Pages

திங்கள், 29 ஜூன், 2015

Why Sanskrit is Indo-European?

மொழி நூலறிஞர் சட்டர்ஜியின் ஆய்வுமுடிவின் படி, சமஸ்கிருதம் திராவிடமொழிகளின் ஒலியமைப்பையே உடையது.   மேலை நாட்டு மொழிகளில் ஒலியமைப்பை எவ்வகையிலும் ஒத்திருக்கவில்லை. இந்நிலையில் உங்கள் மனத்தில் என்ன கேள்வி எழவேண்டுமென்றால். அது எப்படி ஐரோப்பிய அல்லது இந்தோ-ஐரோப்பிய மொழி ஆனது என்பதுதான்.

மேலை நாட்டு மொழிகள் அளவிறந்த இந்தியச் சொற்களைக் கடன்கொண்டுள்ளன. சமஸ்கிருதத்தை இந்தோ ஐரோப்பிய மொழி என்றால்,   கடன் என்பதை நல்லபடியாக மறைத்துவிடலாம். தாய்-சேய் உறவு கற்பித்து,  கடன்  என்பது பிள்ளைகட்கு  பிற்காலத்தில் விட்டுச் செல்லும் விழுநிதியம் போல் ஆகிவிடும்.

தமிழில் போலவே  சமஸ்கிருதத்திலும் அ-  ஆ;  இ- ஈ; உ- ஊ; ஏ;  ஐ:  ஒ- ஔ  என்று வருகிறது .(  இடைநின்ற  ரு - ரூ - லு, பின் வரும் அம் ஆகியவை தவிர்க்கப்பட்டன. ) இவை தமிழ் நெடுங்கணக்கில் ,  அம் தவிர,  வேறு வரிசையில் வருபவை என்றாலும், மேலை நாட்டு மொழிகளில் வேறிடங்களில் உள்ளவைதாம்.

உரோமன் நெடுங்கணக்கில் ஏ-பி-சி-டி என்றல்லவா வருகின்றன?  ஐரோப்பியச் சேய்களெல்லாம் ஏன் சமஸ்கிருதத் தாயைப் பின்பற்றவில்லை? கிடைத்த சொற்களைமட்டும் வாரிச் சுருட்டி வைத்துக்கொண்டார்களோ?

மொழியில் உறவு கொண்டாடி  இந்தியாவைத் தம்வசமே வைத்துக்கொள்ளவும் திருட்டை மறைக்கவும்  இது ஒருதந்திர நடவடிக்கைதான்.  மொழியாய்வு முடிபுகள் தங்கிவிட்டன; இந்தியத் துணைக்கண்டம் கைவிட்டுச் சென்ற தோல்வியே அவர்களுக்கு மிஞ்சியது.

தமிழை ஐரோப்பியத்தின்  தாய் என்று சொல்லப்  போதுமான சொற்கள் கிடைக்கும்.  முன்பு  இணையத்தில் ஒருவர் ஆய்வு செய்து  இதை  வெளியிட்டிருந்தார்.  அப்படி இருந்தும்  ஏன்  தமிழை அணைத்துக்கொள்ளவில்லை?    அப்படி  அணைத்துக்கொண்டால்  ,  அதில் வெள்ளையர் அரசுக்கு என்ன அரசியல் ஆதாயம் கிட்டி  யிருக்கக் கூடும் ?  தமிழிலிருந்து  வெள்ளையருக்கு  எந்தப்  பயனும்  கிடைத்திருக்கும் என்று சொல்ல முடியாது.   

ஞாயிறு, 28 ஜூன், 2015

பேரா. வையாபுரிப்பிள்ளை சொல் ஆராய்ச்சி.



பேராசிரியர் வை.  அவர்கள் சட்டம்பயின்று வழக்குரைஞர் ஆனவர். தமிழ்ப் பேரகராதியின் பதிப்பாசிரியராய் அமர்ந்த பின் அவருக்குச் சொல் ஆய்வில் மிகுந்த விருப்பம் உண்டாயிற்று. பேரகராதியில் எது எந்தமொழிச் சொல் என்று குறிக்க வேண்டி யிருந்தமையால் தேடிக் கண்டுபிடிக்கவேண்டிய நிலையில் அவர் இருந்தார்.  இவர்க்குமுன் நூல் எழுதியவர்கள் சொன்னதைக் கண்டஞான்று அதை மேற்கொள்வது ஒரு வழி.
அஃது இல்லாதபோது,  ஒரு சொல் தமிழா  அன்றா என்றறிய, வேறு மொழி அகராதிகளில்  அச்சொல் இருக்கிறதா என்று அறியவேண்டும்..  அப்படித் தேடுங்கால், கண்டால் அது அந்தமொழிக்கு உரியது என்று எடுத்துக்கொண்டுவிடலாம்.  இந்த உய்த்தியை இவர் கையாண்டதாகவே தெரிகிறது.

