Pages

புதன், 31 ஜூலை, 2024

பில்லி என்ற சொல்.

 ஒரு மந்திரவாதி தன் மந்திரத்தினால் தன்னுடன் அருகில் இல்லாத ஒருவனுடன் சென்று பொருந்துகிறான். இதையவன் மந்திர ஆற்றலினால் செய்கிறான். இது ஒருவகைப் பொருந்துதல்  ஆகும்.  பொருந்து என்றால் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு தன் கட்டுக்குள் கொண்டுவருதல். இதற்குத் தமிழ் "புல்லுதல்" என்ற அடிச்சொல்லிலிருந்து ஒரு சொல்லைத் தருகிறது.

புல்(லுதல்).

புல்> புல்லு> புல்லி > பில்லி.

புல்லுதல்  என்றால் பொருந்தியிருப்பது.

அலலா வாயினும் புல்லுவ உளவே என்ற தொல்காப்பியத் தொடரில் 'இல்லாவிட்டாலும்' பொருந்தக்கூடியனவும் உள்ளன என்பது பொருள்.

இது புல்லி > பில்லி என்றானது.  புல்லு என்பதை ( புல் முளைத்திருப்பதை )ப் பில்லு என்று பலுக்குதல் காண்க. பிடுங்கு என்பது மாறி புகர முதலாய் வரும். இவற்றின் ஒலிநூல் இசைவை இதனின்று அறிக.

இதனை " தொலைவிற் புல்லுதல்"  எனல் தக்கது..

பிறர் எண்ணிச் செயவது என்ற பொருளில் சூனியம் எனப்படும்.  சூழ் உன்னுதல் > சூழ்ந்து உன்னுவது,  சூழுன்னியம் சுருங்கிச் சூனியம்  ஆகும்..

உன்னுதல் - இழுத்தல், உந்தல், கிளர்த ல், நினைத்தல், பாய்தல்,விரைந்தெ ழுப்பல்.

பிறர் பாய்விப்பது அல்லது உன்னுவிப்பது.

ஒரு பெண்ணுக்குக் கலியாணம் நடக்கப் போகிறது.  விரைந்தெழுந்து அவளைக் கொண்டு ஓடிவிடுதல். இதைச் செய்விக்கும் ஒரு மந்திரம் : சூனியம்,

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

சனி, 27 ஜூலை, 2024

தெவ்வோர் என்ற குறட் பதம்

 பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்து தெவ்வோர்

எழுபது  கோடி யுறும்


என்பது திருக்குறள்.  பழுது பண்ணும் மந்திரியை  அருகில் வைத்திருப்பதற்கு, எழுபது கோடி பகைவர்கள வைத்திருக்கலாம் என்கின்றார் தெய்வப் புலவர் நாயனார். பகைவர்கள் தொலைவில் இருப்பவர்கள். அவர்கள் படை எடுத்து வருவராயின் அதை அறிவதற்கு அரசு இயந்திரத்தில் பல உள்ளமைப்புகளும் ஒற்றர்களும் இருப்பார்கள். எளிதில் அறிந்துகொள்ளலாம். பல போர்களில் எதிரியும் ஆத்திரத்தைக் காட்டுவான்.  போர்ப் புறக்கடவுதல் செய்வான் ( பிரகடனம்). இத்தகைய வசதிகள் மந்திரி செய்யும் சூழ்ச்சிச் சூழலில் கிடைப்பதில்லை. இன்னும் விரித்து ஒரு கட்டுரையாகக் கூட எழுதலாம். எழுத எழுத ஆனந்தமே.

தெறுதல் எனின் அழித்தல் என்பதும் பொருள்.  போர் நடத்தி எதிரியின் ஒரு கட்டிடமும் இல்லாமல் அழித்துவிடுவதுதான் பண்டைத் தென்னிந்தியப் போர்களில் வழக்கம்.  சிங்கப்பூரை யப்பானியர் எடுத்துக்கொண்ட இரண்டாம் உலகப் போரில்கூட முதன்மைவாய்ந்த கட்டிடங்களின் தொடர்பில்  இப்படி நடந்துகொள்ளவில்லை. அறிவோம் இதிலிருந்து பல ஆயின் இவற்றினை இங்கு விரியோம்.

தெறுதல் என்பது பகைத்து அழித்தல்.

தெவ்வோர் என்றால் பகைவர் ஆதலின் இதிலிருந்துதான் தெவ்வோர்> தேவோர்>தேவர் : படைமறவர் என்று வந்திருக்குமோ என்று நீங்கள் ஓர் ஆய்வு செய்யலாம். அவ்வாறாயின் தேவர் என்பது படைஞர் என்றும் பொருள்தரும். செய்து ஆய்வில் ஈடுபடுக.

தெறுநர் என்ற சொல்லும் பகைவர் என்றே பொருள்தரும். இது தென்னர் என்று மாறிற்று. "றுந" என்பது "ன்ன" என்று திரிந்தது.

தெறுவோர் என்பது பகைப்பவர்கள் என்று பொருள்படும்.  தெறுகிறவர்கள். பகைப்பவர்கள்.

இது நாளடைவில் தெறுவோர்> தெ(வ்)வோர் என்று திரிந்துவிட்டது . இந்தச் சொல்தான் குறளில் வந்துள்ளது,

று வல்லெழுத்து.  கெடும்.

வகர ஒற்று இரட்டித்தது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

சுலோகம்

 சுலோகம் யாது அறிவோம்.

இதில் இருக்கும் பகவுகளாவன.  சொல்(லுதல்).  ஓ(ங்)கு(தல்), அம் விகுதி.

சொல்+ ஓகு+ அம் >  சொலோகம்> சுலோகம்..

இதில் சொல் > சு(ல்) ஆன திரிபு.

இரு சொற்களின் தொடர்பு இங்கு விளக்கப்பட்டது.

இங்கு ஓங்கு ( இடைக்குறைந்து  ஓகு என்று ) நிற்கிறது.   ஆகவே ஓசையும் பொருளும் சொல்லைக் காட்டிலும் சுலோகத்தில் உயர்ந்து நிற்கின்றது  என்பது பெறப்படும்.  இது ஏன் சுலோகம் என்ற சொல் படைக்கப்பெற்றது என்பதற்கும் சொல்லுக்கும் சுலோகத்திற்கும் உள்ள வேறுபாட்டினையும் விளங்கக் காட்டிற்று.  தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் உள்ள தொடர்பினையும் காட்டி,  அது இந்தோ ஐரோப்பியம் என்று பெயரிடப்பட்டது ஒரு புனைவு எனற்பாலதையும் விளங்கவைக்கிறது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

வியாழன், 25 ஜூலை, 2024

வேதம் - ஐதரேய உபநிடதம். தமிழ்த் தொடர்பு

 இப்போது ஐதரேய உபநிடதம் என்ற சொல்லை விளக்குவோம்.

ஐ + தரு + ஏய உபநிடதம் என்பதைக் கவனிப்போம்.

ஐ என்பது தலைமை என்ற பொருளில் பலகாலமாக வழங்கிவரும் சொல்லாகும். இதை ஐயர் என்ற சொல்லிலிருந்து தெரிந்துகொள்வோம்.

ஐயர் என்ற சொல், தொல்காப்பியனார் காலத்தில் " குமுகாயத் தலைவர்"  ( சமுக முன்னணி மாந்தர் ) என்ற பொருளில் வழங்கிவந்தது. இத்தொடரை அல்லது சொல்லை, Leaders of the society என்று மொழிபெயர்த்தால் சரியாகவிருக்கும்.  இது இன்று உள்ள பொருளன்று.  தொல்காப்பியனார் காலத்தின் பொருள்.

பொய்யும்  வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப

என்று தொல்காப்பியம் சொல்கின்றது.

இதன் காரணமாக, ஐ என்ற முதற் பகவுக்கு முதன்மையான, மூத்த, முன்வரும் ஒளி உடைய என்று பொருள்கூற வேண்டும்.

தரு என்பது தருதல், பயத்தல், உண்டாக்குதல்.

ஏய்தல் என்பது இயைத்தல், கொண்டுபோய் இணைத்தல்.

உங்களுக்குப் பொருந்தும் பொருளை இவற்றிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். எம்முடன் பொருந்தினவரை யாம் இதை:  முதன்மையாய் உண்டாகிப் பொருந்திய ( ஏய்ந்த அல்லது இயைந்த) உபநிடதம் என்று எடுத்துக்கொள்வோம். இதுவே சரியானதாகும்.

ஏய என்பது இயைந்தது என்பதன் பொருண்மை உடையது.

இதற்குத் தலைப்பு கொடுத்தவர் ஆதிசங்கரப் பெருமானாக இருக்கலாம். அவர் தமிழர். தமிழ்ப்பெயரையே சூட்டியுள்ளார்.

வேதங்களை மக்களுடன் இயைத்தவன் தமிழன்.

மேலும் இதைப் பாடிய முனிவனும்  ( ஐதரேய முனிவன்) இற்றை நிலையில் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்ப. இதை ஆதிசங்கரப் பெருமானே பொருளெழுதிப் பெருமைப் படுத்தியுள்ளார்.

இதனால் சாதி என்பது இந்து மதத்தின் பிரச்சினை அன்று ( அல்ல) என்பது தெளிவாகிறது.  இதைப் பூதமாக்கியவன் பிரிட்டீஷ் வெள்ளைக்காரனே.

 சாதிகட்குச் சட்ட முலாம் பூசியது வெள்ளைக்காரன் ஆட்சியில்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்



செவ்வாய், 23 ஜூலை, 2024

கவின் ( அழகு) எப்படி அமைந்தது?

 கவின் என்பதென்ன?

