இன்று ஊகம் என்ற சொல்லை அறிவோம். தலைப்பில் குறித்ததுபோல் இது யூகம், வியூகம் இது தலைவளர்ச்சி பெறும்.
அகர வருக்கத்துக்கு யகர வருக்கம் மாற்றீடு ஆகும்.
ஆனை - யானை;
ஆடு (விலங்கு) - யாடு
ஆர் - யார்?
ஆதவர் (ஆ+ து + அ + அர்) > யாதவர். ( ஆ - பசு,
ஒன்றோ பலவோ ஆக்களை வளர்ப்போர் என்பது பொருள்.
து - இடைநிலை. ஒன்று என்பதும் பொருள்.
அ - இடைநிலை. பலவாகவும் இருக்கும் என்பதும் பொருள்.
அர் - பலர் பால் விகுதி.
யாதவர் என்பது தமிழ் மூலங்களைத் திறமையாகப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட சொல்.
இது போல பல முன் இடுகைகளில் சொல்லியுள்ளோம். அறிந்து நீங்கள் தமிழைப் படித்துப் பிறருக்கும் போதிக்கவேண்டும்.
ஆக, ஊகம் என்ற தமிழ்ச்சொல்லே. யூகம் என்று திரிந்தது.
ஒரு யூகம் பயனற்ற நிலையினதாகிவிடலாம். மிகுபயன் நல்கி, நன்மை பயப்பதாகவும் ஆகிவிடலாம். விழுமிய யூகம் என்பது பயன் தரு யூகமாகும். விழு. விழுமிய என்பதற்கு முன்னால் வி போட்டுக்கொண்டு, வியூகம் என்றனர். நாளடைவில் இந்த வி என்பதன் சிறப்பு இல்லாயிற்று.
இன்று யூகமென்றாலும் வியூகமென்றாலும் வேறுபாடு யாதுமிலது.
ஊகம் என்பது ஒரு உகரச் சுட்டடிச்சொல். ஊ - முன்னிருப்பது, உன் என்ற சொல்லில் உன் என்று முன்னிருப்போன் உடைமை குறிக்கப்படுகிறது. எ-டு: உன் முகம், உன் பூனை எனக் காண்க. கு என்பது, சேர்ந்திருத்தல் குறிக்கும் ஒரு பழந்தமிழ்ச் சொல். அம் என்ற இறுதி அமைதல் குறிக்கும் ஒரு பழைய தமிழ் விகுதி. வீட்டிலிருப்பவனே, பூசாரியாய் கோவிலிற் சென்று சற்றுத் திரிந்த அல்லது வேறுபாட்டுச் சந்தங்களுடைய பேச்சில் பாடி இறைப்பற்றாளரை ஈர்த்துக்கொண்டான். அது தொழுகை மொழி ஆயிற்று. பல அருஞ்சொற்களையும் பயன்படுத்தினான். சன் - இது அன் என்பதன் திரிபு. அணுக்கம், மனவீர்ப்பு குறிக்கும். வன் - வலிமையுடன் வருக என்று பொருள். (வன்மை). மன் - நிலைபெறட்டும் என்று பொருள். வலிமை பொங்க அணுகி வந்து நிலைகொள்வாய் என்பதுதான். தொழுகை மொழிகளைக் கண்டுபிடித்து அல்லது உருவாக்கி உலகை வியப்பித்தவர்கள், இந்த இயல்பான மக்க்ளில் ஒரு சாரார். வெள்ளைக்காரன் அல்லன். ஒருத்தன் கண்டுபிடிக்க இன்னொருவன் கண்டுபிடித்தான் என்று பரிசு வழங்கலாகாது..அது திருட்டைத் தலைமேல் வைப்பதாய் ஆகிவிடும்.
ஊகம் என்பது முன் வந்து சேர்ந்ததை அமைத்துக் கொள்ளுதல் என்று பொருள்படும். ஊ - முன்வந்து, கு- சேர்ந்ததை, அம் - அமைதருதல் என்று வரும் விகுதி. பொருளிலதாயினும் கொள்க.
அறிக மகிழ்க
மெய்ப்பு: பின்னர்.
எழுதுவார்க்கு:
அமர் ( போர்) - சமர்
அமர்க்களம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.