இந்த உ(ய்)த்தியை நாமும் மேற்கொண்டு  கீழ்க்காணும் சொல்லை மூலம் அறிந்துகொள்வோம்.

சொல்:    கட்டுமரம்.

ஆங்கிலத்தில்  கட்டமரான்.

ஆங்கில அகராதியில்  இருக்கிறது.  அங்கு மூலம் குறிக்கப்படவில்லை என்று வைத்துக்கொள்வோம்.

முடிவு:  கட்டுமரம்  ஆங்கிலச்சொல்.

கட்டமரான் என்பதே கட்டுமரம் என்று தமிழில் வருகிறது.

மிக்க மகிழ்ச்சி தரும்  முடிவு.

சரியா?

சனி, 27 ஜூன், 2015

Ancient Tamil Civilization

Ancient Tamil Civilization - Truths
www.youtube.com/watch?v=1I3byXmzBi8www.youtube.com/watch?v=1I3byXmzBi8

வியாழன், 25 ஜூன், 2015

சிற்(சபை)

ரகரம் லகரம் என்பன ஒன்று மற்றொன்றாகத் திரிவதை முன்னர் எடுத்துக்காட்டியுள்ளோம்.  முன் இடுகைகளைப் பரவலாக ஊடுருவிச் செல்வீஈர்களானால், இதை முறைப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு வாசிப்போருக்கு ஏற்படும்.  ஒரு குறிப்புப் புத்தகத்தில் ல- ர திரிபுகள் என்று ஒரு பகுதியைத் தொடங்குங்கள்.

ஒரு சீன மேற்பார்வையாளர் தம் கீழ் வேலை செய்வோனை "ஒய் லாமா,  ஒய் லாமா " என்று கூப்பிட்டார்.  வேலையாளின் பெயர் "ராமா"..  இதிலிருந்து,  தலை ராமா என்பதே "தலை லாமா" என்று ஆயிற்றோ என்று  சிந்திக்கவேண்டியுள்ளது.  ராமர் - ஆட்சி மேலதிகாரத் தலைவர் அல்லது சுருக்கமாகத் "தலைவர்"  "அரசர்".
தலைலாமாவும் ஆட்சித் தலவரே,  --  மதத்திற்கு.

 ரகரம் உள்ளபல  சொற்கள்  லகரம் பெறும்

தமிழில் எருது என்பது துடவ மொழியில் எலுது  (எல்த்) ஆகிறது..

எருது (தமிழ் எழுத்துமொழி) >  எர்து ( தமிழ்ப் பேச்சு)   >   எல்த்

இன்னொருசொல்லில்,  இது மடங்கித் திரும்புகிறது.

சிற்றம்பலம் >  சித்தம்பரம் >  சிதம்பரம்.

இங்கு  " ற்ற" > "த்த" வாகி,  த்த > த ஆகி,  ல> ர வாகிவிட்டது.

இப்படிப் பல.

அம்பலத்துக்குப் பதில் சபை என்பதைப்  போடுங்கள்.

சிற்(றம்பலம்) >  சிற்(சபை)
அல்லது :   சித்(தம்பலம் )  >  சித் (சபை)

பெரிய வேலைதான்.

இலக்கணத்துள் சென்று  சறுக்கி விளையாடாமல்,  பிடுங்கினோம், அப்பினோம் என்று வேலையை முடித்துவிடலாம்.

This post became "corrupted" and had to be re-edited./restored.

திங்கள், 22 ஜூன், 2015

சாத்தனாரின் இனிய......பாடல்

சாத்தனாரின் இனிய குறுந்தொகைப் பாடல் ஒன்று நம்மை அழைக்கிறது. அதனை உடனே இதுபோது பாடி இன்புறுவோம்.

பாடல் 154.

