Pages

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

Naughty mouse, I caught you!

குறும்பு எலி

கூரையின் கீழடைப்பில்
குடுகுடு என்றே  ஓடினாய்.
யாருமுனை வெறுத்தொதுக்க‌
கீச்சுக் கீச்சென்று கத்தினாய்!
குளிரூட்டியின் வெளிக்குழாயைக்
குறுகுறு என்று கத்திக்கொண்டு
நள்ளிரவும் பார்க்காமல்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍----
சுள்ளியென்று நினைத்தாயோ
கடித்துக் குதறிவிட்டாய்.

பொறிவைத்தேன் மாட்டிக்கொண்டாய்.
பரிவுபெறும் பார்வை ஏனோ?
அதிகாலை உனைக்கொண்டுபோய்
ஆற்றங்கரையில் எறிந்திடுவேன்.
கொல்லமாட்டேன், அஞ்சாதே.
வினாயக ச‌துர்த்தி இன்று.
வினை ஆயவை விலக்கிடுவேன்.
வினை ஆயகத் தலைவன் அவன்.
எனையும் அவன் ஆயவிடேன் 
வினா எழ இடங்கொடாமல்
உனைத் தொலைவில் சேர்த்திடுவேன். 

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

காணாத ஞாலமே Poet F Thompson

காணவும் இயலாத ஞாலமே ‍‍‍‍--- நீ எம்
கண்களில் படுகின்றாய்;
தொடவும் அமையாவிப் பாரிடமே ---அண்டித்
தொடுதலும் அடைகின்றோம்!

அறியவும் இயலா உலகுனையே ---- யாம்
அறிந்தே நடக்கின்றோம்;  ‍‍
அறியா நிலையில் யாமுனையே ‍---- இறுக‌
அணைத்துக் கிடக்கின்றோம்,

******

மாகடல் மாந்திட மீனெழுமோ‍‍----காற்று
மாறறி கருடன் தாழுறுமோ?
மேகத்து மிசைமினும் மீன்களையே‍---கேட்போம்
மேலிருப்பானோ  நீலவானில்?
ணா 



குறிப்புகள்:

ஞாலம் -பூமி       அமையாவிப் பாரிடம் --  இயலாத இந்தப் பூமி,
அண்டி - (உன்னை) அணுகி .
மாந்திட  - to experience; to enjoy or indulge.  
எழுமோ -  to soar  above,  பறத்தல் போல் மேலே உயர்தல்.
காற்று  மாறு  அறி கருடன் -  காற்றின் வீசும் திசை அறியும்  கருடன்.
கீழுறுமோ -  கீழே இறங்கி  அதை அறியுமோ?  (எ-று ). 
மிசை  -  மேலே .  மினும் =  மின்னும்   மீன்களையே -  நடசத்திரங்க்களையே.
மேலிருப்பானோ  நீலவானில்?   -  இந்த நிகழ்வுகளுக்கெல்லாம்  மேலே  நீல வானுக்குள்  அவன் (கடவுள்)  இருக்கின்றானோ?

பூமியில்  நமக்குப் புரியாத பல நடக்கின்றன.  அதில் நாமும்  அறிந்தோ அறியாமலோ  இணைந்து கிடக்கின்றோமே! இவையெல்லாம்  நடத்திக்கொண்டு  இறைவன் மேலிருக்கின்றனோ?  யாரைக் கேட்பது?   விண்மீன்களைக்  கேட்போமா ?  === என்று கவி கேட்கின்றான்.






O World Invisible We view thee!  Poem by Francis Thomson,  (1859 - 1907)    first two stanzas translated       The poet's  tomb bears the last line from a poem he wrote for his godson - Look for me in the nurseries of Heaven[.

ref dbv415  

Steady Malaysian Economy & Growth.


ஏற்ற இனிய 
மலேசியப் பொன்னாட்டில்
ஆற்றொழுக்குப் போலும் பொருளியலே‍‍!
நேற்றேபோல்
கூற்றம் எதிர்படாக்
 கூன்படாக் கொள்நிலையில்
ஆற்றலோ  டார்க்கும்
நெறி.

Economy will remain on steady growth path.
Consumer price index will tend to about 3%.
There may not be any fundamental shifts in liquidity.

Tan Sri  Dr Zeti.  Bank Negara Governor (Malaysian Reserve Bank)


https://www.google.com.my/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=3&cad=rja&uact=8&ved=0CC4QFjAC&url=http%3A%2F%2Fwww.nst.com.my%2Fnode%2F23421&ei=rNf-U8HsN5ahugT52IDwDQ&usg=AFQjCNG7MjPUE5RgNbXU1uqExQQfnlMW9g&sig2=C2hwZIEhv_bs0QAgt59Qvg&bvm=bv.74035653,d.c2E



Malaysia posts stronger 6.4pc growth in Q2

BY RUPA DAMODARAN - 15 AUGUST 2014 @ 12:09 PM
KUALA LUMPUR: The Malaysian economy chalked a remarkable 6.4 per cent growth in the second quarter.
Bank Negara Malaysia Governor Tan Sri Dr Zeti Akhtar Aziz said the growth forecast of 4.5-5.5 per cent will be revised upwards in the upcoming Budget.
For the first half of the year, the economy grew by 6.3 per cent.
The first quarter surged by 6.2 per cent.
Inflation stabilised at 3.3 per cent during the period.
Zeti said private investment remained strong, with capital spending in the services and manufacturing sectors.
For the second quarter, all the sectors enjoyed strong growth except services and agriculture.

