ஓரிரண்டு சொற்களை மட்டும் விளக்கி முதனிலைத் திரிபினை ஒருவாறு விளக்கலாமெனினும் கேட்போருக்கு இத்தகு சொல்லமைப்புகள் முழுமையாய்ப் புரிந்துவிட்டது என்று முடிவுகட்டிவிட முடியாது. ஆகவே இனிப் பல உதாரணங்களைக் கையாண்டு எப்படி வினைகளிலிருந்து பெயர்கள் அமைகின்றன என்பதை ஆர்வமுடையார் யார்க்கும் இதன்பின் அறிவிப்போம்.
மிக்க எளிமையான தொழிற்பெயர் ஆக்கமென்றால் அது ஒரு வினைப்பகுதியும் ஒரு விகுதியும் தோன்றும் அமைப்புத்தான். எடுத்துக்காட்டு:
தேடு > தேடுதல்.
இந்த அமைப்பில் தல் என்ற பெயர்ச்சொல்லாக்க விகுதி புணர்ந்துள்ளது. திரிபுகள் எவையும் இல்லை. தேடு என்ற வினைப்பகுதி அப்படியே மாற்றம் ஏதுமின்றி உள்ளது. பெயர்ச்சொல் அமைப்புக்கு இப்படி ஓர் எடுத்துக்காட்டினையே கொடுத்துவிட்டு இப்படித்தான் அமையும், இதுதான் தொழிற்பெயர் என்று வாத்தியார் போய்விட்டால், மாணவனுக்கோ மற்றவருக்கோ அதுமட்டுமே தெரியும். பலர் சொந்தமாக எதையும் விரித்தறிந்து கொள்வதில்லை. பேரன்பேத்தி எடுக்கும்வரை அந்த ஓர் உதாரணமே தெரிந்துவைத்திருப்பான். வேறு உதாரணங்களைச் சொன்னாலும் அவனுக்கு ஐயப்பாடு தோன்றிவிடும். எதற்கும் மசியாமல் இருக்க எண்ணம் கொண்டு, தல் சேர்ப்பது மட்டுமே தொழிற்பெயராக்கம் என்று முடித்துவிடுவான்.
தேடு> தேடல் ( இங்கு ~அல் விகுதி சேர்ந்தது).
இங்கு மாற்றம் ஒன்று ஏற்பட்டது. தேடு என்ற சொல்லில் உள்ள உகரம் வீழ்ந்தது அல்லது இலக்கண நூல் கூறும் மொழியில் சொல்வதானால் உகரம் கெட்டது. தேட்+அல் என்று ஆகி ட்+அ இரண்டும் இணைந்து "டல்" என்று முடிந்தது. சொல் தேடல் என்று அமைந்தது. தே என்ற முதலெழுத்து மட்டுமே மாற வில்லை என்பதறிக.
இனித் தேடு என்பதனுடன் அம் விகுதி இணைய,
தேடு+அம் = தேட்டம் என்றாகும். இங்கு டகர இரட்டிப்பு நிகழ்ந்தது, தேடு+ அம் = தே + ட் + ட்+ அம் என்று உகரம் கெட்டு, இரண்டு டகர ஒற்றுக்கள் வந்து, இரண்டாவது டகர ஒற்று வரு விகுதி முதலெழுத்து அ-வுடன் ஒன்றி, தே ட் ட ம் என்று திரிந்து " தேட்டம்" ஆயிற்று.
இது அம் விகுதியே இல்லாமல், தேடு > தேட்டு என்று நின்றுவிடும். அப்போதும் அது தொழிற்பெயரே.
தேடு > தேட்டு.
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் என்பது ஒளவையின் பொன்மொழி.
ஒரு வினைப்பகுதி அவ்வாறே நின்று பெயராதலும் உண்டு. வந்துழிக் காண்க. இங்கு ஓர் உதாரணம் மட்டும் சொல்லப்படும். கண்டுகொள்க.
" அந்தத் திருடனை ஒரு தேடு தேடிவிட்டுத்தான் வந்தேன்" என்பதில் தேடு என்பது "ஒரு" என்ற எண்ணிக்கை அடைவும் ஏற்றுப் பெயராய நின்றது காணலாம்.
நாம் அடுத்துக் காண்பது:வினையிலிருந்து பெயர்ச்சொல்: தலை விரிதலும் சுருங்குதலும்.
மீண்டும் சந்திப்போம்.
பிழைகள் தோன்றின் அடுத்துத் திருத்தம் பெறும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.