மலையிலிருந்து கிட்டும் மல்லிகை மலைமல்லிகை எனப்படும். இது மிக்க அழகாக இருக்கு மென்று புறநானூறு பழைய உரை கூறும். பின் காட்டு மல்லிகை என்றும் ஒன்று அறிகிறோம். இதுவும் அழகுடையதே, உங்களுக்கு இவற்றின் வேறுபாடுகளைக் கூற முடிந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

கவின்பெற்ற மலைமல்லிகை என்கின்றார்கள்.  தாளிப்பூ என்றும் குறிக்கப்பட்டுள்ளது. கூதாளி கவின் பெற்ற மலைமல்லிகை என்றும் குறிக்கிறார்கள்.

பார்த்த மாத்திரத்தில் அதை எடுத்து மோக்காமல் செல்லமுடியாத அளவுக்கு அழகு வாய்ந்ததாம். 

கவ்வு, கவை, கவிழ்தல், கவர்தல். கவர்ச்சி  என்பனவெல்லாம் கவ என்று சொல்லுடன் தொடர்புடையனவே. விட்டு அப்பால் செல்லமுடியாத கவர்ச்சி. தன்பக்கம் இழுக்கும் அழகு.

கவர்ச்சி என்பது சுவை, ஒளி, ஊறு, ஓசை, வாசனை அல்லது நன்மணம் என எதனாலும் ஏற்படும்.

விட்டுச் செல்லமுடியாத அழகுதான் கவின்.

கவ> கவி> கவி+ இன் > கவின்.

இன் என்பது உடையது என்ற பொருள் உள்ள பழஞ்சொல்.

கவி என்ற பாட்டுக் குறிக்கும் சொல்லும் .இதனோடு  தொடர்புடையது.  அழகானது. பொருள் செவ்வனே கவிக்கப்பட்டு இயல்வது, கவிக்கும் உரைக்கும் வேறுபாடு உள்ளது. பொருளினை மேலே குவித்துள்ளான் கவிஞன்.

குவி< கவி.

பொன்னழகைக் குவித்து வைத்தது போல.

அழகைத் திரட்டி வைப்பதும் அந்த திரட்டுக்குள் காணும் மனிதன் ஓடவியலாமல் ஒட்டிக்கொள்வதும் பொருண்மை. 

கவின் வாடுதலும் உண்டு என்று கலித்தொகை சொல்கிறது. காரிகை பெற்ற கவினும் வாடிவிடுகிறதே! 

ஊர் அலர் எடுத்து அரற்ற, உள்ளாய், நீ துறத்தலின்,
கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்மன் -
காரிகை பெற்ற தன் கவின் வாட கலுழ்பு, ஆங்கே

பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லாக்கால்;

இணைபு இவ் ஊர் அலர் தூற்ற, எய்யாய், நீ துறத்தலின்,
புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள் மன் -
துணையாருள் தகைபெற்ற தொல் நலம் இழந்து, இனி,
அணி வனப்பு இழந்த தன் அணை மென் தோள் 124.

வீதிகளும் கவின்பெறும்  ( அலங்காரம் பெறும்.) என்பார் தண்டமிழாசான் சாத்தனார். கொஞ்சநேரம் ஒரு கல்லில் அமர்ந்து வீதியைப் பார்த்துவிட்டு வீடுதிரும்பும் நிகழ்வு  நடந்துள்ளதா உங்கள் செலவுகளின்போது?

தமிழ்ச் சொற்கட்கு இத்துனை பொருண்மை.

Covet  என்ற ஆங்கிலச் சொல்லைக் காண்போம். Thou shalt not covet thy neighbor's wife.  Thou shalt not covet thy neighbour's goods என்பன பத்துக்கட்டளைகளின் இறுதி இரண்டு. "கவட்" என்ற சொல்லையும் கவர் என்ற சொல்லையும் நுணுக்கமாக நோக்குங்கள். Cupidas  என்ற இலத்தீன்  சொல்லிலிருந்து கவட் என்னும் சொல் வந்தது  என்று சொன்னூலார் கூறுவர். வெள்ளையர்கள் ஆசியாவிற்கு வந்தபின் ஐரோப்பிய மொழிகளெல்லாம் வளன் பெற்றன. இந்திய மொழிகளில் பலவற்றை இந்தியாவிற்கு வெளியிலிருந்து இங்கு வந்த தன்மை உடையவை என்று கூறுவர்.  வெள்ளையர்கள்தாம் வெளியிலிருந்து வந்தார்கள். இவர்கள் அங்கு போகவில்லை. உரோமப் பேரரசின் தொடக்கத்திலே நம் புலவர்கள் அங்குச் சென்று சொற்களை உதவினர்.   இதை ஓர் ஆய்வாளர் எழுதியுள்ளார். (சென்னைப் பல்கலை).

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

திங்கள், 22 ஜூலை, 2024

ஆரண்யகா Aranyaka ( வேதம்)

 ஆரண்யாகா என்பதன் மூலத்தை நோக்குவோம்.

இதனுடன் தொடர்பு உடைய சொல் அரண் என்பது.

அரண் என்ற சொல் பாதுகாப்பு என்று தமிழிற் பொருள்படுவதாகும். இதனைப் பிரித்தால் இதில் இரண்டு பகவுகள் உள்ளன.  அரு என்பதொன்று. அண் என்பது இன்னொன்று. இவ்விரு பகவுகளும் இணைய, அரு என்பதில் உள்ள இறுதி ருகரம் ( ரு)  நீங்கும். ( சந்தி இலக்கணத்தில் "கெடும்" என்பது).

அரு என்றால் அரிதாய்க் காணப்படுவது. அதாவது எங்காவது ஒரு முதன்மையான இடத்தில் அமைந்திருப்பது. இதன் முதன்மை யாதென்றால், இது போர்ப்படை நகர்வுகளுக்கு இன்றியமையாமை உடைய இடத்திலிருப்பது. அரண்கள் இருவகை. இயற்கையாக அமைந்த இடங்கள்.  காடு, மலை, ஆறு முதலியவைகளும் தாமே அமைந்த பாதுகாவலிடங்கள்.  செயற்கையாக அரசன் அமைத்து வைத்திருக்கும் அரண் என்பது கோட்டை மதில் அகழிகள் முதலியவை. இவை அனைத்தும் படைநடத்துவதற்கு  இயல்பாகவே உதவும் இடங்களில் அமைந்திருக்கவேண்டும். எதிரி அணுகும் வழிகளை எதிர்நோக்கி இவை இருக்கவேண்டும்.  அரு என்ற சொற்பகவில் இப்பொருளெல்லாம் அமைந்திருக்கிறது.

அண் என்பது அண்மை அல்லது எளிதில் எட்டும் தொலைவில் இருப்பது என்று பொருள்.

இவ்விரு பகவுகளும் தமிழ் மூலங்களே.

கா என்பது காவல் அல்லது காப்பது என்று பொருள்படும். இது அரு என்ற சொல்லினைத் தெளிவுபடுத்தி 9 பொருளுக்கு ஒளியூட்டுகிறது என்று முடிக்கவேண்டும்.

எனவே ஆரண்யகா என்றால் அரணுக்குரிய காப்பு என்பதாம்,

ஆனால் வேதத்தில் இருந்து நோக்கினால்  காட்டிலிருந்து கொண்டு உலக வாழ்விலிருந்து விலகித் தன்னைத் தான் ஆன்மீக நெறியில் காத்துக்கொள்வதுதான்.

வேய்தல் என்ற சொல்லும் வேய்+  து + அம் என்றாகி  வேய்தம்> வேதம் என்று முடியும் சொல்லமைப்பு.  அறிதற்கு ஆக்கம் செய்யப்பட்டது என்று பொருள். வேய்தல் என்பதும் தமிழ்ச்சொல்தான். இதில் அறிதலுக்கு என்பது வருவிக்கப்பட்டமையினால் இது காரண இடுகுறிப்பெயர் ஆகும்.

இதைப் பாடியோர் அல்லது சேர்த்துக் கட்டியோர் தமிழர்கள். அதனால் அவர்கள் தமிழ்ப்பெயரையே வைத்துள்ளனர்.

சமஸ்கிருதம் என்ற பூசைமொழி சமம் கதம் என்ற சொற்களால் ஆன சொல். சமம் என்றால் தமிழுக்குச் சமம், கதம் என்றால் ஒலி, கத்து> கது ( இடைக்குறை)>கது + அம் > கதம்.  கதமே பின் கிருதம் என்று மாறியுள்ளது. இது பூசைமொழித் திரிபு. மதங்கம் என்ற சொல் மிரு தங்கம் என்றானது காண்க. மத > மிருத,  அதுபோல் கத> கிருத. சம் > சம என்றால் சமமான, அதாவது தமிழுக்குச் சமமான ஒலி.  சமமான கிருதம். சமஸ்கிருதம்.  சமமான கதம். மதுரையை மஜ்ரா என்றதுபோல வெள்ளைக்காரன் சான்ஸ் கிர்ட் என்று மாற்றிக்கொண்டான். வித் என்ற சொல்லிலிருந்து வேத் என்றாகி வேதம் என்றானது என்று வெள்ளைக்காரன் சொன்னது அவனுக்கு வேண்டியபடியான திரிபு, மியன்மார் என்றதை பர்மா என்றதுபோல. பெய்ஜிங்க் என்றதை பீக்கிங்க் என்றான்.  இவை எல்லாம் ஆனந்தம்தான். பரமானந்தம்.  நாக்குத் திரும்பாவிட்டால்தான் ஆனந்தமெல்லாம் ஆரம்பம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின். 