புதன், 27 ஆகஸ்ட், 2014

புதிய மொழிபெயர்ப்புகள்



தியரி (theory) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் மொழிபெயர்ப்பு தெரிவியல் என்பது. இதை அமைத்தவர் தேவ நேயப் பாவாணர்.  பிராக்டீஸ்  (practice )  என்பதற்கு புரிவியல் என்பார் அவர். இவை நன்கமைந்த மொழிபெயர்ப்புகள்.

மற்ற முனைவர்கள் / அறிஞர்கள் இதைத் தெரியம் என்று சுருக்கியுள்ளார். இது "தெரியும்" என்பது போல் கேட்கும் எனினும் வேறு சொல் என்று அறிக‌ 

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

"இல்கொள்கை" நாத்திகம்

இலவசம் ‍  காசு இல்லாமலே கை வசம் வரும் நிலை அல்லது பொருள். இதன் அடிச்   சொற்கள் இல் என்பதும் வசம் என்பதும் ஆகும். வசம் ‍ :  வை> வய் > வயம் > வசம். இதை சில தடவை எழுதியுள்ளேன்.

இலாவணியம்  :  இலா = இல்லாத; அணி = அழகு;  அம் = விகுதி. என்ன பொருள்?  ஊரில் இல்லாத அழகு;  உலகில் இல்லாத அழகு; பேரழகு என்று பொருள்படும்.

இவை எல்லாம் பிற்காலப் புனைவுகள். எடுத்துச் சொன்னாலே புலப்படும்.

 இவற்றைப் பின்பற்றி, அறிஞர் அப்பாத்துரையார் ஒரு சொல் புனைந்தார்.
அது நாத்திகம் என்பதற்கு ஒரு தமிழ்ச்சொல்.  அது: "இல்கொள்கை" என்பது.
இன்னுமது பெரிதும் வழக்கிற்கு வந்துவிட்டதாகத் தெரியவில்லை.

லாவண்ய என்ற சொல், எப்படி அமைந்தது என்பதில் சமஸ்கிருத பண்டிதர்கள்  தங்களுக்கு ஐயப்பாடு உண்டென்கிறார்கள். சமஸ்கிருதமென்று உறுதிப்படுத்திவிடவில்லை,

இல்லை என்ற தமிழ்ச்சொல்லை எடுத்து இத்துணை புனைவுகள் புரிந்ததும் ஒரு  பெருந்திறனேயாகும்,

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

கோடிகளாய்க் குவிந்தி டாதோ?


அரசினரின் வருமானம் உயர வேண்டின்
ஆங்காங்கு சாலைகளில் கடப்பு வாசல்,
வருவாசல் செல்வாசல் இரண்டு பக்கம்,
வண்டிகளைத் தடுத்திடவே குறுக்குச் சட்டம்!
ஒருவழிக்குத் தொகையொன்று  நிறுவி அட்டை
ஒத்திஎடுத் திடும்போது கழிக்கும் காசை!
இருவழியும் போம்வண்டி இடும்ப ணத்தை.
எடுத்தெண்ணக் கோடிகளாய்க் குவிந்தி டாதோ? 



Meanings:
கடப்பு வாசல் =  a toll gate or some pass akin to that.
வருவாசல்  செல்வாசல் =  gates for incoming / outgoing vehicles.
குறுக்குச் சட்டம் -   a barrier known as drop arm barrier   ("வீழ்கைத்   தடை ")
ஒரு வழிக்குத் தொகை - a toll charge for a passing vehicle on trip basis
 ஒத்திஎடுத் திடும்போது கழிக்கும் காசை! -  when a card is tapped on a machine, it  makes a deduction. In other types you have to insert the card for a deduction to be made.
 நிறுவி determine(d)


அரசியல் மறுவரவு

வேண்டாப் பொருளே அரசியல் என்றுமுன் 
விட்டு விலகிடினும்
தீண்டாப் பொருளோ உலக நடப்புகள்
தீரா மனக்கயிற்றில்
ஆண்டாங் கிருந்த தொடர்புகள் உண்டே
அவையே கனம்பெறுமே!
பூண்டார் துறவே அரசியற் கென்றொரு 
போதும்  புகலொணாதே!



பொருள் 
ஆண்டாங் கிருந்த -  ஆண்ட ஆங்கு  இருந்த :   ஆட்சியில் இருந்தபோது அங்கே  இருந்த .
தீரா மனக்கயிற்றில்  தொடர்புகள் =  இதை மனக்கயிற்றில் (ஆண்டாங்கு இருந்த) தீராத் தொடர்புகள்.என்று மாற்றிப் போடவும்.   மனம்  கயிறுபோல் பிணிக்கப் பட்டுள்ளது என்பது பொருள். உரை நடைக்குச்  சொற்றொடர்களை மாற்றிப் போடுதல் வேண்டும். 








