Pages

சனி, 13 ஜூலை, 2024

மண்டலம், சுருதி. சம்கிதை என்பவை.

 மண்டலம் என்ற சொல்லை இன்று ஆய்ந்து பிறப்பறிவோம்.

இச்சொல்லில் உள்ள உதிரிச் சொற்கள் இவை:-

மண்டு(தல்) என்ற வினைச்சொல்.

அல் என்ற அடிச்சொல். இதிலிருந்து அலை என்ற சொல்லும் உணடாகும். அங்குமிங்கும் செல்வது. இயக்கமுடையது.

அம் - அமைதல் குறிக்கும் விகுதி.

மண்டுதல் என்பது  நெருக்கமாய் ஓரிடத்திருத்தலைக் குறிக்கும்.  தனித்தனிப் பொருட்கள் ஒன்று கூடி இருத்தலை மட்டுமின்றி எண்ணிக்கைக்கு உரியவல்லாத பொருட்களுக்கும் இச்சொல்லைப் பயன் கொள்ளலாம்.  எடுத்துக்காட்டு; புகழ்.

நீலத் திரைக்கடல் ஓரத்திலே - நின்று

நித்தம் தவம்செய்த குமரி எல்லை,-- வட

மாலவன் குன்றம் இவற்றிடையே   ---  புகழ்

மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு.  (  பாரதியார் பாட்டு).

மண்டுதல் செறிவு குறிக்கிறது.  ( நிறைவு ).

வேதங்களின் பகுதிகள் "௳ண்டலங்கள்" என்று குறிக்கப்பெற்றுள்ளன.  செறிவான செய்திகள்  உள்ளிருத்தலினால் இவ்வாறு மண்டலங்கள் என்று குறிப்பு உடையனவாய்ச் சேர்க்கப்பட்டுள்ளன. மண்டலம் என்பதும் தமிழ் மூலங்கள் உடைய சொல். மண்டுதல் என்பதை அடர்வு என்றும் கூறலாம்.

சுருதி என்ற சொல்லை அடுத்து நோக்குவோம்;

இதில் இரண்டு சொற்கள் உள்ளன.  சுரத்தல்,  உது - முன்னிருப்பது, இ - இது இங்கு என்று பொருள்தரும் விகுதியாகும்.  சுரத்தல் என்பது தமிழ் வினைச்சொல்.

சுர + உது + இ >  சுருதி.

சுர என்பதில் ஈற்று அகரம் கெட்டது.  ஆகவே

சுர் + உது + இ என்று புணர்ந்து சொல் ஆக்கம் பெற்றது,

சம்ஹித என்பதும் சமை இது அ என்று பிரியும்.

சமைத்தல் -  சேர்த்து உருவாக்குதல்.

இது ஓர் இடைநிலை.

அ என்பது பன்மை விகுதி.

இது சேர்த்துக் கட்டி அமைக்கப்பட்டது என்பது பொருள். எனவே தமிழ் மூலங்கள் ஆகும்.

சமை + கிட + ஐ > சம்கிடை> சம்ஹிதை எனினுமாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

 



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.