சொல்லைப் பார்த்தவுடன் அச்சொல் அவ்வாறு அமைந்ததன் காரணம் உடனே புரிவதில்லை. இதைத் தொல்காப்பியனாரே அவர்தம் நூலில் கூறியுள்ளார். நாம் இதுவரை கண்ட பல சொற்களையும் இடுகைகளில் விளக்கியவாற்றால் இதனை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இங்கு கூறப்பட்ட பெரும்பாலானவை வெறுமனே பகுதி விகுதி அல்லது முதல்நிலை இறுதிநிலை என்ற அவ்வளவில் அறியவைக்கக் கூடியவையாய் இருக்கவில்லை. சில சொற்களே தேவைப்பட்ட ஞான்று, விகுதிகளே வேண்டியவா யிருந்திருக்க வாய்ப்பில்லை. அதற்கப்புறம் இன்னும் சொற்கள் தேவைப்பட்ட ஞான்று விகுதிகள் தேவைப்பட்டன. சொல்லை மிகுத்துக் காட்டிச் சொற்கள் அமைந்தன. மிகுதி - விகுதி என்று அமைந்த இது, சொற்கள் இன்னொரு சிறுசொல்லைப் பெற்று நீண்டு அமைந்த நிலையைக் காட்டியது. இச்சொல்லில் அமைப்பும் முதனிலைத் திரிபுடன் அமைந்தது. இதுபோலும் திரிபுக்கு இன்னோர் உதாரணம் , மிஞ்சுதல் - விஞ்சுதல் என்பது.
மேலும் மிகுதியாய்ச் சொற்கள் தேவைப்பட்ட போது, விகுதியுடன் இடைநிலையும் தேவையானது. எ-டு: பருவதம்: பரு(த்தல்) + அது + அம் > பருவதம்.(பொருள்: மலை). அது - இடைநிலை. அம் - விகுதி. அதற்கப்பால் மேலும் தந்திரங்கள் பலவற்றைக் கைக்கொண்டனர். திறம் என்பதைத் திரம் என்று மாற்றிக்கொண்டு சில சொற்களைப் புனைந்தனர். அப்பால், இடைக்குறை கடைக்குறை முதலியவற்றைக் கையாண்டனர். சொல்செய் வழிகள் அனந்தம் அனந்தம் ....
இடைமிகையும் இதிற் பங்காற்றியுள்ளது: எ-டு: குறு > குன்று. ( இடையில் ஒரு 0னகர ஒற்று மிக்கு வந்தது).
[அனந்தம் என்றால் முடிவேதும் இல்லா நிலை. இது அமைந்த விதம் முன் இடுகைகளில் விளக்கப்பட்டுள்ளது. ]
அன்று அந்தி https://sivamaalaa.blogspot.com/2017/04/blog-post_3.html
அந்தி : https://sivamaalaa.blogspot.com/2017/10/blog-post_70.html ]
எதையும் சூழ்ந்து ( அதாவது ஆலோசித்து) திறம்படச் செயல்புரிந்து பயன்பாட்டுப் பொருள்களை விளைவிப்பவர்களே சூத்திரர்கள். இச்சொல் சூழ்திறத்தார் > சூழ்திறர் > சூத்திரர் என்று அமைந்ததென்பதை முன்பு வெளியிட்டுள்ளோம். ழகர ஒற்று மறையும். எடுத்துக்காட்டு: வாழ்த்தியம் > வாத்தியம். ழகர ஒற்று மறைந்தது. இதனை ஆசிரியர் பிறர் காட்டியுள்ளனர். வாய்த்தியார் (வாய்ப்பாடம் சொல்பவர்) என்பதும் வாத்தியார் ஆவது.
றகரம் ரகரமாகும். சூத்திறம் > சூத்திரம். தந்திறம் > தந்திரம்
என்பதும் காண்க. வந்து பற்றும் வறுமையைத் தரித்து அதை விலக்கு வழிகண்டு திறம்பெறவேண்டும். வறுமையை வெற்றிகொள் திறம் அதுவாம். ஆகவே தரி+ திறம் > தரித்திரம் ஆயிற்று. இவ்வாறு வறுமையின் வாய்ப்பட்டார், "நல்கூர்ந்தார்". அவர்களுக்கு விரைந்து நல்வழி வரவேண்டும் என்னும் ஆன்றோர் அவரை " நல் கூர்ந்தார்" ( நன்மையை நோக்கி நடப்பவர்கள் ) என்று இடக்கர் அடக்கலாகக் கூறினர். அவர்களை(வறியோர்)ப் பழித்தல் ஆகாது.
