போது  இஃது சிறந்த என்று பொருள்தருவதாகும். பெரும்பாலும் இவ்விருசொற்களும் குழப்பம் தருவதில்லை.  மாண்ட என்பது சிறந்த என்ற பொருளில் பெரிதும் தோன்றுவதில்லை, பழைய இலக்கியங்களில் தவிர.

யாம் எழுத முனைந்தது இது பற்றியதன்று;   மாளுதல் என்ற சொல்லுக்கும் மாரகம் என்ற சொல்லுக்கும் உள்ள தொடர்பினை விளக்க வேண்டுமென்பதே இன்று எம் விழைவு ஆகும்.

மாள் என்ற அடிச்சொல்லை மார் என்ற அடிச்சொல்லுடன் ஒப்பாய்வு செய்க.

மாரகம் என்னும் இறத்தல் குறிக்கும் சொல்லில் மார் என்பதனுடன் அகம் என்ற சொல் தொழிற்பெயர் விகுதியாகிச் சேர்கிறது.  சோதிட நூல்களில் எந்தக் கிரகம் அல்லது கோள் மாரகம் செய்துவிட்டது என்று கணிப்பார்கள்.   கிரகம் என்பது கோளிருக்கும் வீட்டைக் குறிப்பது என்பது நீங்கள் அறிந்திருக்கலாம். இதைத் தெளிவாக்க "கிரகநாதன்" என்ற சொல்லை ஆள்வதுண்டு.

மாள் என்ற வினைச்சொல் மார் என்று திரியும் என்பதும் சொன்னூலில் ஏற்புடைத்தே ஆகும்.
நளி > நடி என்றும்  மடி > மரி  என்றும் வரும் திரிபுகளால் ளகர டகர ரகர உறவு நன் கு புலப்படுகிறது என்பதன்றி வேறில்லை. மடி> மரி தொடர்புபோல நடி> நரி என்பதும் ஊன்றி நோக்கற்குரியதாகும்.   நரி என்பது தந்திரம் அல்லது நடிப்பு அறிந்த விலங்கு என்பது பல நூல்களிலிருந்து தெரிகிறது.  மேலும் நர்த்தனம் என்பது நடிப்பு அல்லது ஆட்டம் குறிப்பதாலும்  அது நர் > நரி என்பதனுடன் தொடர்பு காட்டுவதாலும்  இதனை அறியலாகும்.

நர் > நரி;  நர் > நர்த்தனம்.
மர் > மரி;   மர் > மார்.
மடி > மரி.

விரதம் என்ற சொல் சில உணவுப்பொருள்களையோ அல்லது உணவு முழுதையுமோ சில காலத்துக்கு விட்டு நீங்கி இருப்பதே.  விடு > விரு> விரதம்; விடதம் > விரதம் இவற்றையும் உணர்தல் வேண்டும்.

ட என்பது பேச்சிலும் மற்றும் பிற மொழிகளிலும் ரகரமாதல் காணப்படுகிறது.

அரு எனற்பாலதும் அடு எனற்பாலதும் ஒப்பாக நோக்குதற்குரித்து,   அரு> அருகு;
அடு > அடுத்தல்.   இவை  நெருங்குதல் கருத்து வெளிப்படுத்துவன ஆகும்.  முழுச்சொற்களில் விகுதி வேறுபடுதலன்றி அடிகள் வேறுபடவில்லை.

இதுகாறுங்கூறியவாற்றால்  மாள் மார் என்பவற்றின் தொடர்பு அறிக. மடி> மரி என்பவும் அறிக.  மார் என்பது பாகத மொழிகளில் மரணம் என்ற பொருளிலே வருவதே ஆகும்.  மரி+ அகம் = மாரகம் என்றும்  மார்+அகம் = மாரகம் என்று இருவழிகளிலும் இது உணர்த்தப்படுதற் குரியது என்பதும் காண்க.

டகர ரகர ஈடு பிற இடுகைகளிலும் விளக்கப்பட்டுள்ளது.

விள் விடு;  சுள் > சுடு;  நள் > நடு எனப்பலவும் கண்டுணர்ந்து ள ட பதில் நிலைத் தகுதி அறிந்துகொள்க.

ஆகவே மாள் மார் உறுதிப்படுகிறது. ஐயமொன்றுமில்லை.