வெள்ளி, 19 ஜூலை, 2024

ஷியாம் என்ற சொல்லின் தமிழ் இணைவடிவம்

 நீங்கள் இந்த ஷியாம் என்ற சொல்லின் அழகிய வாயொலிப்பைப் பலமுறை கேட்டிருப்பீர்கள். என்ன அழகான சொல்.  ஷி என்றால் அவள். யாம் என்பது நாம் என்பதுபோல் தந்நிலைக் குறிப்புச் சொல். அப்படியானால் பொருள் அவளும் நாமும் எனல் உண்மையன்று. இது (ஶியாம்) ஒரு சங்கதச் சொல். அது நம் பூசை மொழியினின்று வருகிறது,  ஆகவே ஆங்கிலத்துக்கு இதில் வேலையில்லை,

ஒரு சொல்லின் ஆக்கம் முழு வினைச்சொல்லிலிருந்து வரலாம்,  ஒரு பெயரிலிருந்து வரலாம், எச்ச வினையிலிருந்து வரலாம்  -  சுருங்கச் சொல்வதானால் எதிலிருந்து எதுவும் வரலாம்.  அப்படித்தான் உலகின் மற்ற மொழியறிஞர்கள் சொல்கிறார்கள். வினை எச்சத்திலிருந்து வந்த சொல்லும் அழகாய்த் தான் உள்ளது.  இதைச் சிற்றூரார் அழகாக, சட்டி ஓட்டை என்றாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி என்பார்கள்.  இது  இப்படித்தான் அமையவேண்டும் என்று ஏன் தாமே தடங்கல்களை இலக்கணம் என்ற பெயரில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனற்பாலது அறிவுள்ள கேள்விதான். தமிழில் நாம் ஒரு மரபைப் பின்பற்றுகிறோம். ஓர் ஏவல்வினையிலிருந்தோ ஒரு பெயரிலிருந்தோ இன்னொரு சொல்லை அமைத்து ஆனந்தப் படுகிறோம். காக்கும் இல்லம் ஆவது என்பதைத் திருப்பிப் போட்டு,  இல்லம் ஆகும் காப்பதற்கு என்று வைத்துக்கொண்டு  இல்+ ஆ+  கா =  இலாகா , அதாவது பணிமனை என்று பொருள்கொண்டு மேற்கொள்வது மிகக் குறைவே ஆகும். முறைமாற்றுச் சொற்கள் தமிழிற் குறைவு. நமக்கு வேண்டியது செந்தமிழ் அன்றோ?  திருப்பி அடித்துப் போடுவன செந்தமிழாகுமோ?

இவ்வாறெலாம் சிந்திப்பான் தமிழ்ப்புலவன்,  அது சரிதான். முறையான சொற்களைப் படைக்க முடியாமல் திணறும் போது எளிதான வழியில் சில முறைமாற்றையும் ஏற்றுக்கொண்டுள்ளனர் நம் முன்னோர்.

முறைமாற்றையும் கூரான சிந்தனைப் பேராசிரியர்களும் கண்டுபிடிக்கத் திணறிப்போகிறார்கள்.

ஆனால் பாலி மொழியிலோ சமஸ்கிருதத்திலோ இந்த நடைமுறைகள் எளித்தாக்கம் பெற்றுள்ளன,  ஓர் எச்சத்திலிருந்தும் சொல்லைப் படைத்துக்கொள்ளலாம்.

இப்போது சாயும் காலம் > சாய்ங்காலம், என்பதைப் பார்த்தால் ஒரு சொற்றொடரைக் குறுக்கி  மாலை என்பதற்கு ஈடாக ஒரு சொல் படைக்கப்பட்டுள்ளது. அதையும் மக்கள் பயன்படுத்தவே செய்கின்றனர்.

ஒரு சொல்லுக்கு எல்லாப் பொருண்மைகளும் உள்ளடக்கமாக வேண்டியதில்லை.  சொல்லுக்கு அது அமைந்தபின் மனிதனே பொருளை ஊட்டுகிறான். அதாவது அருத்துகிறான். (  அருந்தும்படி செய்கிறான்).  Meaning is fed into the word.  It is the feeding of meaning in use that is important.  அர் என்பது ஒலி என்றும் பொருள்படும்.  அர்> அரட்டு. அர்> அர்ச்சனை. r = roar! அர் > அறைதல். ர-ற பேதம் கெட்ட வெளிப்பாடு.

மனிதனே பொருளூட்டுவதால், எப்படித் தொடக்கத்தில் சொல் வந்தது என்பது முக்கியமன்று என்று புலவர் சிலர் நினைக்கின்றனர்.

சாய்ந்துவிட்டால் இரவு வந்துவிடுகிறது.  சூரியன் சாய்ந்துவிட்டால் இருள் என்பது தெரியாதோ? எந்த மனிதனும் அத்துணை கூமுட்டை இல்லை!

 ஷியாம் என்பது.

சாயும் > ஷியாம் >    ( இருள்.)

சாயும் என்பது தமிழில் பெயரெச்சம்.

சாயும் அழகு = ஷியாம் சுந்தர்.

இருளழகன்.

ஷியாமளா.  கண்ணன்.

நீலமேக ஷியாமளா

நேரிழையாளைக் கண்டு

மாலாகினேன் நான் மாதவா.....(பாட்டு)

கடவுளோ எங்கும் இருக்கிறார்

இருள் வானில் இல்லையோ?  அங்கும் கடவுள்.

இருள் வானம்  அது இயற்கைக் கடவுள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.



Enough leave and rest in Singapore?

 The foreigner, originally from the US, shared that he had been offered a senior manager position at a major tech multinational corporation (MNC). While the job offer seemed promising, he expressed some concerns about the leave policy. 

You may click here to read this:

Foreigner who’s been offered a job in SG asks, “Is work/life balance really that bad in Singapore?” (msn.com)

குடமுழுக்கு அன்னதானம்


 
[இது எண்சீர் ஆசிரிய விருத்தம்,]

வடதிசையும் தென் திசையும் வந்திருந்த பத்திசெய்வோர்

வயப்பட்டுத் தொழுதிடவே வழியே செய்ய,

குடதிசையும் குணதிசையும் கூடிநின்ற ஆர்வலர்கள் 

கோலமுனீ சுவரனையே வணங்கி உய்ய,

தடையொன்றும் இலதாகித் தகைபெருகித் தமிழ்முரசார்

தானமொன்றும் அன்னத்தால் தரவே மக்கள்,

விடைபெற்றுச்  சென்றார்கள் வீடுகளில் பக்திமணம்

விஞ்சியதே பற்றுமிக விளங்க    வாழ்வீர். 


காணொளிக்குக் கருஜி அவர்கட்கும் தமிழ்முரசுக்கும் நன்றி.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

 

வியாழன், 18 ஜூலை, 2024

பழைய நூல்கள் பகுத்தறிவீர்

வாழ்வெல்லாம் சொற்பனமே என்னும் போது 

சார்திகளும் பிரிவுகளும் கனவு தானே?

வாழ்விலிதே உண்மைஎன்ப திந்துப் போக்கு

சார்திஎன்ப தொன்றுமட்டும் உண்மை அன்று

சூழ்வதுவும் சுற்றியுள்ள எல்லாம் காணின்

சொந்தமாகும் வீட்டுக்கு  என்னும் சிந்தை

வாழ்சமயம்  ஒன்றனுக்குப் பொருத்த மில்லை

வளம்சாரும் இந்துவிலே  சார்தி இல்லை.


பண்டைநாளில் நூல்கள்துறை  பிரித்துப்  போட்டுக்

கொண்ட இதில் இதுவடங்கும்  என்பார் இல்லை.

ஒன்றுதுறை அதிற்கலவாப்  பொருளும் இல்லை;

சென்றதிலே கலந்திருக்கும் குறைகள் இல்லை;

வென்றபோர்க்  கதைகளிலெ குடும்பம் உண்டு;

வீழ்வு சாவு  மேற் செலவென்  றெல்லாம்  உண்டு!

இன்றையநூல் போலாமை பழமை நூல்கள்

இனிதவற்றைக் குழப்பாமல் உணர்ந்து காண்பீர்.


பொருள்:

சொற்பனம்:  சொப்பனம், ஸ்வப்பனம்

சார்தி  =  சாதி,  ஜாதி,  சார்பு என்ற சொல்லுடன் தொடர்புடையது

சாதி.

போக்கு - கொள்கை

வாழ்சமயம் -  புதிய நிலைகள் தோன்றிக்கொண்டிருக்கும் வளரும் சமயம்.

பண்டை நூல்கள் ஒரு துறைக்குள் அடங்குவன அல்ல.  ஆகவே  சமயத்தில் வாழ்க்கையில் உள்ளவையும் கலந்திருக்கும்.  எனினும் அவை சமயத்தின் பகுதி அல்ல.


ஐசுக்குத் தமிழில் மூலம்

 Eis என்ற ஐரோப்பிய மூலம், தமிழ் ஐ என்ற சொல்லின் திரிபுதான். படுக்கை வாட்டில் கிடக்கும் நீர்,  கட்டியாகி உயர்கிறது. உயர்ந்து அடைந்த வடிவத்தில் கரையும் வரை நிற்கிறது.   ஐ என்பது தரையினின்று எழுந்த நிலைதான். கட்டியாகிவிட்டால் தண்ணீர் படுக்கைப்பரவலாகி எழும்பாது காய்ந்துவிடும் அல்லது வழிந்துவிடும்.

அங்கு இயைந்து இருக்கும் நீர்க்கட்டியே ஐஸ்.  சுட்டுச்சொற்களில் ஐ  ஆக்கம் பெறும். (அதாவது ஆக்கப் பொருளதாகி வரும்.)  ஐ என்பது அ-ய் என்ற சுட்டும் ஒற்றும் உற்ற கலவையாகும்.