Dr Mahatir's criticism

Muhyiddin breaks silence on Dr M’s criticism of Najib


வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

பசியார்தல்

ப்ரெக்ஃபஸ்ட்  (breakfast)  என்பதற்குப்  பேச்சுத் தமிழில் ஒரு சொல் உள்ளது. இலக்கியத் தமிழில் என்றால் தேடிப்பார்க்கவேண்டும்.  வகுப்பறை வாத்தியார் "காலையுணவு" என்று மொழிபெயர்க்க அவாவுறுகிறார். அது மன நிறைவு அளிக்குமானால், நண்பகல் உணவு (மதிய உணவு), இரவுணவு என்றெல்லாம் தேவைக்கேற்ப விரிக்கலாம்.
ஸெலாமத் பாகி (சலாம், சலாமத்) என்ற மலாய்க்கு காலை வணக்கம் என்று சொல்வது சரி.  அது  போலவா?
ஆனால், "பசியார" என்ற தொடர் , இலக்கிய வழக்குப் பெறாவிட்டாலும் .............. நாம் தேடிப்பார்க்கவேண்டும்,

குறளில், "ஏதிலார்  ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை" என  பசியார்தல் வந்துள்ளது. ( ?) ஆர்தல்- ‍ உண்ணுதல். 
பசி ஆர்தல்  -  பசிக்கு  ‍ உண்ணல். கு  என்னும் வேற்றுமை  உருபு  தொக்கு  நின்ற   வேற்றுமைத்  தொகை.

பசி என்பதும் ஆர்தல் என்பதும் தமிழில் உள்ளவையே.  சேர்த்துப் பசியார்தல் என்று    சொல்வதில் தவறில்லை 

தமிழ் அகர வரிசைக்காரர்கள் " நாட்சோறு" என்கிறார்கள். ஆனால் இது மணமக்களுக்கு மணவினைக்குமுன் ஊட்ட்டும் உணவையும் குறிக்குமாம். பொதுப்பொருளில் "பசியார்வது" என்றும் பொருள்படுமாம்.

பசியாறுவது என்பது சரியில்லை. பசி(யை) ஆற்றிக்கொள்வது எனல் அமையும்.
எனினும் இது ஒரு சொன்னீர்மையை இழந்துவிடுகிறது.  மேலும்  ஆறுவது எனின்  தானே ஆறுவது.  ஆறுவதைப் பிறவினையாக்கி  ஆற்றுவது என்றாலே  அமைந்திடும்

பசியார்கிறேன் என்பதை இறந்த காலத்தில் சொல்வதானால், பசியார்ந்தேன் என்று சொல்லவேண்டும்.   ஆனால் இவ்வடிவம் வழக்கில் இல்லை.  சேர் > சேர்ந்தேன், ஊர் > ஊர்ந்தேன், தேர்> தேர்ந்தேன், கூர் > கூர்ந்தேன், நேர் > நேர்ந்தேன் ( நேர்ந்துகொண்டேன்) என்று வருதலால், ஆர் > ஆர்ந்தேன் என்றுதான் வரவேண்டும்.  பசி ஆரினேன் என்பது பேச்சுவழக்கு விதிவிலக்கு போலும்..

வைடும் (wide) வீதியும்

இந்த இரு சொற்களுக்கும் உள்ள ஒலி அணுக்கத்தை நீ ங்கள் கூர்ந்து உணர்ந்திருக்கலாம்.  Wide எனற்பாலதை வீ  டி (தி)  என்று சொல்லிப் பார்த்தால், வீதி என்ற சொல்லுடன் உள்ள நெருக்கம் நன்கு புலப்படும். 

வீதி என்ற சொல் சங்கதத்தில் இருந்தாலும், விரிவு என்ற பொருளில் உளதா என்பதைக்  கவனிக்கவேண்டும்.  தமிழில் விரிவுப் பொருளில் வருகிறது. ஏனைத் திராவிடமொழிகளிலும் இவ் வுண்மை ஆராயத் தக்கது.

விரி > விரிவு.
விரி > விரிதருதல்.
விரி> விரி + தரு + அம் > விரிதாரம் > விஸ்தாரம்
ரி என்பதை எடுத்துவிட்டு, ஸ்  / ஷ்  இட்டு அமைக்கப்பட்டது. 

கௌளி

இனிக் கௌளி என்ற சொல்லைப் பார்ப்போம்.

இதனை நீங்கள் இந்தோ‍ஐரோப்பிய மூலச் சொற்களின் அகரவரிசையில் தேடிப்பாருங்கள். சங்கதத்தில் kIlAlin   என்றொரு சொல்லும் உளது. இது கௌளியுடன் தொடர்பு பட்டதாகத் தெரியவில்லை.  கீலா தமிழில் கௌளி ஆயிற்று என்று வாதிக்கலாம்.

கௌளி பூச்சி புழுக்களைக் கௌவித் தின்கிறது. அதற்குப் பல் இல்லை. கவ்வி உள் இழுத்துக்கொள்கிறது. கவ்வு முன், நாக்கை நீட்டுகிறது என்றாலும், ஒரு சொல்லுக்குள் எல்லாச் செயல்களையும் படம்பிடித்தமாதிரி வரணிக்கத் தேவையில்லை, சொற்கள் அங்ஙனம் அமைவது அரிதாகும்.

கவ்வு + உள் + இ > கவ்வுளி > கவுளி. வகர ஒற்று இடைக்குறைந்துள்ளது, 

இது கவ்வி விழுங்குகிறது என்பதே பெயர்க்காரணம். அதாவது மெல்லப் பல் இல்லை.  ஆகவே கவ்வு+ உள்+ இ.  உள் என்பது உண் என்பதனோடு தொடர்பு உடையது.