திருத்தம் பின்பு.

Horrifying moment Coimbatore girl dies in disaster management drill

In disaster management drill,  a trainer should not include as participants those who are not prepared for it.

Now you see what happened:


https://www.hindustantimes.com/videos/india-news/watch-horrifying-moment-coimbatore-girl-dies-in-disaster-management-drill/video-y62rdKjas3LlDd81NjeRcP.html


Horrifying moment Coimbatore girl dies in disaster management drill

வியாழன், 12 ஜூலை, 2018

ஐயப்பனுக்கு ஒரு சிறு பாட்டு


இந்த உலகெல்லாம் நான் தேடினேனே
உடல் அலுப்பாலே நெஞ்சம்வாடினேனே.

எங்குப் போனாலும் உன்னைக் காணாக் கண்களே
எங்குப் போனாலும் உனைக் காணாத் துன்பமே

உன் தன் அருளொன்றே நானும் வேண்டும் போதிலே
நீ பொருளாக என் தன் முன்னே தோன்ற வா
சபரித் திருவாக என்  கண்கள் காணவா
சபரித் திருவாக என் கண்கள் காணவா.  ( உன் தன்)

குழுவினர் பாடுவது:

எங்கள் ஐயப்ப சுவாமி நாமம் வாழ்கவே
இந்தப் பூமிக்கு நன்மை யாவும் சூழவே
எங்கள் ஐயப்ப சுவாமி நாமம் வாழ்கவே.


உச்சி பொழுதாகி வெகு நேரம் ஆச்சே என்ற பாடலின் மெட்டு.
சிவமாலா இயற்றிய இசைப்பாடல்களில் ஒன்று.

புதன், 11 ஜூலை, 2018

சத்தியக் காப்பி என்ற சொல்.

அறுபதுகளுக்கு  முந்திய சிங்கப்பூரில் சத்தியக் காப்பி என்ற சொல் வழங்கியது, இந்தச் சொல் மலேசியாவில் அல்லது முன்னைய மலேயாவில் வழங்கவில்லை என்று தெரிகிறது.  அது அங்கும் வழங்கியதாய்க் கேள்விப்படவில்லை.

இந்தியா 15 ஆகஸ்ட் 1947ல் விடுதலை பெற்றபின்பு அங்கிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள் இந்தியக் கடப்பிதழுடன் வரவேண்டியதாயிற்று.  ஆனால் பின்பு,  யாரேனும் சிங்கப்பூரில் தகப்பனோ தாயோ இருந்தால் தன் பிள்ளைகளை வரவழைத்துக்கொள்ளலாம் என்னும் குடியேற்றச் சட்டமிருந்தது.  1959 ல் திரு லீ குவான் யூ வின் ஆட்சி ஏற்படுமுன் இதுவே விதி; அவர் பதவியேற்ற கொஞ்ச நாட்களுக்குப் பின்னும் இது தொடர்ந்தது.

வாசு என்ற ஒரு மலையாளி சிங்கப்பூருக்கு வந்தார்.  அவரைச் சிங்கப்பூருக்கு வரவழைக்கக்  கோவிந்தன் என்பவர் ஒரு சத்தியக்காப்பி எடுத்துக் கேரளாவிற்கு அனுப்பிவைத்தபடியால் அதை ஆதாரமாக வைத்து வாசு வந்தார்.  வாசுவிற்குக் கோவிந்தன் என்பவர் அப்பன்.  எப்படி அப்பன்?  சத்தியக்காப்பியின்படி அப்பன். கோவிந்தன், அரசு ஆணையாளர்களில்   ஒருவர் Commissioner of Oaths  முன் சென்று, "வாசு என் சொந்த மகன்" என்று சத்தியம் செய்து  ஒரு சத்தியக்காப்பி எடுத்து ஊருக்கு அனுப்பினார். ஆனால் கோவிந்தன் வேறு சாதியினர்;  வாசு வேறு சாதியினர்.  சட்டப்படி வருவதற்கு இது ஓர் உதவிமட்டுமே.  ஆகவே கேரளாவில் வி, வாசு என்ற பெயருடையவராய் இருந்தவர் இங்கு வந்தபின் ஜி. வாசு ஆகிவிட்டார்.  அதாவது வேலாயுதம் வாசு என்பவர் கோவிந்தன் வாசு ஆனார்.

