சோலை புரைஅழகில் ---- விடுதியில்
சுந்தர மலர்பொருத்தி,
மாலை நிலாவிளக்கம் ---- கூட்ட
மருவு கவின்தனைப்பார்.
மந்த ஒளியினிலே ---மாந்தும்
மக்க ளுடனமர்ந்தாய்
வந்த உணவருந்தின் ---கண்டாய்
வான்பெறு ஆனந்தமே.
உண்டு முடிக்காமலே --- எதுவும்
ஒழித்திடு முன்நினைப்பாய்
இன்றிவ் வுலகினிலே ---உணவும்
இல்லார் பசித்திருப்பார்.
மீதப் பொருள்களிலே - சேர்த்து
மேல்வரும் சேமிப்பினை
யாதும் இலார்க்களிப்பாய் ----அறமே
யாண்டும் துணையுனதே.
பொருள்:
புரை - போன்ற
சுந்தர - அழகிய
ஒழித்திடு - வீசிடும்
வான்பெறு - மிக உயர்ந்த
ஆனந்தம்- ஆக நன்று ஆன மகிழ்வு,
(ஆ + நன் து அம்)
யாண்டும் - எப்போதும்
மாந்தும் - உண்ணும் அல்லது நீர் அருந்தும்
இலார் - இல்லாதவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.