யாங்கு  அறிந்தனர்கொல்  தோழி ?  பாம்பின் 
உரி நிமிர்ந்தன்ன உருப்பு அவிர்  அமையத்து 
இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி 
பொறி மயிர் எருத்தின் குறு நடைப் பேடை 
பொரி கால் கள்ளி விரி காய் அம்  கவட்டுத் 
தயங்க  இருந்து புலம்பக் கூஉம் 
அருஞ் சுர வைப்பிற் கானம் 
பிரிந்து சேண் உறைதல் வல்லுவோரே.

அரும்பொருள்:

உரி =  (பாம்பு கழற்றிய )  சட்டை;  நிமிர்ந்தன்ன -  மேலே கிளம்பியது போல் .
உருப்பு =  வெப்பம். ; அவிர் - விளங்கு ;  (ஒளி வீசும் ); அமையம் =   சமயம்; நேரம் ;
இரை -  உணவு;   வேட்டு -   விரும்பி ' உள்ளி = நினைத்து;  

பொறி = புள்ளிகள் ;   எருத்து -  கழுத்து; பேடை -  பெண்புறா .
பொரி  - பொரிந்த ;  கள்ளி -  கள்ளி மரம் ; விரி காய் -  வெடித்த காய் ;
அம்  கவட்டு =  அழகிய கவட்டில் ;  கவடு '  =  பிரிவு ,  கிளை ;
தயங்க = தெரியும்படியாக (இருந்து ;)
புலம்ப =  தனிமையாக ; கூ உம்  = கூவும் ;
அருஞ் சுர வைப்பிற் கானம்  =  கடக்க அரிதாகிய பாலைக்   காடு ;
சேண் = தொலைவில்;  உறைதல் =  வாழ்தல் 
வல்லுவோர் =  முடிந்தோர்; இயன்றோர்.

இப்போது  அருஞ்சொற்களின் பொருள் கண்டுகொண்டீர்கள்; பாடலை 
மீண்டும் படித்துப் பாருங்கள்.

விளக்கம் கொண்டு தருகிறேன்.

இந்தப் பாடல் தரும் காட்சி நண்பகல் வேளையில் நடைபெறுகின்றது.   பாடலை ஊன்றிப் படித்தால் அது தெரியும். உருப்பு அவிர் அமையம் என்றால் வெப்பம் மிகுந்து  ( துன்புறுத்துகின்ற) நேரம். இது நண்பகலாகத்தானே இருக்க முடியும்?  ஒளியுடன் கூடிய வெப்பமான நேரம்.


அமையம் என்பது அமைந்த நேரம். இதுபின் சமையம் என்றானது.  என்றால் அது சமைந்த நேரம்.  பின் இவை அமயம் என்றும் சமயம் என்றும் ஐகாரம்  குறுகி உருப்பெற்றன. இவை தமிழ்த் திரிபுகள். அமையம் சமையத்துக்கு ஆகவில்லை என்ற இணைமொழியின்   மூலம்  இதை வழக்கிலிருப்பது என்று அறிக. நேரம் என்பது நேரும் காலம்; அமையம் என்பது அமையும் காலம்

ஒரு காலத்துக்கும் இன்னொரு காலத்துக்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.  நேர்வுகள் அல்லது நிகழ்வுகளே காலத்தை நமக்கு வேறுபடுத்துகின்றன. இதைத் .தமிழ்மொழி வல்லுநர்கள் அறிந்து இச்சொற்களைப் படைத்தது  அறிந்தின்புறற்பாலது.

இது புலம்பல் அமைந்த அமையம் அல்லது சமையம். பாம்பின் தோல் மேல் கிளம்புவது போன்ற வெப்பத்தைச் சூழத்தருகின்ற நண்பகல் அமையம்.  அவ்வளவு சூடாம்


வெப்பம் துன்பத்தை மிகுத்து வருத்தும் சூழலைத் தருவதாகிவிட்டது   

இரை வேட்டு எழுந்த  சேவல் என்றதனால், ஆண்புறா இரை  தேடிப் பறந்து சென்றுவிட்டதென்று அறிக.  இங்கு சேவல் என்றது ஆன்புறாவினை.  கோழிச்சேவல் அன்று,   சேவல் -  தலைவர் என்பது   குறிப்பு ..  பொருள் தேடித் தலைவர்  போயினார்.