சத்தியக்காப்பியின் மூலம் தகப்பன்பெயர் மாறிவிட்டது.  வந்தபின் வாசுவிற்குக் கோவிந்தன் பிரிட்டீஷ் கடற்படைத்தளத்தில்  தண்ணீர்க்குழாய் பொருத்தும் ஒரு வேலை வாங்கிக் கொடுத்தார்.  இவற்றுக்கெல்லாம் வாசு கோவிந்தனுக்குச் செய்த நன்மை என்ன என்று தெரியவில்லை.  கோவிந்தனுக்கும் இப்படிப் பல "பிள்ளைகள்" சட்டப்படி ஏற்பட்டுவிட்டனர். நாம் கேள்விப்பட்ட படி இவரின் பிள்ளைகளில் ஒருவர் 'பிள்ளை'; இன்னொருவர் நாயர். ஒருவர் பிராமணர். மற்றொருவர் மீனவக் குடியைச் சேர்ந்தவர்.  எல்லோரும் சட்டப் பிள்ளைகளாகி நல்ல உறவினர்கள்போலப் பழகிச்  சிலர் சில ஆண்டுகளின்பின் ஊர்போய்ச் சேர்ந்தனர்;  சிலர் சிங்கப்பூரிலே வாழ்ந்து குடும்பக்காரர்களாகி மறைந்தனர்.

சத்தியக்காப்பி (சொல்)

இதில் சத்தியம் என்பது வடசொல் என்பர். காப்பி என்பது படி copy  அல்லது பிரதி. ஆங்கிலத்தில் இதை :   Statutory Declaration     என்று சொல்வர்.

இதைச் சத்தியப் பிரமாணம் என்று சமஸ்கிருதத்தில் சொல்லலாம். தமிழில் உறுதிமொழி ஆவணம் எனலாம்.  சத்தியக்காப்பி என்பது நமது இந்தியத் தொழிலாள நண்பர்கள்  அமைத்த பெயர்.  நல்ல கற்பனையுடன் தான் அமைத்துள்ளனர்.

தொழிலாள நண்பர்கள் அமைத்த பெயர்களையும் மொழிபெயர்ப்புகளையும் தமிழாய்வு செய்வோர் யாராவது முன் வந்து  ஆய்வு செய்து வெளியிடலாம். இதுகாறும் யாரும் வெளியிட்டுள்ளனரா என்று தெரியவில்லை.  சிங்கப்பூர்த் தமிழரிடை அமைந்த சில இடப்பெயர்களைப் பாருங்கள்:

போத்தோங்க் பாசீர் -   மண்ணுமலை.   இதில் பாசீர் என்பது மணல் என்று பொருள்படும்.

காலாங் ஆறு:   செங்கமாரி  ஆறு.

ஜபத்தான் மேரா:   சிவப்பாலம்  ( சிவப்புப் பாலம்).

கம்போங்  கப்போர்  :   சுண்ணாம்புக் கம்பம்.  கம்பம் =  சிற்றூர்.

கம்போங் கொலம்  ஆயர் :   தண்ணீர்க் கம்பம்.

தேக்கா என்பது சீனமொழிச்சொல்.

கண்டங் கிர்பாவ்:   மாட்டுக் கம்பம்.  இங்கு  கண்டங் என்பது கொட்டகை.

இப்போது சத்தியக்காப்பி என்ற கலவைச் சொல் hybrid  என்னவென்று புரிந்திருக்குமே.

--------------------------------------------------------------------------


குறிப்பு::  இவ்விடுகையில்  (மேலே)  உள்ள ஆட்பெயர்கள் உண்மைப் பெயர்கள் அல்ல.  மாற்றப்பட்டுள்ளன.

பிழைத்திருத்தம் பின்.
சில பிழைகள் திருத்தம் பெற்ற தேதி: 2.2.2019

    

கணக்காயனார் மகனார் நக்கீரனார்.

சங்க இலக்கியங்களை வாசிக்கும்போது அக்காலப் புலவர் பெயர்களையும் அறிந்து இன்புறலாம்.

இவற்றுள்    " மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்"   என்பதுமொன்று.  கணக்காயனார் என்போர் ஆசிரியர்கள்.  இவர்கள் இலக்கணம் கணக்கு முதலிய சொல்லிக்கொடுத்தனர் என்பர்.

