மாளுதல் என்பது இறத்தலைக் குறிக்கும் தமிழ்ச் சொல். இதன் பெயரெச்சச் சொல் மாண்ட என்பது, இது இறந்த என்று பொருள்படும். மாண்ட விலங்கு என்பதுபோலும் வாக்கியங்களிலிருந்து இதனை அறியலாம்.
மாணுதல் என்பது சிறத்தல் என்று பொருள்படுவது. இதன் பெயரெச்சமும் " மாண்ட" என்று வரும்; அப்போது இஃது சிறந்த என்று பொருள்தருவதாகும். பெரும்பாலும் இவ்விருசொற்களும் குழப்பம் தருவதில்லை. மாண்ட என்பது சிறந்த என்ற பொருளில் பெரிதும் தோன்றுவதில்லை, பழைய இலக்கியங்களில் தவிர.
யாம் எழுத முனைந்தது இது பற்றியதன்று; மாளுதல் என்ற சொல்லுக்கும் மாரகம் என்ற சொல்லுக்கும் உள்ள தொடர்பினை விளக்க வேண்டுமென்பதே இன்று எம் விழைவு ஆகும்.
மாள் என்ற அடிச்சொல்லை மார் என்ற அடிச்சொல்லுடன் ஒப்பாய்வு செய்க.
மாரகம் என்னும் இறத்தல் குறிக்கும் சொல்லில் மார் என்பதனுடன் அகம் என்ற சொல் தொழிற்பெயர் விகுதியாகிச் சேர்கிறது. சோதிட நூல்களில் எந்தக் கிரகம் அல்லது கோள் மாரகம் செய்துவிட்டது என்று கணிப்பார்கள். கிரகம் என்பது கோளிருக்கும் வீட்டைக் குறிப்பது என்பது நீங்கள் அறிந்திருக்கலாம். இதைத் தெளிவாக்க "கிரகநாதன்" என்ற சொல்லை ஆள்வதுண்டு.
மாள் என்ற வினைச்சொல் மார் என்று திரியும் என்பதும் சொன்னூலில் ஏற்புடைத்தே ஆகும்.
நளி > நடி என்றும் மடி > மரி என்றும் வரும் திரிபுகளால் ளகர டகர ரகர உறவு நன் கு புலப்படுகிறது என்பதன்றி வேறில்லை. மடி> மரி தொடர்புபோல நடி> நரி என்பதும் ஊன்றி நோக்கற்குரியதாகும். நரி என்பது தந்திரம் அல்லது நடிப்பு அறிந்த விலங்கு என்பது பல நூல்களிலிருந்து தெரிகிறது. மேலும் நர்த்தனம் என்பது நடிப்பு அல்லது ஆட்டம் குறிப்பதாலும் அது நர் > நரி என்பதனுடன் தொடர்பு காட்டுவதாலும் இதனை அறியலாகும்.
நர் > நரி; நர் > நர்த்தனம்.
மர் > மரி; மர் > மார்.
மடி > மரி.
விரதம் என்ற சொல் சில உணவுப்பொருள்களையோ அல்லது உணவு முழுதையுமோ சில காலத்துக்கு விட்டு நீங்கி இருப்பதே. விடு > விரு> விரதம்; விடதம் > விரதம் இவற்றையும் உணர்தல் வேண்டும்.
ட என்பது பேச்சிலும் மற்றும் பிற மொழிகளிலும் ரகரமாதல் காணப்படுகிறது.
அரு எனற்பாலதும் அடு எனற்பாலதும் ஒப்பாக நோக்குதற்குரித்து, அரு> அருகு;
அடு > அடுத்தல். இவை நெருங்குதல் கருத்து வெளிப்படுத்துவன ஆகும். முழுச்சொற்களில் விகுதி வேறுபடுதலன்றி அடிகள் வேறுபடவில்லை.
இதுகாறுங்கூறியவாற்றால் மாள் மார் என்பவற்றின் தொடர்பு அறிக. மடி> மரி என்பவும் அறிக. மார் என்பது பாகத மொழிகளில் மரணம் என்ற பொருளிலே வருவதே ஆகும். மரி+ அகம் = மாரகம் என்றும் மார்+அகம் = மாரகம் என்று இருவழிகளிலும் இது உணர்த்தப்படுதற் குரியது என்பதும் காண்க.
டகர ரகர ஈடு பிற இடுகைகளிலும் விளக்கப்பட்டுள்ளது.
விள் விடு; சுள் > சுடு; நள் > நடு எனப்பலவும் கண்டுணர்ந்து ள ட பதில் நிலைத் தகுதி அறிந்துகொள்க.
ஆகவே மாள் மார் உறுதிப்படுகிறது. ஐயமொன்றுமில்லை.
திருத்தம் பின்பு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.