பொறிமயிர் எருத்து :  -  புறாவின் கழுத்துப் பகுதியில் உள்ள பொறிகளைக் குறிக்கிறது.. நம் தலைவி கொஞ்சம் அங்குமிங்கும் நடக்கலாம்; வெகுதொலைவில் சென்று தலைவனைத் தேடற்குரியவள் அல்லள். குறுகுறு என்று குறுகிய நடையே உடைய பெண்புறா,  தலைவியுடன் ஒப்புமை உடையதேயாகும்.  தேடாது; வெகுதொலைவு நடவாது.

அருஞ்சுரம்  என்பது  பாலை நிலம் . வைப்பு  என்பது இடம்.  வையகம்  வையாபுரி என்பவற்றை  முன் இடுகைகளில் விளக்கியுள்ளேன்.   வை  என்பது இடம்  குறிப்பது     புலம்பு என்பது தனிமை என்பது தொல்காப்பியம் தரும் பொருள்.

இன்னொன்றையும் நாம்  நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.  தலைவனும்  தலைவியும் பாலை நிலத்தவர்கள் அல்லர் 
  பாலை  நிகழ்வுகளை தலைவி எங்கனம்  இத்துணைத்  துல்லியமாய்  அறிந்து  கூறுகிறாள் ?     இவை தலைவனிடமிருந்தே  அவளறிந்து கொண்டவை.  இவற்றை  நன்கு அறிந்த  தலைவரா  என்னிடம் இப்போது இப்படி இரக்கம் இல்லாமல்  நடந்துகொள்கிறார்  என்ற கேள்வி  அவள் மனத்தே எழுகின்றது 
இதன் காரணமே அவள்  "யாங்கு அறிந்தனர்கொல் " என்று கேட்பதற்குத்  தூண்டியது.  பெண்புறாவின் பாலை நிலப் புலம்பலை அறிந்தவராயிற்றே  அவர்!

வேறு திணையைச் சேர்ந்த தலைவி  பாலை நிலத்து நிகழ்வினை சொல்லித்  தோழிக்கு விளக்குவது இப்பாடல்.

சாத்தனார் தண்டமிழ் ஆசான்.  மணிமேமேகலைக் காப்பியம் தந்தவர்.  பல்வேறு  மதங்களையும் நன்கு அறிந்த பெரும் புலவர்.  அகத்திணை ஒழுக்கத்தையும் விரிவாய் உணர்ந்தவர்.  வெவ்வேறு  நில நிகழ்வுகளையும்  இயைத்துக் கூறும் ஒரு பாடலைச் சங்கப் புலவர்களுக்குப் பாடி உணர்த்திய பான்மை ஈண்டு அறியத்தக்கது.    will edit



   

ஞாயிறு, 21 ஜூன், 2015

Cultural ties with Indonesia

இந்தோனீசிய மொழியில்  கலந்துள்ள சமஸ்கிருத மற்றும் திராவிடச் சொற்களை அறிந்துகொண்டால்,  நாம் ஒரு வேற்றுமொழிக்காரருடன் உரையாடுகிறோம் என்பதை மறந்துவிடத் தோன்றும்.  (மலாய் மொழியிலும் மிகுதியான சொற்கள் உள்ளன). இவ்வயற் சொற்களின் மிகுதியை  அம்மொழிகளின் அறிஞர்களும் ஆய்ந்து  விளக்கியுள்ளனர். சோழப் பேரரசர்கள்  கொண்டிருந்த அரசியல் மற்றும் கலாசார உறவுகள் ஒரு முன்மைக் காரணம் என்பது மிகையன்று.

இந்திய மொழிகளில் வழங்கும் "பரம்" என்ற சொல்லினின்று உருவாகிய "பரமிதா" என்பது ஓர் அழகான பெயர் ஆகும். இந்தப் பெயரை வைத்துக்கொண்டிருப்பவர்  ஓர் இந்தோனீசியப் பாடகி..  இதேபோல் தேசம் என்ற சொல்லிலிருந்து உருவானது "தேசி" என்ற பெயர்.  இது "டெய்சி" என்ற ஆங்கிலப் பெயருடன் ஒலிமயக்கம் உடைய அழகைக் கொண்டுள்ளது.  "இரத்தினசாரி" என்பது நன்கு உலகறிந்த பெயராகும்.