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

vIthi வீதி


வீதி என்ற தமிழ்ச்சொல்லை இங்கு ஆய்வோம். வீதி என்பது விரிவு என்ற அமைப்புப் பொருளை உடையது.  இப்போது  ஸ்தீரீட்  street   என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான பொருள்கொண்டு வழங்குவதாகும்.

விர் > விய்  (வியல், வியன், வியப்பு)'  விய் > வியா > வியாபாரம்;)
விர் > வில் > விலை. (ரகர லகர திரிபு);  வில்+தல் = விற்றல்.

விர் > விரி என்பது முன் இடுகைகளில் கூறப்பட்டது.

இவற்றை மறந்துவிடலாகாது.

விர்> விய்  > விய்தி  > வீதி.

ஒப்பு நோக்குக: செய்தி >  சேதி.

எங்கும் ஒலியற்று நிற்கட்டும்

எங்கும் ஒலியற்று நிற்கட்டும் ‍‍‍‍----மரித்த‌
எங்கள் பயணிகள் வானமைதி எய்தட்டும்!
பொங்கும் விழிநீர் உகுத்திட்டோம்  ---- இதில்
எங்கள் துயரம் இணைந்தே  தொகுத்திட்டோம்


A minute’s silence on Friday morning

   
PUTRAJAYA: The minute of silence to be observed for the victims of the ill-fated Malaysia Airlines flight MH17 is expected to be held some 30 minutes after the special plane transporting the remains of the victims taxies down the runway at KL International Airport tomorrow.
The one minute is expected to fall sometime between 10.45am and 11.15am, said Communication and Multimedia Minister Datuk Seri Ahmad Shabery Cheek.
“We hope the people can be ready for the moment of silence expected to be held during that time.

Traffic is expected to come to a standstill at the following locations during the moment of silence – Penang Bridge, Bang­unan Sultan Abdul Samad in Kuala Lumpur, KLIA, KLIA2 and Sultan Iskandar Customs, Immigration and Quarantine Complex in Johor Baru.
“An announcement will be made for the nation to stand and observe the one minute of silence,” he told a joint press conference on the ceremony to receive the remains of the MH17 victims here yesterday.
Star Online

.

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

விசுவ நாதன்

.

விசு > விசும்பு  (ஆகாயம்)

விசு என்பதே அடிச்சொல்.

விசு எப்படி அமைந்தது என்பதைக் கூறுகிறேன்.  பின்பு.

நுணுகி ஆய்ந்தால், விசும்பு  என்ற வெட்டவெளியில் உலகம் உள்ளது. பல கோடி யண்டங்களும் உள.

விசு என்ற அடிச்சொல்லை எடுத்து உலகம் என்பதற்கு ஒரு சொல்லை உண்டாக்கியதும் அறிவுடைமையே ஆகும்.

விசு > விசு + அம் >  விசுவம். விசுவம் > விஸ்வ(ம்).

மனத்தில் இருப்பவன் கடவுள். மனத்திலேயே இருந்துவிட்டால் எப்படி? நாவில் வெளிப்படுகிறவன். இயல்பாகவே அதுதான் நடக்கும். கண்ணில், காதில் வெளிப்பாடு  காண்பானோ? மக்களிடையே அவன் நாவில் வெளிப்படுவான்.
மாய ஆற்றல்களை உடையோனிடம் மற்ற இடங்களில் வெளிப்படுவானேல், அது  இயற்கையை மிஞ்சியதாகும். நாம் அதைப்பற்றிப் பேசவில்லை.

தன் நாவில் வெளிப்படுவான்:  தன் + நா ( முறைமாற்றி )  நா+தன் = நாதன்.
நாவில் வருவது அடிப்படை நாதம்.  மற்ற நாத வெளிப்பாடுகளை அறிவு முற்றிய நிலையில் மனிதன் அறிந்தான்.
நாவினின்றும் (கூப்பிடுவதே)  நாமம் ஆகும்.

விசுவ நாதன் என்றால்,  விசும்பிலும் உலகிலும் உள்ளான், உங்கள் நாவில்  வெளிப்பாடு காண்கிறான் என்பது.

நாதன் நாமம் நமச்சிவாயவே . ஒரு பேரும் ஓர்  ஊருமில்லாதவன் அவனை நாமத்தால் நாவினால் கூவி அறிகிறோம்.   

தஞ்சைப் பெரிய கோவில் பெருவுடையார்

அரசர்க்கரசனான இராஜராஜன் கட்டியது தஞ்சைப் பெரிய கோவில். அது பின் பெருவுடையார் கோவில் எனப்பட்டது.  இது பெரிய கோவிலென்பதை வேறு  சொற்களால் புனைந்தமையாகும்.

பெருமை + உடையார் > பெரு+ உடையார் > பேருடையார் என்று இலக்கணப் படி சென்றால், வேண்டியவாறு சொல் அமையவில்லை. மேலும் பெயர் என்ற சொல்லும் பேர் என்று திரிவதால், இலக்கணம் இங்கு உதவவில்லை.

பெரு என்பதை பேர் என்று திரிக்காமல், பெரு என்றே நிறுத்தி  உடையார் என்பதற்கு வகர உடம்படு மெய் கொடுத்து அமைத்தது ஒரு சொல்லாக்கத் திறம்தான். இச்சொல் அமைத்தவர்களைப் பாராட்ட வேண்டும்.

