கடவுள் படைத்தபல காண்பனபின் இல்லை
மனிதன் அமைத்தவையும் மங்கும் அழியும்
மனிதன் புனைந்தது மண்ணாகா தோங்கின்
மனிதன்தான் சாமியென் பான்.
கடவுள் படைத்த பல - இறைவன் உண்டாக்கிய
பல பொருட்கள்;
காண்பன - உலகில் உள்ளன;
பின் இல்லை - பிற்பாடு அழிந்துவிடுகின்றன;
மனிதன் அமைத்தவை - மாந்தன் உருவாக்கிய
பொருட்கள்;
மங்கும் அழியும் = மாற்றம் அடைவதும் இல்லாமல்
ஆவதும் நிகழும்.
மனிதன் புனைந்தது - மனிதன் உருவாக்கிய ஒன்று;
மண்ணாகாது ஓங்கின் - அழிவில்லாது இவ்வுலகில்
இருந்துவிடின்;
மனிதன் தான் = மாந்தன் தானே.
சாமி என்பான் - நான் தான் கடவுள் என்று கூறிவுடுவான்.
கடவுளை விட நான் மிக்க வலியவன் என்ற முடிவிற்கு
வந்துவிடுவான் என்றவாறு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.