பரமிதா பாடும்  "ஜஞ்ஜி கு" மற்றும் " ஜாஙான் அடா ஆயர் மாத்தா" முதலிய பாடல்களை இணையத்தில் கேட்டு மகிழுங்கள். " நீ உறுதி சொன்னாயே எனக்கு"  என்றும்  "கண்ணீர் விட வைக்காதே" என்றுமெல்லாம் இவர் பாடுவார்.  காதல் பாட்டுக்களே முதலிடத்தில் உள்ளன - எல்லா மொழிகளிலும்.

வியாழன், 18 ஜூன், 2015

savam utsavam

உத்சவ என்ற சொல்லை இதுகாலை கவனிப்போம்.

இது  ஒரு  சமத்கிருதச் சொல்.

இதன் பொருளை நோக்கினால்:


1 சவ :  செடியிலிருந்து எடுக்கப்படும் சாறு.  ஊற்றுதல்:   நிலா . ;தேன் .
தொடங்குவோன்   பின்பற்றுவோன்  தூண்டுவோன்  தலைவன்; இன்ன பிற.  கட்டளை;  திருமுழுக்காட்டு முதலிய தொடக்கச் செயல்பாடுகள்; பலியிடுதல்  ஒரு வருடம்;  வழித்தோன்றல்கள் 


தமிழில் பிணம் என்று பொருள்தரும் சவம் என்ற சொல்லுக்கும் மேற்கண்டவற்றுக்கும் தொடர்பில்லை.

சவம் என்பது சாவு என்ற சொல்லினின்றும் பிறக்கிறது.

சாவு+ அம் = (சாவம்)  > சவம்.  இங்கு முதலெழுத்து குறுகிற்று.
சா >ச.   இதுபோன்ற குறுக்கங்கள் முன்பு ஈண்டு விளக்கப்பெற்றுள்ளன. (பழைய இடுகைகளைக் காணவும்).

உற்சவத்தில் உள்ள சவம், அல்லது ஸவம், சவத்துடன்  (பிணத்துடன்) தொடர்பில்லாதது.

சவை - சுவை;  சவைத்தல்- சுவைத்தல். 

சவை + அம்  =  சவம் (  ஐகாரம் கெட்டது )

ஓரிடத்தில் மக்கள் கூடி ஒரு நிகழ்வினைக் காணுதலைக் குறிக்கும் சொல்  இதனின்றும் தோன்றியிருத்தல் கூடுமென்பது ஆயத்தக்கது.

செவ்வாய், 16 ஜூன், 2015

பழமும் தோலும

வாழைப்பழத்தை உண்டுவிட்டுத்
தோலை ஆட்டுக்குக் கொடுத்தேன்;
ஆடு அதனைச் சுவைத்து உண்டது;

பழம் கொடுக்காமல் ஆட்டை ஏமாற்றிவிட்டேனே

என்று வருந்தி

இன்னொரு பழம் உரித்துப்
பழத்தை மட்டுமே கொடுத்தேன்;

பழத்தை விரும்பாமல் தரையில் போட்டது.
தோலைப் பார்த்தது

தோலை உண்டு மகிழ்ந்தது.

பழம் தரையில் கிடந்தது.     ஆட்டுக்கோ அதில் ஆர்வமில்லை.

பண்பறிந்து செயலாற்று என்ற வள்ளுவனின் குறள் நினைவுக்கு வந்தது






\\\



திங்கள், 15 ஜூன், 2015

சீரகம் என்றே சொல்லவும்

உடம்பினைச்  சீராக வைத்துக்கொள்வதற்கு உதவும் விதைக்குச் சீரகம் என்று பெயரிடப்பெற்றது. பின் இது சோம்பு என்ற சற்றுப் பெரிய விதையுடன் ஒப்பிடப்பட்டு  நச்சீரகமென்று பெயர்பெற்றது.

ந என்ற ,முன்னொட்டுப் பெற்ற து நல்லது என்றும் சிறியது என்றும் பொருள்படும்.  இது சில புலவர் பெயர்களிலும் வரும். நப்பின்னையார் நச்செள்ளையார் முதலியன  காண்க.

இன்று சீரகம் என்பது ஜீரகம் என்று  மாறிவிட்டது;  சீனி என்பது ஜீனி என்று மாறிவிட்டது போன்றதே இது.