இப்போது ஆசிரியர் என்ற என்ற சொல்லைச் சுருக்கும் வழிகள் அறிவோம்:

ஆசிரியர் >   ஆரியர்.  இதில்  சி என்ற எழுத்து இடைக்குறைந்தது.

ஆசிரியர் >  ஆயர்.    இதில் சி ரி ஆகிய இரண்டும் குறைந்து இடைக்குறை ஆகிற்று.

ஆ  என்பது மாட்டையும் குறிக்கும்.  கோமாதா.   இதனுடன் அன் விகுதி இணைக்க  ஆயன்  ஆகும்.  அர் விகுதி இணைக்க ஆயர் ஆகும்.  மாட்டுக்காரப் பையன் என்பது பொருள்.

இடைக்குலத்தோர் என்றும் பொருள் கூறுவர்.

ஆய என்பது பின் ஐய என்றும்  ஆர்ய என்று திரிந்ததென்பர்.

தேஷ் பாண்டே, தேஷ்முக் முதலிய வட இந்தியப்பெயர்களும் கணக்காயர் என்றே பொருள்படும்.  குல்கர்னி என்பது தொடர்புடையது.  கணக்குப்பார்ப்போர், சொல்லிக்கொடுப்போர்.  புலவர்கள் இவர்கள்.  1062  காலக்கட்டதில் இவர்களின் நிலங்கள் பறிமுதலைக் காங்கிரசு என்னும் பேராயக் கட்சி மேற்கொண்டதாகச் சொல்வர்.

Maharashtra Revenue Patels (Abolition of Office) Act 1962,

இதனை விக்கிப்பீடியாவில் காணலாம்.

திங்கள், 9 ஜூலை, 2018

புசி போசனம் - பொதிதல் தொடர்பு.

போஜனம் என்ற சொல் நாம் அடிக்கடி கேட்பதுதான்.  சிலர் இச்சொல்லை விரும்பிப் பயன்படுத்துவர்.  இதற்கு நேராக இப்பொழுது வழங்கும்  சொல் விருந்து என்பது.  உணவு விருந்து நடைபெறும் அழைப்பிதழ்களில் என அச்சிடப் படுவது வழக்கம்,

இது புசி என்ற வினைச்சொல்லினின்று எழுகிறது..

முன்  ஓர்  இடுகையில்  முனிவர் - மௌனம் என்ற சொல்லை விளக்கியிருந்தோம். முனி > மோனம் என்று திரிந்தபின் அதிலிருந்து மௌனம் எனற சொல் உருவாக்கப்பட்டது.  முனியிலிருந்து மோனம் வரை செந்தமிழ்த் திரிபு.  உகரம் (மு)  இங்கு ஓகாரமாகத் (மோ)  திரிகிறது,  அதிலிருந்து மௌ என்பது எல்லை கடந்துவிட்டபடியால் அதைச் செந்தமிழியற்கை எனல் கடினமே.

 இதுபோல வரைமீறல் திரிபுகளுக்கு இன்னொரு மொழியை உருவாக்கி அதிலிட்டு வைத்தனர். அப்படிச் செய்வதால் செந்தமிழில் பலமடித் திரிபுகள் ஊறுவது ஒரு கட்டுக்குள் வைக்கப்படும்.

புசித்தல் >  புசி >  புசி  +  அன் + அம் =  போசனம் என்று வரும்,  புசியம், புசியனம், புசனம், பூசம்,  பூசனம் என்பன போலும் ஒரு வடிவுக்குள் நின்றிருந்தால் இதில் திரிபு மிகையாய் இருந்திருக்காது. 

புசி என்பது விகுதி ஏற்றுப் போச(னம்)   என்று வந்ததற்கு ஒரு காரணமு முண்டு. புசி என்பது பொதி ( பொதிதல்)  என்ற சொல்லுடன் பிறப்புறவு உள்ளதாகும்.  பொதி என்பதன் தி இங்கு சி ஆனது த > ச திரிபு விதியிற் படும்,  பொதி > போதி  > போசி+ அம் + அம்  = போசனம் எனலாக, முதனிலை நீண்டு அன்  அம் விகுதிகள் இணையப் போசனமானது. உணவினை வயிற்றுக்குள் பொதிந்து பசியை ஆற்றிக்கொள்வதற்குரியதே போசனம் ஆகும்.  போதி என்று திரிபுகொண்டால் போதித்தல்  கல்வி கற்றுத்தருதல் என்பதனோடு மலைவதால் புசி > போசனம் ஆனது. இது சுருங்கச் சொல்வதுடன் உகரம் ஓகாரமாதலாகிய திரிபுடன் ஒருப்பட்டு நிற்கின்றது.  புசி என்பதன் அடிச்சொல் பொதிதல் ஆதலான் மீண்டும் பொ>போ என்று திரிவது பொருந்துகிறது.