ஐ+ இயை + சு > ஐயியைசு> ஐஇசு>  ஐசு ஆகும்.  ஐஸ் என்ற சொல் தமிழில் அமைந்திராவிட்டாலும் மூலங்கள் உள்ளன. கட்டியாகி உயர்ந்து இயைதல் என்ற கருத்து ஐசுடன் ஒப்ப முடிகிறது.

இந்த மூலங்கள் எவ்வாறு அங்கு போயின எனற்பாலதை முன் இடுகைகள் சிலவற்றில் விளக்கியுள்ளோம். வாசித்து மகிழவும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்


புதன், 17 ஜூலை, 2024

அங்குசம் என்பது

 அங்குலம் என்பதை அறிந்துகொண்டீ  ராதலின் அங்குசம் என்பதை எளிதில் அறியலாம்.

அண் -  அடுத்து சென்று

கு  -  (யானையின் உடலைச்) சேர்ந்து.

உசு(ப்பு)  -   குத்தி (  விழிப்பூட்டி)   

அம்  அமைதல்.

அண்கு+ உசு+ அம் >  அண்குசம் > அங்குசம்.

உசுப்பு என்பதில் உள்ள பு விகுதி களையப்பெற்றுச் சொல் அமைந்தது.

அங்குலம் என்பது தொடர்புள்ள இடுகையாதலின் புரிதலுக்காக அதையும் படித்தறியவும். அது இதற்கு முன் உள்ளது

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

செவ்வாய், 16 ஜூலை, 2024

Muneeswaran Temple consecration video

 Queenstown Singapore:


அடுக்குமாடி இல்லங்கள் அழகு காட்டும்
ஆர்ந்தமுனீஸ் வரன் கோவில் திகழும் பாக்கம்
தொடுத்தகுட முழுக்குவிழா தொடர்ந்த பூசை
தூயபிர சாதங்கள் வழங்கல் யாவும்
எடுத்துயர்ந்த சிறப்பினொடும் இயன்ற மேன்மை
இயம்பிடவும் சொல்லில்லை உடுப்போல் உச்சம்
கொடுத்தவொத்து ழைப்பிற்கோ  கூவும் வாழ்த்து
கூறுகின்றார் யாவருக்கும் நலமார் நன்றி.

 -----(கருஜி)

காணொளி அனுப்பிய கருஜி அவர்கட்கு  நன்றி  பல.

தமிழ் முரசின் சேவைக்கும் மகிழ்ச்சி.
தெரிவித்துக்கொள்கிறோம்.

பொருளுரை:

சிங்கப்பூரின் ஒரு பாக்கத்திலே ( பகுதியிலே)  அழகிய அடுக்குமாடி இல்லங்களும் நிறைவான முனீஸ்வரன் கோவிலும் இருக்கின்றன. இங்கே  குடமுழுக்கும்  பூசைகளும் பிரசாதம் வழங்குதலும் சிறப்பாக நடந்தேறின. இந்த நிகழ்வைப் புகழ வார்த்தைகள் இல்லை.  உடு - நட்சத்திரம்   அதைப்போல உச்சமான அழகே எல்லாவற்றிலும்  . யாவரின் ஒத்துழைப்புக்கும் வாழ்த்தும் நன்றியும் கூறுகின்றோம். Star performance says this poem.  கூவும் -   பலமாகச் சொல்லும்.   நலமார் -  நலம் கருதுகிற.  அதாவது இனி வரும் நிகழ்வுகளிலும் இத்தகைய ஒத்துழைப்பு வரவேண்டும் என்பது பொருள்.

திங்கள், 15 ஜூலை, 2024

அங்குலம்




அங்குலம் என்ற சொல்லைத் தமிழி லிருந்து எவ்வாறு பொருள்சொல்லுவது என்று பார்ப்போம். இதற்கு "விரற்கடை " அல்லது "விரற்கடை அளவு" என்று அகரவரிசைகள் பொருள்கூறும். இதுவும் சரியான பொருள்தான்.

இச்சொல்லை அண்கு + உல் + அம் என்று பிரிப்போம்.

அண்கு என்பதில் அண் என்பதற்கு அடுத்திருத்தல் என்று பொருள். அண்ணிய எனில் பக்கத்திலுள்ள. அண்ணுதல் வினைச்சொல்லுமாகும். உல் என்பது பல்பொருள் ஒரு சொல் லாவதுடன் ஓர் அடிச்சொல்லுமாகும். ஓரிடத்திலிருந்து இன்னோரிடம் செல்லுதலும் குறிக்கும். உல்: வளைவும் குறிக்கும். உலவுதல் என்றால் சுற்றிவருதலுமாகும்.

ஓரிடத்திலிருந்து அடுத்துச் சென்று அங்கு நின்றுவிட்டால் அது இடைத்தொலைவைக் குறிக்கும். இந்த இடைத்தொலைவுதான் விரற்கடைத் தொலைவு அல்லது அங்குலம் எனப்படுகிறது. நகரும் பொருள் எங்காவது சென்று நிற்கலாமென்றாலும் இங்கு கணக்குக்கு ஒரு விரற்கடை யளவில் நின்றுவிடுகிறது என்பதை அறியவும். அண்கு உல் என்பவற்றில் உல் என்பது முன்செலவைக் குறிக்கிறது பின்னர் அண்கு , அதாவது அண்மிய மாத்திரத்தில் சேர்ந்துவிடுகிறது அல்லது நின்றுவிடுகிறது. ஒருவிரற் கடைச் செலவாதலின், அது அங்குலம் ஆகிறது.

அண்கு - அண்மிச் சேர்கிறது : இங்குச் செலவு முடிகிறது.

உல் ( உலவியது ) - ஒரு விரலளவு. இங்கு உல் நேர்முற்செலவு குறிப்பது. உல் என்னும் மூலம் பல்பொருளது. அவற்றுள் ஒரு பொருளில் இங்கு வருகிறது.


இது பேச்சு வாக்கியமாய் இருந்தால், உல் அண் கு என்ற நிரலில் "சென்று சேர்ந்தது" என்ற பொருளில் வந்திருக்க வேண்டும். சொல்லாக்க மானதினால் முறைமாற்றாக வருகிறது. இதை ஏன் "உலண்கு" என்று நிரல்படுத்தவில்லை என்றால், முற்றிய சொல்லாக்கம் இங்கு தமிழ் மரபுக்குரிய ஒலியில் வரவில்லை. திருப்பிப்போட்டு அம் விகுதி ஏற்றினால் தமிழ்ச்சொல்லின் இசைவை ஒத்து வருதல் காண்க.

இதன் மூலம் அண்கு உல் அம் என்பதே சொற்பாகங்கள் என்பது தெளிவாகிறது.

இனி, சொற்கள் பாகப்பட்டு நிற்காமல் ஒழுகிசைவோடு முடிக்க, அண்கு என்பது அங்கு ஆகிறது. உல அம் என்பது உலம் ஆகிறது. அங்கு + உலம் > அங்குலம் ஆயிற்று என்று அறிக.

மெய் எழுத்து  ண்> ங் என்று மாறுவது பேச்சிலும் எழுத்திலும் காணலாம். கண்காணி > கங்காணி. ( கருப்பையா கங்காணி, செல்லப்பா கங்காணி என்பன போலும் பெயர்கள் தொழிலாளிகளின் மேற்பார்வையாளர்களுக்கு இயல்பாக வழங்கும்). இன்னும் வேறு சொற்களிலும் இப்படி மாறும். னகரமும் ஙகரமாய் ஒற்றுக்கள் வரும்போது மாறும், பழைய இடுகைகளில் கண்டு உணர்க. மற்ற உயிர்மெய்கள் வருமாயின் ஏற்ப மாறுதலடையும். எடுத்துக்காட்டு: பாண் சாலி > பாஞ்சாலி என்று வந்து பாணர் கொடிவழியைக் காட்டும். து என்பதும் சு என்று மாறும் : ஐந்து > அஞ்சு.  மந்தி என்பது  மன்+ தி என்று மாறிச் சொல்லானது. மனிதன் போன்றது என்பது சொல்லமைப்புப் பொருள்.

அங்குலம்  :  மிக்கத் திறனுடன் அமைக்கப்பட்ட சொல்.

உலகு என்பதிலும் உல் - உருண்டையாக, அ - அங்கு, கு - சேர்ந்தது என்று வருவது போலுமே இச்சொல்லும். முறைமாறி உல் என்பது முன் நின்றது.

கு - சேர்ந்து, வல் - வலிமையுடன், அ - ஆங்கு , அம் - அமைந்தது, குவலயம், இந்த உலகம் என்ற பொருளில் இச்சொல்லையும் காண்க. இங்கு கு முதலில் வந்துள்ளது. இது இருபிறப்பி. கு+ வலை + அ + அம் : சேர்ந்து சுற்றாக அமைந்தது உலகம் என்பதும் பொருள். வலை > வளை. வலிப்பு என்ற இழுப்பில் கோணல் அல்லது வளைவு இருக்கிறது என்றாலும், ளி என்று இடாமல் லி என்பதையே கொண்டமைத்தனர். சொல்லமைப்பின் ஆக்கத்தின் பின் வரும் ஆட்சியே சொல்லின் திறத்தை உறுதியாக்கும்.

சொற்களின் திறம் கண்டு அமைத்தோரைப் பாராட்டுங்கள். இது ஒரு காரண இடுகுறிப்பெயர். இங்கு செலவு அல்லது நகர்வு விரலின் ஒரு பகுதி அல்லது பக்கத்திலிருந்து இன்னொரு பகுதி அல்லது  பக்கத்துக்கு என்பதை வருவித்துப் பொருள்கொள்ள வேண்டியிருப்பதால், இது காரண இடுகுறிப் பெயர் ஆகிறது.  நாற்காலியைப் போலவே இதுவும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

சுக்தம் என்ற சமஸ்கிருதச் சொல் அமைப்பு

 சுக்தம் என்ற சொல் எவ்வாறு அமைந்தது என்பதைக் காண்போம்.

இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் காட்டப்படலாம்.  ஆதலின் இது ஒரு பல்பிறப்பிச் சொல் என்பதை மனத்தி லிருத்திக்கொண்டு,  இதற்குத் தமிழிலிருந்து பொருள் கண்டுரைப்போம்.

சொக்குதல் என்பது ஒரு தமிழ்ச்சொல். அது இன்றுவரை நம்மிடம் உள்ளது. இச்சொல்  " சொக்கன்" என்று அமைந்து சிவபெருமானைக் குறிக்கும்.  சிவபெருமான் பற்றருக்கு ( பக்தருக்கு)  அவர்பால் மயங்கும்படியான ஏக்கத்தைத் தரவல்ல கடவுள் ஆவார்.  சிவன் ஆதிக்கடவுள் என்றும் கூறுவர்.  முழுமுதற் கடவுள் என்றும் கூறுவர்.  அவரைத் தொழுதலானது பற்றனொருவன் அவர்பால் வீழ்ச்சி பெறும் மயக்கினை அளிக்கவல்லது என்பர்.  அங்கிங்கெனாத படி எங்கும் பிரகாசமாய் இருப்பவர். தாயுமானவர் அவரைப் பரிபூரணானந்தம் என்பார்  [.மயங்குதல்.  To be enchanted, fascinated, captivated, subjected to the will of another ( இங்குக் கடவுள் என்று பொருள் கொள்க).]

வேதத்தின் சொற்களுக்கும் இவ்வாறு மயக்குறுத்தும் வலிமை உண்டு என்பர். எனவே சொக்குதல் என்ற சொல்லினின்று சுக்தம் பெறப்பட்டிருத்தலும் மிக்க உயர்ந்த நிலைக்கு ஒரு மேடை அமைத்துத் தந்தது போலாம் என்பது தெளிவு.

மேலும் சொ என்ற எழுத்தும் சு என்று திரியவல்லது என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது. இதற்கு நல்ல எடுத்துக் காட்டு:  சொந்தம்> சொதந்திரம்> சுதந்திரம் எனக் காண்க. சொந்தத் திறனைக் கொண்டுஒரு நாட்டை ஆளுதல் என்பதே இது.

சொக்கு + தம்<  (சொக்கு+ து + அம் ) >   சொக் +த்+ அம் >  சுக்தம்.   இவ்வாறு வேதப்பாடலைக் குறிக்கவல்லது இந்தச் சொல்.

சொல்+ கு + தம் > சொற்கு தம்>  > சுக்தம் எனினும் ஆகும்.  பற்றனின் ஒவ்வொரு வேண்டுதலுக்கும் செவிசாய்க்கும் பாடல்கள் என்று குறிக்க.

இவ்வாறு தமிழிலிருந்து பொருள் அறிய, இனிய பொருள் கிட்டுகிறது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


சனி, 13 ஜூலை, 2024

மண்டலம், சுருதி. சம்கிதை என்பவை.

 மண்டலம் என்ற சொல்லை இன்று ஆய்ந்து பிறப்பறிவோம்.

இச்சொல்லில் உள்ள உதிரிச் சொற்கள் இவை:-

மண்டு(தல்) என்ற வினைச்சொல்.

அல் என்ற அடிச்சொல். இதிலிருந்து அலை என்ற சொல்லும் உணடாகும். அங்குமிங்கும் செல்வது. இயக்கமுடையது.

அம் - அமைதல் குறிக்கும் விகுதி.

மண்டுதல் என்பது  நெருக்கமாய் ஓரிடத்திருத்தலைக் குறிக்கும்.  தனித்தனிப் பொருட்கள் ஒன்று கூடி இருத்தலை மட்டுமின்றி எண்ணிக்கைக்கு உரியவல்லாத பொருட்களுக்கும் இச்சொல்லைப் பயன் கொள்ளலாம்.  எடுத்துக்காட்டு; புகழ்.

நீலத் திரைக்கடல் ஓரத்திலே - நின்று

நித்தம் தவம்செய்த குமரி எல்லை,-- வட

மாலவன் குன்றம் இவற்றிடையே   ---  புகழ்

மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு.  (  பாரதியார் பாட்டு).

மண்டுதல் செறிவு குறிக்கிறது.  ( நிறைவு ).

வேதங்களின் பகுதிகள் "௳ண்டலங்கள்" என்று குறிக்கப்பெற்றுள்ளன.  செறிவான செய்திகள்  உள்ளிருத்தலினால் இவ்வாறு மண்டலங்கள் என்று குறிப்பு உடையனவாய்ச் சேர்க்கப்பட்டுள்ளன. மண்டலம் என்பதும் தமிழ் மூலங்கள் உடைய சொல். மண்டுதல் என்பதை அடர்வு என்றும் கூறலாம்.

சுருதி என்ற சொல்லை அடுத்து நோக்குவோம்;

இதில் இரண்டு சொற்கள் உள்ளன.  சுரத்தல்,  உது - முன்னிருப்பது, இ - இது இங்கு என்று பொருள்தரும் விகுதியாகும்.  சுரத்தல் என்பது தமிழ் வினைச்சொல்.

சுர + உது + இ >  சுருதி.

சுர என்பதில் ஈற்று அகரம் கெட்டது.  ஆகவே

சுர் + உது + இ என்று புணர்ந்து சொல் ஆக்கம் பெற்றது,

சம்ஹித என்பதும் சமை இது அ என்று பிரியும்.

சமைத்தல் -  சேர்த்து உருவாக்குதல்.

இது ஓர் இடைநிலை.

அ என்பது பன்மை விகுதி.

இது சேர்த்துக் கட்டி அமைக்கப்பட்டது என்பது பொருள். எனவே தமிழ் மூலங்கள் ஆகும்.

சமை + கிட + ஐ > சம்கிடை> சம்ஹிதை எனினுமாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

 



 

வியாழன், 11 ஜூலை, 2024

துல் தல் அடிச்சொற்கள் பொருண்மை--- தலை என்பது என்ன?

வருதல், போதல் என்பவைபோல் வினைச்சொற்களுடன் கூடி, தல் என்பது வினைச்சொல்லின் விளைந்த பெயர்களைக் குறிக்க  ஆளப்பெறுகின்றது. இதிலிருந்து மண்டையைக் குறிக்கும் தலை என்ற சொல்லும் ஏற்பட்டுள்ளது. ஆகவே இப்பெயர் எப்படி வந்தது என்று அறியவேண்டியுள்ளது. 

தலை என்ற உறுப்பையும் குறிக்கும் சொல்லுக்கு எது மூலச்சொல் என்று இன்று அறிந்துகொள்வோம். இதற்கு வேறு பொருண்மைகளும்  பயன்பாடுகளும் உள்ளன என்பது நீங்கள் அறிந்ததே. இச்சொல்லிலிருந்து பிற சொற்களும் தோன்றியுள்ளன. எ-டு: தலையாரி, தலைச்சன்(பிள்ளை)  என்பவைபோல,  இவையும் நீங்கள் அறிந்துவைத்துள்ளவைதாம்.

சுட்டடிச் சொல் அமைப்பின்படி, தல் என்பது தலை என்பதன் அடிச்சொல். அடிச்சொல்லுக்கு ஒரு மூலம் இருக்கவேண்டும், இந்த மூலமான சொல்: துல் என்பதுதான்.

துல் என்ற அடிக்கு என்ன பொருள் என்பதை அறியவேண்டும். இதன் பொருளாவன:

சரியானது;  ஒப்புமை, எதிர், திட்டமுள்ளது, குறையில்லாதது; மறைப்பு இல்லாமை; தடையில்லாமை; இடமாய் இருப்பது அல்லது இருக்க இடம்தருவது; இணைப்பொருள்: உள்ளடங்காமல் தள்ளி இருப்பது,    முழுமை அல்லது எல்லாம் அடங்கியிருப்பது .

எல்லாம் இங்கு சொல்லிவிடவில்லை. இங்கு அகப்பட்டுச் சொல்லப்படாத பொருட்சாயல்களும் இருக்குமென்று கொள்க.

துல் என்ற அடியிலிருந்தே தல் என்பது ஏற்பட்டது.  ஆகவே வருதல் போதல் என்பன போலும் சொற்களில் இவற்றுள் ஒன்றில் உடன்பட்டுப் பொருள்தரும் விகுதியாகும்.  

இனி, து + அல் > தல் என்பதை உணர்ந்து,  இதுவே  (தல் ) உண்மையாகும், அல்லாதவை இதில் அடங்கா என்ற பொருளும் பெறப்படும்.  எனவே, அடங்கியவை, அடங்காதவை என இருபாற்கும் தல் என்பது பொதுவாகும் என்பதையும் அறிக.

காட்டாக,  தலைவன் என்ற சொல்லில் தொண்டன் உள்ளடங்கமாட்டான். அவன் அடங்கினானாகில் தலைமை என்பது ஏற்கப்படாமல் முடியும். அதுதான் சரியென்றாலும்,  தொண்டன் இல்லாமல் தலைவன் இல்லை என்பதும் உண்மை. ஆகவே, அடிச்சொல்லில் இடம் நோக்கியே தல், தலை என்பதற்கும் பொருள் இணங்குறுமாறு எடுத்துக் கொள்ளவேண்டும்.  முன் பொருள் துல்> தல் என்ற திரிபிலும் பின் பொருள் து+ அல் என்ற திரிபிலும் அல்லது திரிபமைதியிலும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு நோக்கிப் பகுத்தறிகையில்,  தல் > தலை என்பதன் பொருள் தெரிகிறது.  தலை என்றால் யாவரும் அறிய வெளியில் அறியப்பட்டு, உள்ளிலும் கீழிலும் அடங்காதது என்று பொருள். இது மனிதன் தலைக்கும் என்றும் தலைமை(த் தன்மை)க்கும்  பொருந்திவரும் என்பது அறிக. இச்சொல்லின் நுண்பொருள் தெளிவானது என்று அறிக.