இதைச் சீரகம் என்றே சொல்லவும் எழுதவும் வேண்டும்,

புதன், 10 ஜூன், 2015

வேகுமே உள்ளம்

இப்போது  நம் ஔவைப் பாட்டியின் ஓர் அழகிய சங்கப் பாடலைப் பாடி இன்புறுவோம்.  இது குறுந்தொகையில் 102வது பாடல் ஆகும்.

உள்ளின் உள்ளம் வேமே;   உள்ளாது 
இருப்பின் எம் அளவைத்து அன்று ;  வருத்தி 
 வான் தோய்வு அற்றே காமம்;  
 சான்றோர் அல்லர் யாம் மரீஇ யோரே. 

உள்ளின் உள்ளம் வேமே  -   காதலரை நினைத்தாலோ உள்ளம்  மிகத் துன்புறுகின்றது ;    வேமே என்பது வேகுமே என்பதாம்   இதிற் குகரம் தொகுந்து நின்றது .
 உள்ளாது இருப்பின் எம் அளவைத்து அன்று -  காதலரை நினைக்காமல் இருப்பது எமது  ஆற்றலுக்கு உட்பட்டது  அன்று  
வருத்தி  வான் தோய்வு அற்றே காமம்  -   இக்காதல் தந்த வருத்தமோ வானத்து மேல் சென்று முட்டியது போல்  நிற்கின்றது ;
யாம்  சொல்லத் தக்கது என்ன ?
சான்றோர் அல்லர் யாம் மரீஇ யோரே. -  எம்மை  மருவிப் பிரிந்தவர் நல்லவர் அல்லர் என்பது தவிர.
சங்க காலத்தில் காதல் மணங்களே .நிகழ்ந்தன  காதலித்த  பெண்களைக்  கைப்பிடிக்காமல் தொலைந்துவிட்ட ஆடவர்களால் நேர்ந்த  சீர்கேட்டைத் தவிர்த்தல் பொருட்டே  பெற்றோர் பார்த்துவைக்கும் மணவினைகள் நடப்புக்கு வந்தனவா என்பதை வரலாற்று ஆய்வாளர்களிடம் விட்டுவிட்டுப் பாடலை நுகர்வோம்.

edit later  



ஞாயிறு, 7 ஜூன், 2015

Malaysian Earthquake, reasons and beliefs,,,,,,

மலைவாழ்  ஆவிகளை
மதிக்காமல் படமெடுத்துக் 
கொலைசூழ் ஆத்திரத்தைக்
குத்திவிட்ட காரணமோ
நிலையாழ் பெரும்பாறை
நிலம்தளர்ந்து புரண்டிழிந்து
தலைகீழ்த் தடுமாற்றம்
தந்துயிர்கள் குடித்திடவே

இங்கு  மலை வாழ் ஆவிகள் என்றது கோத்த கினபாலு என்ற மலேசிய சபா  மாநில மலைப் பகுதிகளில் வாழ்வனவாக அவ்விடத்துப் பழங்குடியினரால் நம்பப்படும் ஆவிகளை,

ஐரோப்பியர் சிலர் அம்மணப் படங்களை அங்கு எடுத்து ஆவிகட்கு ஆத்திரம் ஊட்டியதாக ஒரு குறை எழுந்தது. அதனால்தான் நிலநடுக்கம் நேர்ந்ததாம்.  

காரணமோ என்றது இதுதான்   காரணமோ என்று வினவிய வாறு.

நிலையாழ் என்பது நிலை ஆழ் என்று பிரியும்,  இது ஆழ் நிலை என்று பொருள்படுவது.

ஆழத்தில் நிலை கொண்டிருந்த பாறைகளுக்கு இது அடையாக வருகிறது. உட்பதிந்திருந்த பாறைகள் நில நடுக்கத்தில் பெயர்ந்து வீழ்தல்  வரணிக்கப் படுகிறது.

இழிந்து என்பது இறங்கி  என்று பொருள் தரும்.