பெருவு > பெருவுதல் என்றோரு சொல் உண்டு. பெருவுதல் என்றால் உறக்கத்தில் பேசுதல். பெருவுடையார் என்பதில் வரும் பெரு வேறு, பெருவு வேறு.

இராமேஸ்வரம்

ஈஸ்வரன்  என்ற சொல் அமைந்த விதம் எளிமையானதே.

இறைவர் என்ற தமிழ்ச்சொல்லை எடுத்து, "றை"க்குப் பதில் ஷ்  அல்லது  ஸ் போடுங்கள்.  இகரத்தை ஈகாரம் ஆக்குங்கள்.

இறைவர் >  ஈஷ்வர் அல்லது ஈஸ்வர்.

இங்கு பலர்பால் அர் விகுதி  இருப்பது காணலாம்.

ஒருமை அன் விகுதியின் மேல் பணிவுப் பன்மையாகிய பலர்பால் அர் சேர்வது
பரவலாகக் காணப்படுவதொன்று. எ‍ டு:

இறையன் > இறையனார்.

இங்கே மாற்றமாக, அர் மேல் அன் சேர்ந்து ஈஸ்வரன் என்ற சொல் அமைகிறது.

இங்ஙனம்  "ஈஸ்வரன்" என்பதமைந்தது.1

அர் விகுதியின்மேல் அம் விகுதியும் சேரும்.

இராமேஸ்வர் > இராமேஸ்வரம்.

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

Hina Rabbani Love Story

ஈனா ரபானி இணையம் வளர்காதல்
யானும் படித்து வியப்படைந்து ‍‍ வீணிலே 
ஏனிவர்கள் கெட்டபெயர் ஏற்கின்றார் என்றெண்ணித்
தானிருந்தேன் ஆனாலும் தக்கமுடி‍‍‍ வானபடி
காணும் எனவிருந்த போதினில் அந்நாட்டில்

வந்தது தேர்தலே வாணுதல் ஈனாவும்
சொந்தவூர் சென்றபின் சொல்கதையும் நின்றுபோய்,
அங்கே அரசியல் மாற்றம் அடைந்துவிட‌
பங்கம் பயவாமல்  முற்றிற் றெனவிருந்தேன்;

இன்னும் அதேகதை செல்வதைக் காண்கின்றேன்!
என்னும் நிலையிலே  இன்றென்ன ஆனதென‌ப் 
பாதிப் படம்பார்த்து  மீதியைப் பார்க்காத 
நோதல் நிலையே ! நுதலழகி ஈனா

முகிலிடைச் சென்று மறைந்த நிலவாம்
அகிலம் அறிய வெளிப்பட்டால் அன்றி
கதைமுடி  யாதஓர்  காட்சியாய் நிற்க,
இதைஇனித் தேடுதல் இல். 

Click:
http://www.youtube.com/attribution_link?a=PKibMh_Xzac&u=/watch?v%3DhNCLQ_qu5vY%26feature%3Dem-subs_digest-vrecs

வியப்பு , வியன் வியல் ( <"விர்" )

இத்திரிபுகளைக் கவனியுங்கள்:


(விர்) > விரி.
(விர்) > விய் > வியல்.  (விரிவு)
(விர்) > விய் > வியன்   (விரிவு)

விரிநீர் வியனுலத் துள் நின் றுடற்றும் பசி.  (குறள்)

"மாயாப் பல்புகழ் வியல் விசும்பு ஊர் தர"    (பதிற். 90: 20)

வியல் =  வியன்.  ல்>ன் திரிபு.  (அல் > அன் (விகுதிகள் ))

விர்> விய் > விய > வியப்பு. ஆச்சரியத்தில் மனம், கண் முதலியன விரிதல்.

விர் >  விய் > விழி.  ( கண் இமைகள் விரிதல்.)

வியி என்று அமைதல் இல்லை. விழி என்றுதான் தமிழில் அமையும்.

விரைவு குறிக்கும் அடிச்சொல் "விர்"  வேறு. 


ஆஞ்ச நேயர்க்கு வடைமாலை.

எத்தனித்த எல்லாம்  இயற்றிமுற்றுப் பெற்றடைய‌
வைத்த ஆஞ்ச நேயருக்கு வடைமாலை!
பித்தனைய பெற்றியிலே நின்றவர்க்கு முத்தனைய‌
வெற்றியினைத் தந்தவற்கு வடைமாலை!
குத்தனைய துன்பமதை நித்தலும்வி லக்கிவைத்துக்
குதூகலம்வி ளைத்தவற்கு வடைமாலை!
மெத்தவுமிவ் வாழ்வினிக்க மேதினியில் பற்றுமொரு
மித்துவர வித்தகற்கு வடைமாலை. .

இன்ப துன்பம்

சொந்தமாக உந்துவண்டி ஒன்றிருந்தாலும்
அதுவும் துன்பமே;
எந்த நாளும் பேருந்தில் பயணித்தாலும்
அதுவும் துன்பமே
உந்துவண்டி கோளாறில் படுத்துவிட்டாலும்
அதுவும் துன்பமே
உந்துவண்டி சீர்ப்படுத்திக் கட்டும் தொகை
காண்பதுவும் துன்பமே!
இன்பத்தின் எல்லைவரை சென்றுவிட்டால்
இருப்பதுவோ துன்பமே
துன்பத்தின் மறுகோடி சென்று நின்றால்
காண்பதுவோ இன்பமே
துன்பமும் இன்பமும் நேர்கோட்டின்
தோன்றுமிரு துருவமே.