மேலும் முனி > மோன முதலிய திரிபுகளுடன் ஒரு கட்டுக்கொள்கிறது என்று அறிந்து மகிழ்க.

பிழைகள் திருத்தம் பின்.


 

ஞாயிறு, 8 ஜூலை, 2018

திருத்தங்கள் தடை.




தெற்றொன்று கண்டுயர் தேடாத் திருத்தமே
மற்றொன்று மேல்வரத் தேங்கிற்றே---உற்றொன்று
நல்ல தியற்றிட நான்முனைந்த போதிதில்
சொல்லத் துயராம் தடை.

விளக்கம்:

ஒரு சிறு பிழை கண்டு அதைத் திருத்தமுனைந்த போது இந்த வலைப்பூவின் மென்பொருள் திருத்தங்களைத் தடுக்கிறது.

இதன் பொருள்:  தெற்றொன்று – பிழையொன்று; கண்டு – சட்டென்று
புலப்பட்டு;   தேடாத் திருத்தமே --  நானே தேடிக்கண்டுபிடிக்காத ஒரு பிழைத் திருத்தம்தான் இது; ஆதலால் உயர் என்று அடைமொழி  தரப்படுகிறது;   தேடாமல் தானே கிட்டியது ஒரு புதையல் கிடைத்தது போல;  என்பது கருத்து. மற்றொன்று மேல்வர ---- இந்த வலைப்பூவின் மென்பொருள் மூலமாக இடுகையை முன்விரித்துத் திருத்தம் செய்ய உதவ இயலாமை அல்லது மறுப்பு  ஆகிய நிகழ்வு உண்டாக;   ;  
தேங்கிற்றே -   தாமதம் ஆகிவிட்டதே;  உற்று -  மனத்தினால் திறமான நோக்கத்தைக் கொண்டு;  ஒன்று  நல்லது  இயற்றிட --- ஒரு
நல்ல காரியத்தைச் செய்ய; நான் முனைந்த போது  --  நான் முயற்சி மேற்கொண்ட நேரத்தில்:  இதில் ---  இம்முயற்சியில்; சொல்ல = வெளியில் எடுத்துக்கூற; துயராம் --- மனத் தொல்லையை விளைவிக்கும்;  தடை --- மேற்செல்ல முடியாத குறுக்கீடு   ; உண்டாகிறது என்று முடிக்கவும்.

தேடாத் திருத்தமே:  பிழையைத் தேடித்தான் திருத்தம் செய்கிறோம்,
திடீரென்று ஒரு பிழை கண்முன் தோன்றும்போது அதைக் குறித்து வைத்துக்கொண்டு அப்புறம் மீண்டும் தேடினால் அது தேடிய திருத்தம்; உடன் செய்ய முனைவது இம் மென்பொருளின் சுற்றுச்சார்பில தேடாத் திருத்தம் என்று உணர்க;  தேடாப் பிழைக்கு அப்புறம் செய்வது தேடித் திருத்துவது; உடன் செய்வது தேடாமல் திருத்துவது.  சில பிழைகளைக்  கண்டு பின் திருத்த முனைந்த போது அவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பிழையைக் கண்டது தொலைபேசித் திரையிலாகலாம்; அதை அங்கு திருத்த இயலவில்லை; பின்னர் மடிக்கணினியிலோ மேசைக்  கணினியிலோ கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.  அதில் சில தேடியும் தோன்றவில்லை. சில உள்ளுறைவில் ஒரு மாதிரியாகவும் வெளியீட்டில் வேறுமாதிரியாகவும் தெரிகின்றன. மென்பொருள் என்பது பல காரணங்களால் அவ்வளவு எளிதானதாக இல்லை, வைரஸ் என்னும் கள்ள மென்பொருள்  ..................