மற்ற  வரிகள் எளியவை


16 dead after Malaysia quake loosed 'rocks as big as cars'

https://sg.news.yahoo.com/singapore-says-5-students-1-teacher-killed-malaysia-060326050.html

https://sg.news.yahoo.com/democracy-great-game-musical-chairs-says-dr-m-160600748.html


வெள்ளி, 5 ஜூன், 2015

Malaysian PM and his critics' challenge

தோன்றின் புகழொடு தோன்றுக
வள்ளுவப் பேரறிவாளன்
வல்லோனாய்த்   தங்க  விழைந்தானுக்கு
 வழங்கிய அறிவுரை இதுவாகும்

தோன்றித் தொந்தரவுகளே வருமென்றால்
தோன்றுவதுதான் எதற்கு?
என்ன பயன் நாட்டுக்கு தனக்கு? பிறர்க்கு?
தோன்றாமையே யாண்டும் நன்று.

கணக்குகள் இன்னும் பார்த்து முடிக்கவில்லை
பிணக்குகள் ஆகையால் வருமே
மணக்கும் மல்லிகைக்  காடாகாதே
 மாந்தர் சேரும் இடமது:
நினைக்கும் இன்னல்களும்
நினைக்கவே  மாட்டாத இன்னல்களும்
ஊறும் இடமாகும் அது
மாறாது துன்பம்


https://sg.news.yahoo.com/malaysian-pm-slammed-failing-face-critics-scandal-074532124.html



செவ்வாய், 2 ஜூன், 2015

சுழல்சுடியும் தோட்டாவும்.

http://sivamaalaa.blogspot.sg/2015/06/blog-post.html


தொடுதல் என்பதன் பொருளை முன் இடுகையில் குறித்திருந்தேன்.  இவை நீங்கள் நன்கு அறிந்தனவே . தோண்டுதல் என்ற பொருளும் அங்கு சொல்லப்பட்டதேயாம் .  "தொட்டனைத் தூறும் மணற்கேணி " எனத் தொடங்கும் தெள்ளுதமிழ் வள்ளுவனாரின் குறளையும் நீங்கள்  ஈண்டு நினைவு கூர்தல் வேண்டும்.  இது (தொடுதல்) பல்வேறு பொருட்சாயல்கள் உள்ள சொல் என்பதறிக.

கேணி தோண்டினர் என்பதைக்  கேணி தொட்டனர் என்று உயர்தரத் தமிழில் எழுதலாம். இப்போது இது புரியாது போகலாம். உரை தேவைப்படும்.   மண் தொட்டேன், நீர் சுரந்தது என்றால்,   I touched the soil and water gushed forth  என்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டு  இவள் ஒரு மந்திரவாதச் சாமியார் போலும் என்றும் கூறப்படும் சாய்கூறு  தோன்றலாம். நிற்க .

தோண்டினால் (தொட்டால்)  தொட்டபொருள் காதாக இருந்தால்,  துருவப்படும். துவாரம் அல்லது துளை உண்டாகும்.  அதில் அணியும் பொன் நகையை "தோடு" என்கிறோம்.

தொடு >  தோடு.

மண்ணில் தோண்டப்பெற்ற துளை  பாம்பு பூச்சிகள் முதலியன நுழைந்து கொள்ள  இடந்தரும்.  காதணிக்குத் தோண்டிய துளை போல் துருவி மறுபக்கம் வெளி வர இயலாது. அந்தத் தோட்டின் இறுதி மண்ணிற்குள் அமையும்.  இத்தகைய துளையும் "தோடு"  என்று சொல்லப்படும்

இதில்   நீங்கள்  கவனிக்க வேண்டியது:   தோடு என்ற சொல், துளைக்கும் பெயர்.  ( எ-டு : மண் தோடு )    துளையில் அணியும் அணிக்கும் பெயராகிறது.  இப்போது அணிகலன் குறிக்கும் தோடு என்பது மெல்ல மறைந்து வருகிறது. 

Revolver என்ற  சுழல்சுடியில் பன்னிரண்டு தோடுகள் உள்ளன. இவற்றுக்குள்  தோட்டாக்கள் நிரப்பப் பெற்று (loading revolver with ammunition)  கருவி சுடத் தயாராகிவிடும்.  For safety, just load 11,  say experts.  

தோட்டிற்குள் வைக்கப்படுவது "தோட்டா ".

தோடு >  தோடு+ ஆ =  தோட்டா.

"ஆ " என்பது தொழிற்பெயர் விகுதி.   கல் >  கலா.   உண்>  உணா.   நில் >  நிலா.  இவற்றை ஈண்டு விரித்தல் ஆகாது.