துன்பம்  இரண்டில் எதையேனும் வைத்துக்கொள்!
இன்பம் அடுத்தே வரும்.


ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

ஆதாயம்


ஆதாயம் என்ற சொல்லை முன் ஒன்றிரண்டு இடுகைகளில் விளக்கியதுண்டு.
இப்போது இதை மேலும் தெளிவாக்குவோம்.  இப்போது வணிகம் தொடர்பாக மட்டுமின்றி அரசியல் தொடர்பாகவும் பயன்பெறுவதால் இதை அறிந்து இன்புறுதற்கு இது நல்ல நேரமே.

"அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் "  என்பது தொலைக்காட்சியில் பேசப்பட்டு அடிக்கடி செவிசேரும் வாக்கியம்.

"முதல்" என்னும் முதலீட்டிலிருந்து செலவு செய்தல் கூடாது. இதை தமிழ் நூல்கள் அறிவுறுத்துகின்றன.  "ஆன முதலில் அதிகம் செலவானால்"  என்ற‌
வெண்பாவை நோக்குங்க்ள்.  இங்ஙனம் "ஆன முதல்" என்பதைக் குறிப்பதே  ஆதாயம் என்பதில் வரும் "ஆ"  ஆகும், முதல் உழைத்தால்தான், அது வருமானத்தைத் தருகிறது. ஆகவே. தருவது என்பது குறிக்க, 

 "தா" என்ற வினைச்சொல் பகுதியை அடுத்துப் போட்டுக்கொள்ளுங்கள். இப்போது  ஆதா  எனபது தோன்றியுள்ளது.

சொல்லாக வரின் "அழகு" என்றும் மற்றும் பெயராக்க விகுதியாகவும் பயன்படும் அம் விகுதியை இப்போது இடுங்கள்.

ஆ+தா+ அம் = ஆதாயம் ஆகிறது. ய என்பது உடம்படு மெய்.

ஆகூழ், என்ற சொல்லிலும் ஆ என்பதிருத்தலைக் காணலாம்.  ஒரு காலத்தில் ஆகாரத்தில் தொடங்குதலே சிறப்பு  fashionable  என்று கருதினர். ஆகாரம், ஆகாயம் என்பன முன்பு விளக்கப்பட்டுள்ளன.

‘கத்தி’ திரைப்பட எதிர்ப்பில் நியாயம் உண்டா?


                       கத்தி’ திரைப்பட எதிர்ப்பில் நியாயம் உண்டா?
                                    
                           -செ.அ.வீரபாண்டியன் –
                                http://musictholkappiam.blogspot.in/

(' தமிழ்நாட்டில் எந்த சிங்களரையும் தொழில் வியாபாரம் செய்ய விட மாட்டோம்' என்று 'கத்தி' திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெரியார் திராவிரர் கழகத் தலைவர் கோவை.இராமகிருட்டிணன் பேசிய செய்தியை,  13 – 08 - 2014 மாலை தொலைக்காட்சி செய்தியில் பார்த்தேன். அது பெரியார் கொள்கைக்கும், அணுகுமுறைக்கும் எதிரானது. பெரியார் பிராமணர் அமைப்பிலேயே உரையாற்றியிருக்கிறார். தமது சமூக சீர்திருத்ததிற்கு தடையாக உள்ள பிராமணர்களையே எதிர்ப்பதாக பிராமணர்களிடையே அவர் பேசியுள்ளார். தமது உடல்நலக்குறைவுக்கு  பிராமண வைத்தியர்களிடமே அவர் சிகிச்சைப் பெற்றார். தமது வாகனங்கள் பழுதடைந்தபோது, டி.வி.எஸ்(T.V.S)  என்ற பிராமண தொழில் கூடத்திலேதான் 'ரிப்பேர்' செய்தார். அவர் வழியில் சிங்களர் அமைப்பில் தமது நிலைப்பாட்டை விளக்குவதற்குப் பதிலாக, சிங்களர்களையே எதிரிகளாகக் கருதி , 'பெரியார்' பெயரில் உள்ள அமைப்புகள் செயல்படுவது சரியா? இசை ஆராய்ச்சிக்கு முன், நான் பெரியார் இயக்கதில் பங்கேற்றிருந்த காலத்தில் என்னுடன் மிகவும் அன்புடனும் நெருக்கமாகவும் பழகியவர் கோவை.இராமகிருட்டிணன். அந்த காலத்தில் நான் பிரமிக்கும் அளவுக்கு இயக்கத்தில் செயல்பட்டவர்.  கால ஓட்டத்தில் பெரியாரின் கொள்கைக்கும் அணுகுமுறைக்கும் எதிராக பெரியார் அமைப்புகள் செயல்படுவதும், அவை தமிழர் நலன்களுக்கு மிகவும் பாதகமாக இருப்பதையும் உணர்ந்ததால்,  இதை எழுத நேர்ந்தது. அறிவுநேர்மையுடனும், திறந்த மனதுடனும் பெரியார் அமைப்புகள் இதை விமர்சிப்பதை வரவேற்கிறேன். அதன் விளவாக எனது நிலப்பாடுகள் தவறு என்று வெளிப்படுமானால், 'பெரியார் வழியில்' தவறு என்று பகிரங்கமாக அறிவித்து,  என்னைத் திருத்திக் கொள்வதில் எனக்கு தயக்கம் கிடையாது. ) 

