காணவும் இயலாத ஞாலமே --- நீ எம்
கண்களில் படுகின்றாய்;
தொடவும் அமையாவிப் பாரிடமே ---அண்டித்
தொடுதலும் அடைகின்றோம்!
அறியவும் இயலா உலகுனையே ---- யாம்
அறிந்தே நடக்கின்றோம்;
அறியா நிலையில் யாமுனையே ---- இறுக
அணைத்துக் கிடக்கின்றோம்,
******
மாகடல் மாந்திட மீனெழுமோ----காற்று
மாறறி கருடன் தாழுறுமோ?
மேகத்து மிசைமினும் மீன்களையே---கேட்போம்
மேலிருப்பானோ நீலவானில்?
ணா
குறிப்புகள்:
ஞாலம் -பூமி அமையாவிப் பாரிடம் -- இயலாத இந்தப் பூமி,
அண்டி - (உன்னை) அணுகி .
மாந்திட - to experience; to enjoy or indulge.
எழுமோ - to soar above, பறத்தல் போல் மேலே உயர்தல்.
காற்று மாறு அறி கருடன் - காற்றின் வீசும் திசை அறியும் கருடன்.
கீழுறுமோ - கீழே இறங்கி அதை அறியுமோ? (எ-று ).
மிசை - மேலே . மினும் = மின்னும் மீன்களையே - நடசத்திரங்க்களையே.
மேலிருப்பானோ நீலவானில்? - இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் மேலே நீல வானுக்குள் அவன் (கடவுள்) இருக்கின்றானோ?
பூமியில் நமக்குப் புரியாத பல நடக்கின்றன. அதில் நாமும் அறிந்தோ அறியாமலோ இணைந்து கிடக்கின்றோமே! இவையெல்லாம் நடத்திக்கொண்டு இறைவன் மேலிருக்கின்றனோ? யாரைக் கேட்பது? விண்மீன்களைக் கேட்போமா ? === என்று கவி கேட்கின்றான்.
O World Invisible We view thee! Poem by Francis Thomson, (1859 - 1907) first two stanzas translated The poet's tomb bears the last line from a poem he wrote for his godson - Look for me in the nurseries of Heaven. [.
ref dbv415

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.