ஆ என்பது விகுதியாக இருப்பதோடு ஆதல் என்று குறிப்பால் உணர்த்துவதால்,  தோட்டிற்கு ஆவது தோட்டா என்று விரித்துணர்க.

=========================================================


toTu-tal01 1. to touch, come in contact with, feel or perceive by the touch; 2. to handle, take hold of use; 3. to be connected, united with or joined to; 4. to put on, as a ring, clothes; 5. to dig, scoop out, excavate; 6. to pierce through; 7. to begin; 8. to discharge, as an arrow or other missile; 9. to eat; 10. to think; 11. to play, as a musical instrument; to beat, as a drum; 12. to fasten, insert; 13. to strike, beat; 14. to strain, squeeze out, as juice; 15. to swear upon; 16. to take up, lift; 17. to wash, as clothes; 18. to have illicit intercourse, as with another's wife; 19. to wear, as shoes; to occur, happen, come into being   (Tamil Lexicon )

திங்கள், 1 ஜூன், 2015

சாக்கடை மூடி திருடி

சாக்-கடை மூ-டிகட்-கு  நல்ல  விலை!யே----  அவை
திரு-டியே விற்-பது-வும் என்ன கலையே!
பார்க்-கிற சாலையிரு பக்கம் வேட்டை --- அரசு
பணக்குவை நேர்தலையில் வீசும் சாட்டை.

காவல் துறைமாந்தர் கொண்ட விழிப்பு --- கள்ளர்
தமக்கு விளைத்திட்ட  கம்பி அழைப்பு
மேவும் பொதுவார்க்கு வந்த நலமே  -  நாடு
மேலில் செல்லல்குறிக்  கின்ற  புலமே.


https://sg.news.yahoo.com/red-handed-father-daughter-drain-cover-thieves-caught-224600645.html

Red-handed! Father-and-daughter drain cover thieves caught in the act

the root thodu and its offsprings

தொடு என்பதோர் அழகிய தமிழ்ச் சொல். இதுபோலும் பல சொற்கள் ஒவ்வொரு மொழியிலும் வாழ்கின்றன.  மனிதர்கள்  போலும் அவை  குடும்பமாக வாழ்கின்றன.  ஆகையால் ஒரு சொல்லின் குடும்பத்தை அறிந்துகொண்டால் அச்சொல் எந்த மொழிக்குரிய சொல் என்று  அறிந்துகொள்ளலாம் . குடும்பத்தை அறிய  அடிச்சொல் ஆய்வில் முனைந்து  ஈடுபடுதல் வேண்டும் .

தொடு>.தொடர்

தொடுதல் என்னும் நிகழ்ச்சி பலவாறு நிகழலாம்.  \தொடுகின்ற இடத்திலிருந்து  நீண்டு செல்வதை  தொடர்தல் என்கிறோம்.  அர்  என்னும் வினையாக்க விகுதியைப் பெற்று  இச்சொல் அமைந்துள்ளது.   இப்படி அமைந்த சொற்கள் பலவாம் .   இடு >  இடர்; படு >படர் ;   அடு > அடர்;   அர்  என்பது  பெயர்ச்சொல்லிலும்  வரும் 

தொடு  >  தொடை.

இது  ஐ என்னும் இறுதியைப் பெற்று அமைந்த சொல். உடம்பிலிருந்து தொடர்வது தொடை.
அசை , சீர், தளை  :   தொடுக்கப்படுவது தொடை.  

தொடு  தொ டி

கைகளைத் தொட்டு  நிற்பதுபோல் அணியப்படுவது தொடி  அல்லது வளையல். அன்றித்    தொடுதல் என்பது  தோண்டுதல் என்றும் பொருள்  பெறும் ஆதலின்  தோண்டப் பெற்று வளையமாக்கப் பட்டது  என்றும் பொருள் அமைதல் கூடும்.   நடுவில் உள்ளதைத் தோண்டி எடுத்துவிட்டால் சுற்றி இருப்பதோ வளையமாகிவிடும். இதற்கு மூங்கில் போலும் வட்டமான பொருள் வேண்டும் , பண்டையர் எப்படித்  தொடிகளைச் செய்தனர் என்பதை  இதிலிருந்து சொல்லலாம்  குறுக்கில் அறுத்து நடுவில் உள்ளீடுகளைத் தோண்டி எடுத்திட வேண்டும் .

தொடர்வோம்