ராஜபட்சே இலங்கையில் முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலை செய்ததாக தமிழ்நாட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்கள் சொ ல்கிறார்கள். அது உண்மையெனில் முள்ளிவாய்க்கால் போரில் சிவிலியன்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்க, இலங்கை ராணுவம் 'ரிசீவர் பாயிண்ட்'கள் (receiver Points) அமைத்து, சிவிலியன்களைக் காப்பாற்றியது ஏன்? 'ரிசீவர் பாயிண்ட்'கள் நோக்கி அலை அலையாய் சென்ற தமிழர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தி,அச்சுறுத்தி, அங்கு செல்லவிடாமல் தடுத்தது யார்? இலங்கை ராணுவமா? விடுதலைப் புலிகளா? 

சரணடை ந்த விடுதலைப்புலிகள் பலருக்கு இலங் கை ராணுவமே வேலை வாய்ப்புகளுக்கானப் பயிற்சிகள் கொடுத்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலை வாங்கிக் கொடுத்து,  அந்த 'தமிழர்களுக்கு' புதுவாழ்வு' ஏற்படுத்தித் தருவது உண்மையா? பொய்யா?  

அமிர்தலிங்கம் உள்ளிட்ட TELO, PLOT, EPRLF, etc அமைப்புகளின் தலைவர்களையும், ஈழ விடுதலைக்காக ஆயுதப் பயிற்சி பெற்றிருந்த ஆயிரக்கணக்கான ‘டீன் ஏஜ்’ (teen age)  விடலைப் பருவ போராளிகளையும் சுட்டுக் கொன்றது யார்? இலங்கை ராணுவமா? விடுதலைப் புலிகளா?

சாதாரண மனிதர்களிடையேயும் 'வாய்ப்புகள்'(?) கிடைக்கும் போது, மனசாட்சியேயில்லாமல் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, லஞ்சம்,தீயசெயலுக்குத் துணையாக தரகு(broker)  உள்ளிட்ட 'பல வழிகளில்' பணம் சம்பதித்து 'பெரிய மனிதர்களாக' வலம் வருபவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். 

இலங்கை ராணுவமானாலும், இந்திய ராணுவமானாலும், அமெரிக்க ராணுவமானாலும், உலகின் எந்த நாட்டு ராணுவமானாலும், அதிலும் நல்லவர்களும் உண்டு;கெட்டவர்களும் உண்டு. எந்த ராணுவமும் 'போர்க்கால சூழலில்' சிவிலியன் பகுதிகளுக்குள் நுழைந்தால், 'பிரமிக்கத்தக்கும் மனிதாபிமான' செயல்களில் ஈடுபடும் ராணுவத்தினரும் உண்டு; 'இழிவின் இலக்கணமாக'க் கொடூர செயல்களில் ஈடுபடும் ராணுவத்தினரும் உண்டு.

வியட்நாம், ஈராக், இலங்கை மட்டுமல்ல, ஐ.நா அமைதிப்படைக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளிலும் இவை போன்ற இரண்டு வகை  சம்பவங்களும் நடந்துள்ளன.

தவறு புரிந்த ராணுவத்தினரைத் தனிமைப் படுத்தி அடையாளம் கண்டு முறையான விசாரணை நடத்தித் தண்டிப்பது என்பது உலக வரலாற்றில் அபூர்வமாகவே நடந்துள்ளது. அதிலும் சம்பந்தப்பட்ட ராணுவததையே 'தவறு புரிந்த ராணுவமாக'ச் சித்தரிப்பது, ராணுவத்தினரிடையே உள்ள குற்றவாளிகளை எளிதில் தப்பிக்க துணைபுரியும் வழிமுறையாகும்.

'இந்துக்களை ஒழிப்போம்'என்ற 'முஸ்லீம் தீவிரவாதி'களின் பிரச்சாரத்தை அறிந்த சாதாராண இந்துவும்,

'முஸ்லீம்களை ஒழிப்போம்' என்ற 'இந்து தீவிரவாதி'களின் பிரச்சாரத்தை அறிந்த சாதாராண முஸ்லீமும்,

'பார்ப்பனர்களை ஒழிப்போம்' என்ற பெரியார் இயக்கங்களின் பிரச்சாரத்தை அறிந்த சாதாராண பிராமணரும்,

'தமிழும், தமிழரும் மட்டமானவர்களே' என்ற 'பிராமண தீவிரவாத'பிரச்சாரத்தை அறிந்த சாதாரணத்   தமிழ‌ரும், 

'உணர்வுபூர்வ ' போதையில் சிக்கி, சம்பந்தப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் ஆதரவாளராவதற்கும் , அல்லது உணர்வு போதையின் அளவைப் பொறுத்து தீவிரவாத அமைப்பில் உறுப்பினராவதற்கும் வாய்ப்புகள் அதிகம். 'வெளிநாட்டு நிதி' உதவிகளில் செயல்படும் பல அமைப்புகள் இந்த பிளவை 'ஊதிப் பெருக்க வைக்கும்' பணிகளை 'முற்போக்கு' போர்வைகளில் செய்து வருகிறார்கள். 