ஆகவே தலை என்ற சொல்லும் தல் என்ற இடைச்சொல்லும் ஒருசேர உணர்விக்கப்பட்டன. ஆனால் புரிதல் மெதுவாக வரும் . இதைப் பலமுறை படித்தறியவேண்டும். அதுவும் வெவ்வேறு வேளைகளில் சென்றறிக.

தலை

இயல்பு நிலையில் மறைப்பு இல்லாத இடத்திலமைந்த உறுப்பு என்று இதை வரையறை ( define ) செய்தால் பொருண்மை வெளிப்படும். திருடனோ தூங்குபவனோ, குடைபிடிப்பவனோ  மறைத்துக்கொள்வான், ஆனால் இயல்பு நிலையில் மறைப்பில்லாத உறுப்பு என்பது பொருள்.  மறைப்பில்லாத, யாவரும் அறிந்த இடமும் தலை எனப்படும். எடுத்துக்காட்டு: தலையாலங்கானம்.  தலைச்சங்கோடு. குளித்தலை.

ஐ விகுதி உயர்வுப் பொருளது. தலைக்குப் பொருந்துவது ஆகும். தல் + ஐ > தலை  ஆதல்  காண்க.  ஐ மேலிருப்பதையும் உணர்த்தும்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின். 


செவ்வாய், 9 ஜூலை, 2024

சத்திரம். சாவடி

 இந்த இரு சொற்களையும் நுணுகி ஆராய்வோம்.

சத்திரம் எனற்  பால சொல்லில் மூன்று பகுதிகள் : அவை சற்று,  இரு, அம். அமைப்பு குறிக்கும் விகுதி தான் அம் என்பது.  விகுதி  என்றால் சொல்லின் மிகுதியாய் நின்று சொல்லைப் பிறப்பிப்பது.

சற்று என்பது எழுத்து மொழியில் மட்டும் உள்ள வடிவம். இது சத்து என்றுதான் பேச்சில் வரும். இதன் மூலம் சல் என்பதே.இதன் பொருள் தேர்ந்தெடுத்த இடம் என்பது. கொஞ்ச நேரத்துக்கு என்றும் பொருத்தமான பொருளைத் தருகிறது. நேரம் இடம் இரண்டுக்கும் பொதுவான சொல் இதுவாகும். சலித்தல் என்பது சல் என்பதினின்றும் கிடைக்கும் சொல்லாதலால்  பொறுக்கி எடுத்த ஓர் இடத்தில் தங்குவது என்று பொருளாகிறது.

சத்து இரு அம் >  சத்திரு அம் > சத்திரம்.

இரு அம் என்பது இரம் என்று வருதலில் ருகரத்தில் உள்ள உகரம் ஒழிந்தது. ( கெட்டது )

பல் + து > பற்று >  பத்து.  ( இது பத்து என்ற எண்ணிக்கை. )  இதிலும் பற்று என்று வராமல் சொல்லாக்கத்தில் பத்து என்றே வந்தது.  சொல்லாக்கப் புணர்ச்சியில் இவ்வாறு வருதல் பெருவழக்கு ஆகும்.

பத்து என்ற எண்ணுக்குப் பெயருண்டாக்கிய போது, பல் து என்றிரண்டையும் சேர்த்துப் பெயரமைத்தனர். அதாவது எண்ணிக்கையில் பலவானது என்பதே பொருள்.

இனிச் சாவடி என்ற சொல்:

இது கல்வெட்டில் உசாவடி என்று காணப்பெறுகிறது.  ஆகவே சாவடி என்பது  உசாவு அடி என்பதில் உகரம் குன்றிய சொல்லாகும்.  உசா வி அறிவதற்கு அடுத்திருக்கும் கூடாரம் என்பது பொருள்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்.




திங்கள், 8 ஜூலை, 2024

சல்லுதல் என்ற வினைச்சொல்.

 சல்லுதல் என்ற வினைச்சொல் ,  அதாவது சல்லு என்ற ஏவல்வினை, இப்போது வழக்கில் இருப்பதாகத் தெரியவில்லை.  அந்தப் பாத்திரத்து நீரைக் கொஞ்சம் எங்கும் சல்லிவிடு என்று சொல்லிக் கேட்கவில்லை.  இப்போது ஆங்கிலக் கல்வி மிகுந்துவிட்ட படியால், பலரும் தெளிப்பதை ஆங்கிலத்தில் "ஸ்பிங்கில்"  என்றுதான் சொல்கிறார்கள்.

பல சிறு துளைகள் உள்ள தூவு துளைத்தட்டினைக் கொண்டு தூளாய் உள்ள தானியம் எதையும் மாவு வேறாகவும் சற்றுப் பெரிய துண்டுகள் வேறாகவும் பிரிக்கச் சலித்தல் என்று சொல்கிறோம்.  சல் ( வினைச்சொல்) அப்போது சலி என்று மாறுவதை அறியலாகும்.  இது தமிழில் சொல்லமைபிற்கு உடன்பாடான திரிபுதான்,  அடு> அடி என்று மாறுவதைப் போன்ற திரிபுதான் இது.  நாம் ஆராய்தறிந்த விதிகட்கு இயைந்த திரிபு என்பதில் தெளிவுள்ளது. அடுத்துச் சென்றாலே அடித்தல் இயலும்.  நிலத்தைக் கால்கள் அடுத்தாலே அடி என்பதை வைக்கமுடிகிறது. இதை விளக்கும் பொருட்டு இங்குச் சற்று விரித்தோம்.

சல்லடை என்பது சல்லும் துணைக்கருவி ஆகும்.   சல்லும் துளைகள் அடைவாக இருத்தலான் அது சல்லடை எனப்பட்டது,  ஆதலின் சல் என்ற வினைச்சொல் முற்றும் தொலைந்துவிடவில்லை. இன்னுமிருப்பதும்  உள்ளாய்வதற்கு வசதி தருவதும் நம் நற்பேறுதான்.

சல்லடை என்பது  கல்லடை என்று திரிந்திருப்பதால்  சகர ககர மாற்றீடு மீண்டும் மேல்வரக் காண்கின்றோம்.  இதைச் சேரலம் - கேரளம் என்ற திரிபில் கண்டிருக்கிறோம். இவ்வாறு திரிதலுற்றவை பலவாகும்.

சல்லு என்பதன் மூல அடி துல்  ஆகும். அதை இங்கு யாம் விளக்கவில்லை. 

இயன்ற அளவு தமிழில் உள்ள வினைச்சொற்களைப் பயன்படுத்துங்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

சனி, 6 ஜூலை, 2024

செய்வனவும் தவிர்ப்பனவும் . குறள்.

[எழுதியது:  அ.மா. மணிப் பிள்ளை.]



 அது கைப்பேசிகள் இல்லாத காலம்.  1985.

என்னுடன் அதிகாரியாய் இருந்த ஒரு சீன நண்பர் ஒரு நாள் என்னிடம் தொலைபேசி அழைப்பை விடுத்தார். அதில் ஒரு பெண்ணைத் *தான் கைது செய்திருப்பதாகவும் உம்மைத் தெரியும் என்றும் சொல்கிறாள். கேட்டு நான் என்ன செய்வதென்று அன்புகூர்ந்து சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

அந்தப் பெண் பின் என்னிடம் பேசினாள். தன்னை விபசாரக் குற்றத்திற்காகக் கைது செய்திருப்பதாகவும் நான் பேசி உதவவேண்டும் என்றும் சொன்னாள்.

நடந்த விடயங்களைச் சுருக்கமாக அறிந்துகொண்டு, பின்னர் அந்த அதிகாரியிடம் பேசினேன்.  நீர் சட்டபடி நடக்கவேண்டியவர். நானும் அப்படித்தான். நாம் இருவரும் இதில் என்ன செய்ய முடியும். உமது வேலைக்கு உள்ளவாறு நீர் செய்துகொள்ளவும். இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று சொல்லிவிட்டேன்.

நாம் ஓரிடத்தில் வேலை செய்தால் அந்த வேலையை ஒழுங்கான முறையில் செய்து நலமான விளைவுகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.  பிடித்த வழக்கிலும் பொதுமக்களிடமிருந்து வந்த புகாரின்பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று அறிந்துகொண்டேன். இந்த அதிகாரியுடன் அவருடைய ( அதிகாரியின்)  குழுவினரும் கைது நடவடிக்கையின்போது இருந்துள்ளனர். இதிலிருந்து தப்பித்து விடலாம் என்று அந்தப் பெண் நினைத்தது அவளது முதிர்ச்சியின்மையையே காட்டியது. இது பொய் வழக்கன்று.

அப்புறம் அந்த வழக்கைப் பற்றி எனக்குத் தகவல் இல்லை. இவள் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனை பெற்று வெளியில் வந்துவிட்டாள் என்று நண்பர்கள் மூலம் அறிந்துகொண்டேன்.

இதற்குப் பின் இவளைக் கோயிலில் பார்த்து, அவள் என்னிடம் நலம் விசாரித்தாள் . இந்த வழக்கைப் பற்றி என்னிடம் எதுவும் பேசவில்லை.