பேச்சு வழக்கில் தரித்திரியம் என்பர். அவர்கள் தரித்தது --- திரிந்துவிடுகிறது என்னும் பொருளில்.
முற்காலத்தில் விகுதிகட்கு. பொருள் இருந்திருக்கும் என்பர். இருந்தது என்று நம் சொல்லாய்வு தெளிவிக்கிறது. எடுத்துக்காட்டு: திறம் என்னும் விகுதி. அது திரமான பின் பொருள் மறைந்து, வெறும் விகுதியாய் வழங்கிற்று. திறன் குறிக்கும் பொருண்மை சிறிதும் காணப்படாமல், வெறும் விகுதி ஆயிற்று. எடுத்துக்காட்டு: மூத்திரம். (மூள் திரம் > மூத்திரம்). வயிற்றில் மூள்வது .( மூள்வது: உண்டாவது ) என்பது பொருள். இஃது உடலினியற்கையால் விளைவதனால், திறவெளிப்பாடு ஒன்றுமில்லை. ஆதலின் விகுதி அல்லது இறுதிநிலை ஈந்த பொருண்மை யாதுமிலது.
திரம் ( மூத்திரம் என்பதில்) விகுதி அன்று, திரள்வது குறிப்பது எனினும் அமையும். அடிச்சொல் தொடர்பினால். மூண்டு திரண்டு வருவது எனின், திறம் - திரம் திரிபு விகுதியின் வேறுபடல் அறிக. விகுதிப்பொருள் இழக்கப்பட்டது.
மூளுதல் என்னும் சொற்பொருள் அறிக:
முல் - முன் (லகர னகரத் திரிபு)
முல் > மூல் > மூலை : சுவர்கள் தொடங்கிடம்.
முல் > மூல் > மூலிகை: நோயறுக்கும் முன்மை விளைவேர்.
முல் > மூல் > மூலம்: தொடக்கம், தொடங்கிடம், தொடங்குநூல்.
முல் > மூல் > மூள் > மூளுதல்: சிலபல ஆற்றல்கள் கூட்டியைவால் ஒன்று புதிது
தொடங்குதல்.
"முன்செய்த தீவினையால் இங்ஙனே வந்து மூண்டதுவே". - பட்டினத்தடிகள்.
முல் > முள்: செடியிற்றோன்றும் குத்தும் கடுங்கூர்ப் பொருள்.
முல் > முள் > முளை > முளைத்தல் > செடி கொடி மரம் முதலிய மண்ணினின்று
மேல்வருதல். புதிது தோன்றுதல்.
( So defined for you to comprehend the basic meaning of the root word "mul" முல் )
(You may discover for yourself other connected words from "mul")
நேரம் கிட்டினால் மேலும் சில எடுத்துக்காட்டுகளைப் பின் பார்க்கலாம்.
அறிக மகிழ்க.
நோயினின்று காத்துக்கொள்ளுங்கள்.
மெய்ப்பு பின்னர்.
{இதிற் சில சொற்கள் அழிந்துவிட்டன.
தேடித் திருத்துவோம்.}
பொருள் முற்றும் சிதையவில்லை.
புரியத்தக்க நிலையில் உள்ளது.
குறிப்புகள்
( உது + ஆர்(தல்) + அண் + அம்) - உதாரணம்.
தரித்திரம் தரித்திரியம் வேறுபாடு:
ஓருவன் வேலையிழந்து வறுமையின் வாய்ப்பட்ட போது
அவன் தரித்திரம் அடைந்தான் என்க. அவன் மேலும்
வறியவனாய் பிச்சைக்காரன் ஆய்விட்டால் அது
தரித்திரியம். திறம் (திரம்) , திரிதல் (< திரியம்).
தரித்ததில் இன்னும் மீள் திறம் உண்டா முற்றும்
திரிந்து அழிந்ததா என்பதுதான் கருதும் வேறுபாடு.
சிற்றூரார் சொல்வது "~~திரியம்."
சூழ்திறத்தார்: சூழ்திறம். இது சூழ்திறம் என்று வரின்
வினைத்தொகை; பின் சூத்திறம் ஆயின் ழ் இடைக்குறை.
பின் சூத்திரம் எனின், திரிசொல் சூ என்பது கடைக்குறை.
சூ என்பது முதனிலைத் தொழிற்பெயர். திறம் திரமாய் ஆனது
திரிசொல். திரிசொல்லில் பகுதி போல்வது தெரியினும் அதனை
ஆசிரியர் அவ்வாறு கொள்வதில்லை.
செந்தமிழ் இயற்கை மாறிய நிலைதான் காரணம்.