முன்புக் குறிப்பிட்டபடி 'தவறு செய்த' இந்துக்களையும், முஸ்லீம்களையும், பிராமணர்களையும், தமிழர்களையும் முறையான விசாரணைக்குட்படுத்தி தண்டிக்க விடாமல் காப்பாற்றவே மேற்குறிப்பிட்ட போக்குகள் துணைபுரிகின்றன. 

உணர்வு போதையில் சிக்காத, அறிவுபூர்வமாக அணுகும் போக்குள்ள இந்துக்களும், முஸ்லீம்களும், பிராமணர்களும்,தமிழர்களும் தமதளவில் உண்மையாகவும், நேர்மையாகவும் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனாலும் அவர்கள் மேற்குறிப்பிட்ட தவறான போக்குகளை தமதளவில் எதிர்த்து வாழ்கிறார்களா? அல்லது 'நமக்கேன் வம்பு? ' என்று ஒதுங்கி வாழ்கிறர்களா? என்பது ஆய்விற்குரியது.

அவர்கள் ஒதுங்கி வாழ்வது மேற்குறிப்பிட்ட போக்குகள் எந்த எதிர்ப்புமின்றி வளரவே துணை புரியும். எனவே அப்படி ஒதுங்கி வாழ்பவர்களும் 'மறைமுக'க் குற்றவாளிகளே.

இலங்கை ராணுவத்தையும், சிங்களர்களையும் எதிரிகளாக 'பிரச்சாரம்' செய்பவர்கள் நமது சமூக வட்டத்தில் யாரேனும் இருந்தால், அவர்களை 'அறிவுபூர்வமாக' சிந்திக்க வைப்போம். அவர்கள் உணர்வுபோதையிலிருந்து விடுபட மறுத்தால், அவர்களுடன் (குடும்பமாயிருந்தாலும், நட்பாயிருந்தாலும்) நமக்குள்ள உறவை, சமூக நலன் கருதித் துண்டிப்போம்.

எந்தப் பிரச்சினையிலும் 'உணர்வுபோதை' பிரச்சாரங்களை எதிர்ப்போம்; அறிவுபூர்வ விமர்சனங்களை ஊக்குவிப்போம். எந்த திரைப்படத்தையும், புத்தகத்தையும் தடை செய்யக் கோருவதை எதிர்ப்போம். அந்த திரைப்படத்தை, அந்த புத்தகத்தை அறிவுபூர்வ விவாதத்திற்கு உட்படுத்துவதை ஆதரிப்போம்.

பக்கத்து வீட்டில் எவரும் தவறாக நடந்திருந்தால், அதற்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவரையும் எதிரியாகப் பாவித்து நாம் நிம்மதியாக வாழ முடியாது. அந்த வீட்டில் உள்ள மற்றவர்களுடன் நட்பு பாராட்டி, தவறிழைத்தவரை தனிமைப் படுத்துவதே,  அவரைத் தண்டிப்பதற்கான 'புத்திசாலித்தனமான' முதல் படி.

அது போல இலங்கையையும், சிங்களர்களையும் எதிரிகளாகக் கருதி, இலங்கையைச் சீனாவின் 'இன்னொரு திபெத்' ஆக்குவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல. தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகள் பெருகுவதற்கான தொழில் முதலீடுச் சூழலைக் கெடுத்துக் கொள்வதும் புத்திசாலித் தனமல்ல. மாறாக இலங்கை- இந்திய நட்பினையும், இரண்டு நாடுகளிலுமுள்ள கல்விமான்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பக்தர்கள், பகுத்தறிவாளர்கள் சந்திப்பதையும், அச்சந்திப்புகளில் எல்லோரும், -  ' Empathy’ - ''மற்றவர் பார்வை'யில் பார்த்தல் - அணுகுமுறையை ஊக்குவிப்பதும் ஆக்கபூர்வமான அணுகுமுறையாகும். தவறு செய்தவர்களைத் தனிமைப்படுத்தித் தண்டிக்கும் அணுகுமுறையாகும்.

இவ்வாறு வாழ்வதால் சமூக அளவில் நல்லவை பெருகி, தீயவை அழிய நமது பங்களிப்பை நாம் அளித்தவர்களாவோம். அதன் 'பலன்கள்' நாம் வாழ்கின்றபோதே நமக்கு தெரியாவிட்டாலும், நாம் எப்போது மரணத்தைத் தழுவினாலும் 'சமூக'க் குற்ற உணர்வின்றி, மனநிறைவுடன் மரணத்தைத் தழுவுவதை எவரும் தடுக்க முடியாது.

குறிப்பு: மிகவும் வசதி குறைவானச் சூழலில், தமிழ் வழியில் படித்து, தனது 'திறமையை' மட்டுமே மூலதனமாக வளர்த்து, திரைத்துறையில் இயக்குநராக வளர்ந்து, இன்று இந்தித் திரைப்பட உலகமும், இந்தியாவுமே மலைக்கும் அளவுக்கு தொடர்ந்து வியாபார ரீதியில் வெற்றிப்படங்களும், அப்படங்களில் 'லஞ்ச எதிர்ப்பு' உள்ளிட்டு பல நல்ல கருத்துக்களையும் கலந்து,  'தமிழர்' என்ற பெருமையை வளர்த்த இளைஞர் 'கத்தி' திரைப்பட இயக்குநர் முருகதாஸ். அந்தத் தமிழனுக்கு தவறான அணுகுமுறையால் கெடுதல் செய்வது பெரும் தவறாகாதா?