முன் செய்த ஆய்வுகளின் பட்டியல்:
சக்கிலியன் https://sivamaalaa.blogspot.com/2015/11/blog-post_15.html
சக்கிலியன் 2 https://sivamaalaa.blogspot.com/2015/11/ii.html
சக்கிலியன் 3 https://sivamaalaa.blogspot.com/2015/11/v-iiienpathaka.html
சக்கிலியன் 4 https://sivamaalaa.blogspot.com/2015/11/iv.html
சக்கிலியன் கூட்டுச்சொல் https://sivamaalaa.blogspot.com/2015/11/blog-post_26.html
செவிலி, சக்கிலி இன்னும்... https://sivamaalaa.blogspot.com/2020/03/blog-post_18.html
அடிவைப்பதற்குச் செருப்பு தந்து, இடமளிப்போன் என்ற பொருளில்:
அடிக்கு - காலடிக்கு,
இல் - இடம், செருப்பு செய்துதருவதன் மூலம்.
இ - இங்கு, மனிதருக்கு என்பதாகும்.
அன் - ஆண்பால் விகுதி.
மறுபார்வை:
அடிக்கு + இல் + இ + அன் > அ(டி)க்கிலியன்> சக்கிலியன்.
இங்கு இல் என்பது இடம், எ-டு: கண்ணில், மூக்கில், மதுரையில்.
இல் > இலை. ( கொடி முதலியவற்றுடன் ஒப்பிடுகையில், இலை விரிக்கத்தக்க தாகவும் இடமுடையதாகவும் உள்ளது. )
அகர வருக்கம் சகர வருக்கமாகவும் மாறும். எ-டு: அமணர்> சமணர்.
வல்லொலியாக டி என்பது ஒழிவது, சொல்லியலில் இயல்பாகும். எ-டு: பீ(டு)மன்> பீமன். தவறுதல் > தவல் (வல்லொலி று -வுடன் இடையின ஒலியும் சேர்ந்து மறைந்த சொல்.) பழைய இடுகைகளில் பல உள்ளன.
இது (சக்கிலியன்) ஒரு பல்பிறப்பிச் சொல். இது தமிழ்த் தொழிலாளிக்கு உண்டான பெயர் என்று மலையாள அகரவரிசைகள் சில கூறுகின்றன. அதனால் இது தமிழ் மூலங்கள் உடைய அடிச்சொற்களிலிருந்து அமைந்திருத்தல் தெளிவு.. சாக்கியமுனியைப் பின்பற்றியோர் பல சாதியினர். அதனால் இப்பெயர் ஏற்பட்டிருக்கும் வாய்ப்பு குறைவாகும். ஆனால் சாக்கிய என்பதற்கும் இது பொருந்திவருகிறது.
செருப்பு>( செருப்பல்)> செப்பல். ருகரம் குன்றி அல் விகுதி பெறுதல். இடைக்குறையும் விகுதிபெறுதலும்.
பாதம் + இரட்டு+ சை: பாதரட்சை, இரட்டு- இரண்டு, சை - விகுதி. புனைவுச்சொல். இங்கு டு என்ற வல்லொலி ஒழிக்கப்பட்டது காண்க. பாத + அருட்செய் > பாதரட்சை எனினும் ஏற்றற் குரியதாகலாம். பா த அரண் செய் என்ற தொடரும் மருவி வரல் கூடும்
அறிக மகிழ்க
மெய்ப்பு: பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.