நான் உதவி செய்யவில்லை என்ற வருத்தம் இன்னும் இருப்பதாகப் பிறர் மூலம் அறிந்துகொண்டேன்.  தான் பிடிபட்ட சங்கதி வெளிப்படாமல் வேறு தொந்தரவுகள் எனக்கு இருப்பதாகச் சொல்லுவாள்.  அதனால் வேறு சில கீழறுப்பு  வேலைகளில் அவ்வப்போது அவள் தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்கிறாள்.  பொய்யும் சோடனைகளும் மிகுதி.

இங்குள்ள சில குறிப்புகளை மாற்றிச் சொல்வதும் இவளுக்கு வேலையாகிவிட்டது.

காவல் துறையில் வேலைசெய்வதில் இதுவும் ஓர் இன்னல் ஆகும். சிலர் உதவவில்லை என்று வேறு எதையாவது சொல்லி அவதூறு பரப்புவார்கள். கேட்பவர்கள் இதை எல்லாம் அறிந்துகொள்ள அவர்களுக்கும் நேரம் இராது. இவ்வாறு சில எண்ணிக்கையில் நம் இந்தியர்கள் உள்ளனர். 

இவளுடன் பிற்காலத்தில் ஒருவன் சேர்ந்துவாழும் கணவனாய் இருந்தான். இப்போது பதிவுத் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிகிறது.  வாழ்க வளமுடன்.

எல்லோரும் வாழ்க. உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும்.

குறள்.

பரிமேலழகர் உரை:  செய்தக்க அல்ல செயக் கெடும் - அரசன் தன்வினைகளுள் செய்யத்தக்கன அல்லவற்றைச் செய்தால் கெடும், செய்தக்க செய்யாமையானும் கெடும் - இனி அதனானே அன்றிச் செய்யத்தக்கனவற்றைக் செய்யாமை தன்னானும் கெடும். (செய்யத்தக்கன அல்லாவாவன : பெரிய முயற்சியினவும், செய்தால் பயனில்லனவும், அது சிறிதாயினவும் ஐயமாயினவும், பின் துயர்விளைப்பனவும் என இவை. செய்யத்தக்கனவாவன: அவற்றின் மறுதலையாயின. இச்செய்தல் செய்யாமைகளான் அறிவு, ஆண்மை, பெருமை,என்னும் மூவகை ஆற்றலுள் பொருள், படை என இரு வகைத்தாகிய பெருமை சுருங்கிப் பகைவர்க்கு எளியனாம் ஆகலான், இரண்டும் கேட்டிற்கு ஏதுவாயின. இதனான் 'செய்வன செய்து, ஒழிவன ஒழிக' என இருவகையனவும் உடன் கூறப்பட்டன.)

அரசருக்குச் சொன்னது அரசின் அதிகாரிகளுக்கும் உரியதாகும். அரசுக்குத் தலைமையாய் இருப்பவர் அரசு காவல் ஊழியர்கள்  எல்லோரும் அரசர்தாம். பொருளை விரித்துக்கொள்க.




 


வெள்ளி, 5 ஜூலை, 2024

திரவம்

 திரவம் என்பதை அறிவோம்.

திர் என்பது திரட்சி குறிக்கும் அடிச்சொல்.  மாற்றமும் இதனால் அறியப்படும்.

எடுத்துக்காட்டு:  திர்>  திரிபு.

. எப்போதுமுள்ள நீரில் சற்று மாற்றம் ஏற்பட்டுத் திரவங்கள் உண்டாகின்றன. எடுத்துக்காட்டு: ஓமத்திரவம் அல்லது ஓமத் திராவகம்.

திர் > திர் + அவி + அம் >  திரவம்.  அவி என்பதில் இகரம் கெட்டது.

வேவித்து மாற்றம் அடைந்த நீர்ப்பொருள். அல்லது முன்னைய நிலை மாறிப் பின் உண்டாகிவரும் நீர்ப்பொருள். இது சொல்லமைப்புப் பொருள்.

திர் அவி அகம் >( திரவகம்) > திராவகம்.

அவி என்பது அ இ என்ற இரண்டு சுட்டுகள் ஒன்றாகி ஏற்படும் சொல். இடையில் வ் என்பது வகர உடம்படு மெய்.  முன் நிலையில் முன்னொரு மாற்றம் உண்டாகி இன்று வேறு ஒரு நிலையை  அடைந்து இருப்பதான ஒரு நீர்ப்பொருளை இது குறிக்கிறதென்பது தெளிவு. இது  சொல்லமைப்பில் உள்ள பொருள். பயன்பாட்டில் அது வேறு பட்ட நிலையினதற்கும் ஆகிவரலாம்.

திரிவுவடிவங்கள்:

திரவம்

திராவம்: ( திராவம்புரிதல்)

திராவகம்

முதலிய வடிவங்கள் இங்குக் கூறப்பட்டன.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்


சேமித்து அறம் செய்க.

 சோலை புரைஅழகில்  ---- விடுதியில்

சுந்தர மலர்பொருத்தி,

மாலை   நிலாவிளக்கம் ---- கூட்ட

மருவு  கவின்தனைப்பார்.


மந்த ஒளியினிலே ---மாந்தும்

மக்க   ளுடனமர்ந்தாய் 

வந்த உணவருந்தின் ---கண்டாய்

வான்பெறு ஆனந்தமே.


உண்டு முடிக்காமலே --- எதுவும்

ஒழித்திடு முன்நினைப்பாய்

இன்றிவ் வுலகினிலே ---உணவும்

இல்லார் பசித்திருப்பார்.


மீதப் பொருள்களிலே -  சேர்த்து

மேல்வரும் சேமிப்பினை 

யாதும் இலார்க்களிப்பாய் ----அறமே

யாண்டும் துணையுனதே.


பொருள்: 

புரை - போன்ற

சுந்தர -  அழகிய

ஒழித்திடு  -  வீசிடும் 

வான்பெறு - மிக உயர்ந்த

ஆனந்தம்-  ஆக நன்று ஆன மகிழ்வு,

(ஆ + நன் து அம்)

யாண்டும் - எப்போதும்

மாந்தும் -  உண்ணும் அல்லது  நீர் அருந்தும்

இலார் -  இல்லாதவர்


வியாழன், 4 ஜூலை, 2024

சணல் கயிறு - சொல்லாக்கம்

சணல் என்பது ஒரு செடிநார்  ஆகும். இச்சொல் அமைதல்:

அண்>  சண் > சணல் .

ஒவ்வொரு நாரும் ஒன்றினோடு மற்றொன்று அணுக்கமாக வைத்தே கயிறு திரிக்கப்படுகிறது. ஆதலின் அணுக்கக் கருத்தைக் குறிக்கும் "அண்" என்ற அடிச்சொல்லிலிருந்து சணல் என்ற சொல் தோன்றியது மிக்க இயல்பினது ஆகும். மற்றும் அண் சண் என்ற மாற்றமும் பொருத்தமாய்  உள்ளது. இச்சொல்லை அண்> சண் > சண்ணல் என்று காட்டி, பின் ண் என்ற ஒற்றினை நீக்கி இறுதி வடிவத்தைக் காட்டுதல் ஒக்கும்.  மணல் என்ற சொல்லுருவினுடன் சணல் உருவொருப்பாடு உள்ளதாதலால் எதுகையாய் நிற்றற்கும் ஏற்றசொல்லுமாகும்.

பலவகைச் செடிகளிலிருந்தும் நார் எடுக்கப்பட்டுக் கயிற்றுக்கு ஆகிறது என்பதை அறிவோம்.

சணல் சில வலைகளிலும் பயன்படுகிறது. சணலின் வலிமையே காரணம் 

சணலுக்கு ஏற்ற சொல் வடிவங்கள்:  சணம். சணம்பு, சணப்பை, சணப்பு, சணப்பநார் என்பவை.  சடம்பு  என்ற சொல்லும் உள்ளது.  அடு> சடு> சடம்பு என்று ஆவது இச்சொல்லாகும். அணுக்கம் என்பதும் அடுத்தல் என்பதும் ஒரு பொருளனவாய் அடிச்சொல் ஆதற்கு ஏற்றவை ஆகும்.

சணல் முதலியவை தமிழ்ச்சொற்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்
 

செவ்வாய், 2 ஜூலை, 2024

பாத்திரம் என்றது

பால்  என்பது பகுதி குறிக்கும் சொல். திருக்குறளில் மூன்று பால்கள் உள்ளன. அவை  அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்.

அத்து என்பது ஒரு சாரியை,  சாரியை என்றால் என்ன?  சார்+ இயை.  ஒரு சொல்லைச் சார்ந்தும் அதனோடு இயைந்தும் வருவது சாரியை. ஒலியழகு தந்து சொல்லை அழகுபடுத்த வருவது சாரியை. ஆற்றங்கரை என்பது இடையில் அம் வருகிறது, இது சொல்லை அழகுபடுத்தி இனிமை தருகிறது. விலவங்கோடு, தலைச்சங்காடு, தலைச்சம்பிள்ளை.   இவற்றில் அம் அழகுதருகிறது. 

அவளுக்கு இந்தப் பேறுதான் தலைச்சன்.  என்றால் தலை (முதலாவது) பிள்ளை. தலையன் எனல் கூடாது   தலையன் எனில் தலையை உடையவன் என்று பொருள். பெருந்தலையன்:  அதாவது தலை பெரிதாகப் பிறந்தவன். சீழ்த்தலையன் என்றால் தலையில் சீழ் வடிகிறவன். 

