Pages

சனி, 24 பிப்ரவரி, 2024

யாப்பியல் வல்லவர் : அமித சாகரர் - அளவிடற்கரிய கடலவர் பெயரும் காரணமும்

அமிதசாகரர் என்பது  யாப்பருங்க்கலக் காரிகை என்னும் யாப்பியல் நூலைப் பாடிய பெரும்புலவரின் பெயர்.   இந்த ஒரு பெயரில் இரண்டு சொற்கள் உள்ளன. அந்த இரண்டு யாவை எனின்,  அமிழ்தல்,  சாகுதல் ( சாதல்)  என்றவையே. அமிதம் என்ற சொல்.   தமிழ்மூலத்ததான ஒரு சொல்.  அமிதம் என்பதற்கு  அதிகமானது என்று பொருள்.

இவர் இந்தப் பெயரை வைத்துக்கொள்வதற்காகச் சொற்கள் இரண்டையும் திரித்து அமைக்கவில்லை. முன்னரே திரிந்து வழங்கிய இருசொற்களையும் பயன்படுத்தி இந்தப் பெயரை அமைத்தனரென்பதே உண்மை.

அமிதம் என்ற சொல்லை ஏற்கெனவே விரித்து எழுதியுள்ளோம்.  அவ்விடுகைகள் இவை:

1.  https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_22.html

    மெது, மித, மிதம்,  அமிதம்.

2  https://sivamaalaa.blogspot.com/2015/12/x.html

    மித  அமித.

https://sivamaalaa.blogspot.com/2014/04/meaning-moderation-medium.html

   மிதம், ( அளவானது,  அதிமில்லாதது.)

ஆனால்  அமித சாகரர் என்ற பெயரில்  அளப்பரியது என்றே பொருள்கொள்ளவேண்டும்.   " அளப்பருங்கடலார்" என்று "தனித்தமிழில்" சொல்லவேண்டும்..

சாகரம் என்ற சொல்லையும் விரித்துள்ளமை காணலாம்.  இங்கு உண்டு அது:

https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_78.html   சாகரம்.

மேலும்:

https://sivamaalaa.blogspot.com/2022/04/blog-post.html          கண்டமும் சாகரமும்

https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_18.html  சமுத்திரம் குமரிகண்டம்

சமுத்திரம் என்ற சொல்லும்  சம்+ மு + திரை  ,   சா + மு+ திறம் என்றெல்லாம் பலவாறு பிரிக்கும்  வசதியை உள்ளுடைய சொல்தான், முத்திறமும் சாவுதரும் இடமென்று விளக்கலாம்.  திரை -  கடல்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.