Pages

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

மோடி என்னும் அருள் முன்னவர்

 அருளுடையார்  சொல்வனவில் பொருளும்  உடையார்

அகிலத்தார்க்கு   அருளுடைமை புகட்டும் கொடையார்

தெருளுடையார் அரசாட்சி  தெரிந்த  நடையால்

தீர்க்கசிந்த    னைச்செயல்கள் புரிந்த  விடையார்


மோடியென்ற முன்னறிவார்  பரதம்  அடைந்து

முன்னறியாப் பன்னலமும்  முடுக்கிக் கடைந்து

ஆடிநாளும் போக்காத  அமைதி மிடைந்தார்

அடிநாளில் தொடங்கி நலம்  இயற்றிச் சிறந்தார்.


(வேறு சந்தம்)

கட்டாரில் வேவுபார்த்த கெட்டா   ரென்றே

எட்டுநமர்  சாக்காட்டுக்  குற்றம்  பெற்றார்,

மட்டில்லா  இரக்கத்தால் தலைவர் மோடி

மாற் றியுயிர் காப்பாற்றி நாடு  கொணர்ந்தார்.


(வேறு சந்தம்)


செயல்திறனால் சீரார்ந்த செம்புகழ்   பெற்றார்---- மோடி

வயல்வரப்பில் உழைப்பார்க்கு வாழ்வும்   தந்தார் ,

பெயல்தன்னால் மண்குளிரும்.  

 பெருமக்கள் வாழ்வடைவர்


அயல் நாட்டில் அக நாட்டில்

அவர்நிகர்த்தார் பிறருளரோ?



அரும்பொருள்

முடுக்கி -  விரைந்து  செலுத்தி

விடையார் -  மறுமொழி  பதில்நடவடிக்கைகளை வெளிப்படுத்துபவர்.

அடைந்து -  (இறைவனால் ) அனுப்பப்பட்டு   இடத்தைச் சேர்ந்து

பரதம் -  பாரத நாடு



பரதத்தோங்கிய கோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடி

 ( மணிமேகலை)

கடைந்து  -  அலசி மேலெடுத்து

மிடைந்து = இடையில் கலந்து

சாக்காட்டு -  மரணதண்டனைக் குரிய (குற்றம்)

குற்றம் பெற்றார் -  served with charge sheets

நமர் -  நம்மவர்,  நம்மக்கள்

கட்டார் -  கட்டார் என்ற அரபு நாடு

கெட்டார் - கெட்டவர்கள் ( என்னும் குற்றச்சாட்டு)


பெயல் - மழை

மோடி மழை போன்றவர் என்பது குறிப்பு.

அக நாட்டில் - உள்நாட்டில்

வயல்வரப்பில் உழைப்பார்க்கு வாழ்வும்   தந்தார்:

இது அவர் விவசாயிகளின் நண்பன் என்பதற்குச் சொல்லப்படுகிறது.

ஆடிநாளும் போக்காத  அமைதி---  இது அவர் ஆரவார அரசியலில் ஈடுபாடாதவர்  என்ற பொருளுடையது.



வாழ்க வையகம்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.