சீழ்குதல் என்றால்  கண்ணீர் வடித்தல். சீழ்கி அழுதுகொண்டிருக்கிறான் என்றால் கண்ணீர் வடித்து அழுதுகொண்டிருக்கிறான் என்பது. இந்த வினைச்சொல்லை இப்போது எந்தப் புதினத்திலும் ( நாவலிலும்) காண இயலாது. தமிழில் உள்ள வினைகளை ( வினைச்சொற்களை)ப் பயன்படுத்தாமல், அறிந்து புழங்காமல் இருந்துகொண்டு, தமிழை வளர்த்துவிட முடியாது.  கூட்டம் கூடிப் பேசினாலும் பேசும்போது ஒவ்வொரு நாளும் ஒரு புதுச்சொல்லையாவது பயன்படுத்தவேண்டும்.

மேல் > மே > மோ.  மே> மோள்> மோக்கு> மோக்கம். மோக்கம் என்றால் மோட்சம். மேல் என்பது சில தமிழின மொழிகளில் மோ என்று திரிந்து மோ+ கு+ அம் > மோக்கம், என்றாகி மோட்சம் குறிக்கும். மேல் என்பது மோள் என்று மலையாளப் பேச்சு வழக்கில் சில வட்டாரங்களில் பேசப்படும். மோக்கம் பின் மோட்சம் என்று திரிந்தது.  மோள்+ சு+ அம்> மோட்சம்.

இனி, பால் என்பது பகுதி என்று உணர்ந்தோம், பால் என்பது கடைக்குறைந்தால் பா என்றாகும்.  பா+ திறம்> பாத்திறம் > பாத்திரம் என்பதுதான் வீட்டிலுள்ள ஏனம், ஏல்> ஏல்+ ன்+ அம் >  ஏனம்.  இங்கு ன் என்பது இடைநிலையாக வந்தது.பலவகையில் அறிவுறுத்தலாம் எனினும்  உம் என்ற இடைச்சொல் உன் என்று திரிந்து ன் என்று மட்டும் எஞ்சி நிற்கிறது. இந்த உன் என்பது உம் என்பதன் திரிபு.  உம்> உன்>ன். பொருளை ஏற்று வைத்துக்கொள்ளும் பாத்திரம்.

பால்> பாற்று> பாத்து > பாத்து+இரு+அம் >பாத்திரம். எனினும் ஆகும். பொருள்களைப் பகுதிப்படுத்தி வைக்கும் ஏனம். பர> பா> பாத்திரம்:  பரந்த வாய் உடைய ஏனம் என்று இது பல் பிறப்பி. உளுந்து வேறு,  அரிசிமாவு வேறாக ச்  சற்று புளிக்க வைத்து, வேறுவேறு பதார்த்தமாகச் சுடலாம். பகுத்து வைக்கப் பாத்திரம் உதவும். பகுத்து>பாத்து.  எ-டு: சப்பையாகப் பகுத்துச் செய்யப்படுவது சப்பாத்து, உணர்க. சப்பை + பாத்து.> சப்பாத்து..


கூடுதலாக எழுதாமல் முடிப்போம்.




அறிக மகிழ்க\

,மெய்ப்பு பின்னர்

திங்கள், 1 ஜூலை, 2024

சாதிகள் இந்தியாவில் ஒழியுமா?

இந்தக் கேள்விக்கு உண்மையான பதில் என்னவென்றால் இவை ஒழிந்துவிடா(து) என்பதுதான்.

ஏன் என்றால் பண்டைக்காலத்தில் அம்மான் மகன், அத்தை மகள் என்று குடும்ப அகமணத்தினால்தான் இந்தியர்கள் பெருகினார்கள். தற்போதைய சூழ்நிலையில் வெவ்வேறு சாதியினர் ஓரிடத்தில் தொழில் புரிய வேண்டிவந்த காரணத்தினால் காதல் திருமணங்கள் முளைத்துள்ளன.  ஆகவே பெண்கொடுக்க மறுக்கிறார்கள்.

வேறு நாடுகளிலும் ஒரு தளபதியின் மகளை  இராணுவ தளத்தில் கூட்டிப் பெருக்குகிறவனுக்குப் பெண் கொடுக்கமாட்டார்கள். சாதி என்கின்ற கருத்தை விலக்கிவிட்டுப் பார்த்தால் இது பொருளாதார வேறுபாடுதான். இந்த வேறு பாடுகளுக்கு அடிப்படையில் இருப்பவை: முன் காலத்தில் நாங்கள் அமைச்சர்களாக இருந்தோம். எங்கள் பெருமை எங்களுடன் இருக்கிறது. நாங்கள் இறங்குவதா என்பதுதான்.

இதை உயர் தமிழ் நடையில் எழுதினால் புரியாததனால் சாதாரணமான முறையில் எழுதியுள்ளோம்.

வேறுபாடுகளில், பண்டைத் தொழிலுக்கும் இன்றைத் தொழிலுக்கும் வேறுபாடு இல்லை.  பண்டை அரசன் பதவியை இழந்துவிட்டாலும், என் மகள் ஏன் இறங்கி வரவேண்டும் என்று எண்ணுவதுதான் காரணம். இந்த எண்ணம் அவன் சீனனாக இருந்தாலும், மலாய்க்காரனாக இருந்தாலும், தமிழனாக இருந்தாலும் தாய்லாந்துக்காரனாக இருந்தாலும் வரும். இது மதத்தில் அல்லது சாதி என்ற தொழிற்பிரிவினையில் இல்லை.

பண்டை நாட்களில் அகமணம் புரிந்துகொண்டதன் காரணம் தொழில் வசதிக்காக. ஒரு முடிவெட்டுகிறவன் மகள் குயவன் வீட்டில் வாழ்க்கைப்பட்டால் அவளுக்கு மண் குழைக்கத் தெரியாது. ஒரு வெள்ளாளன் வீட்டில் நுழைந்தால் வயல் வேலை தெரியாது. அதனால்தான் அவர்கள் அகமணம் புரிந்தார்கள்.  அவர்கள் பெண் தேடியதெல்லாம் அத்தைமகளை, மாமன் மகளை அல்லது அதுபோன்ற சொந்தக்காரன் பெண்ணை. தாம் தேடிய சொத்துப் பற்று எல்லாம் ஓர் அயலவனுக்குப் போகக் கூடாது என்பது இன்னொரு காரணம். ஆரியன் கீரியன் என்பதெல்லாம் புனைவு,

இந்து மதம் சில ஆயிரம் ஆண்டுகள் இருந்துள்ளது. அப்போதெல்லாம் ஏன் இது ஒரு பிரச்சினையாக இல்லை?  மனிதனின் சமுகச் சூழலில் ஏற்பட்டதுதான் மதம். குசேலன் ஒரு குசவன், அவனைப் பணக்காரனாக்கிச் சமப்படுத்தினார் கிருட்ணபரமாத்மா.  வள்ளுவர் செய்தொழில் வேற்றுமை என்று சொன்னது: முன் செய்த தொழிலின் வேற்றுமை, இன்று செய்யும் தொழிலின் வேற்றுமை இனிச் செய்யப் போகும் வேலை எல்லாம் அடங்கிவிடும். வினைத்தொகையில் முக்காலமும் அடங்கிவிட்டது என்பதுதான் இலக்கணத்தில் பவணந்தி முனிவரின் கோட்பாடு. செய்தொழில் முக்காலமும் அடங்கியது. குறளில் இந்தக் கருத்து உள்ளடங்கி இருக்கிறது என்பதை உரையாசிரியர் எவரும் விளக்கியுள்ளாரா என்று தெரியவில்லை. குறளை மீண்டும் படித்தால் நன்றாகப் புரியும். உரையாசியர் உரைக்கவில்லை என்றால் நாம் மடையர்களாக இருந்துவிட முடியாது,  முக்காலமும் உணரும் படியாகக் குறளில் தெரிந்துகொள்ளவேண்டும். 

அதனால்தான் பாரதியார் இப்படிப் பாடினார்:  கண்ணில் தெரியு தொரு தோற்றம், அதில் கண்ணன் உரு முழுதும் இல்லை, நண்ணு முகவடிவு காணின் அதில் நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்.  காதல் பாட்டுப் போல் தெரிந்தாலும் அர்த்தம் மிக்க ஆழம்.  இந்த விடயத்தில் கண்ணன் முகம் கூடப் பாதிதான் தெரியும். அவரும் வேறு எந்தக் கடவுளும் உதவ மாட்டார்கள். ஏன் என்றால் இது மதப்பிரச்சினை அன்று . கடவுள் ஆதாம் ஏவாளைப் படைத்தாரே தவிர அவர்களுக்குத் துணிகள் எதையும் வழங்க வில்லை. அப்புறம்தான் தேடிக்கொண்டனர். மானப் பிரச்சினையை அவரே கவனிக்கவில்லை! 

ஒரு மலாய்ப்பெண் எங்களுடன் பல ஆண்டுகட்கு முன் ஓர்  அதிகாரியாக இருந்தாள். அவள் பெயரிலே இளவரசி என்ற மலாய்ச்சொல இருந்தது.  நீ ஏன் இளவரசி என்று பெயரில் வைத்திருக்கிறாய் என்றதற்கு, அவளைக் கேட்டவனிடம் " நீ என் இளவரசன் இல்லை" என்று சொல்லிவிட்டாள். பழைய கவுரவமும் பலருக்கு தேவையான பொருள்தான். நமக்குத் தேவையில்லை என்றால் எல்லாருக்கும் அப்படியாக இருக்காது. பலர் அதனைக் கவ்வி வாயில் வைத்துக்கொள்வார்கள். கவ்வு + உரவு + அம் > கவ்வுரவம், இடைக்குறைந்து : கவுரவம்> கௌரவம். உரவு என்றால் வலிமை(யாக). வேறு வழிகளிலும் சொல்லைப் பொருள்கொள்ளலாம். உறவு என்பது வேறு சொல்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.