மந்திரவாதிகள் மந்திரங்களைச் சொல்லி அவற்றின் மூலமாகத் தாம் விரும்பியதை அடையமுடியும் என்று சிலர் நம்புகின்றனர். ஆனால் பலர் நம்புவதில்லை என்று தெரிகிறது, I am talking about occult science. Not mantras pronounced in religious events . எனினும் அலுவலகங்களுக்குள் வேலை பார்ப்பவர்கள் தங்களுக்குள் கலாய்த்துக்கொண்டு அக்கலகம் யாரோ மந்திரம் செய்துவிட்டதனால்தான் வந்துற்றது என்று சொல்லிக்கொள்வதும் நம் காதுகளில் வீழாமலில்லை.
உண்மையா? மந்திரங்களுக்கு அவவள வு ஆற்றலுண்டோ என்று சரிந்துவிடுகிறவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
மந்திரங்களில் ஈடுபடுவதை " மாந்த்ரீகம்" என்ற அயற்சொல் குறிக்கின்றது. மலேசியாவிலுள்ள ஒரு பெரிய அரச அதிகாரிகூட மாந்திரீக வேலைகளின் மூலமாக தமக்குச் சாதகமான நிலைகளை அவ்வப்போது அடைந்துவந்தார் என்று தாளிகைகளின் மூலமாக அறிகின்றோம். (இது உடனிகழ்வு காரணமாக இருக்கலாம் . Co-incidence cannot be ruled out. காக்கை உட்காரப் பனம்பழம் விழ என்பது பழமொழி .)
மந்திரம் செய்துகொண்டவர்கள் தாயித்து முதலியவை அணிந்துகொள்வது வழக்கம்.
சமீபத்தில் ஒரு இறப்புக்குப் போகவேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கு இறந்தவருக்கு மாலை போடுவதற்கு நல்ல பெரிய மாலையும் உதிரிப்பூக்களும் தேவைப்பட்டன. பூக்கடைகளுடன் தொடர்புடைய ஓர் அம்மையாரை அணுகினோம். எங்கள் தேவைகளைத் தெரிவித்தோம். அவரும் நாலு மணி மாலை அங்கு பூக்களுடன் வந்துவிடுவேன், காத்திருங்கள் என்று சொல்லி எங்கள் கவலையைத் தவிர்த்தார்.
மணி நாலு ஆயிற்று. அவரைக் காணோம். தொலைபேசிகளைப் பயன்படுத்தியும் அவரை எட்ட முடியவில்லை. அப்புறம் பக்கத்துக் கடைக்குச் சென்று சில சிறிய மாலைகளை வாங்கிக் கொணர்ந்து காரியத்தை முடித்தோம்,
இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது ஒருவர் சொன்னார்: நாங்கள் கேட்டுக்கொண்ட அந்த அம்மையார் தாயித்து அணிந்திருக்கிறார் என்றும் இறந்த வீடுகளுக்கு இதுபோன்ற உதவிகள் செய்யமாட்டார் என்றும் சொன்னார்கள். செய்தால் மந்திர ஆற்றல் போய்விடுமாம். அதனால் அவர் வசதியாகக் கம்பி நீட்டிவிட்டார் என்றார்கள்.
இப்படியும் இருக்கிறதா என்று பேசிக்கொண்டிருந்தவர்கள் வியந்தனர்.
இறந்த வீட்டுக்குப்போனால் தாயித்துக்குச் சக்தி இருக்காதாம்,
உலகில் நம்பிக்கைகளுக்கு அளவில்லை.
பிழைத்திருத்தம் பின்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.