இணைக்குறளாசிரியப்பா.
( அடிகளில் சில் சீர்கள் குறைந்துவரத் தொடுக்கும்
ஆசிரியப்பா)
சிலமசா லாவகை நன்றாய் இருக்கும்;
சிவவகை கறிக்குச் சுவைதரா தவையே.
சாப்பிடும் மன்னர் இதன்நீ திபதிகள்!
ஆப்பிடு வார்கள் இவர்களே கடைக்கு!
கடைக்குள் நீர்போய்
எதைமசாலா என்றுபோட் டே நீர்
கறிவைத் தீர்களோ? என்று
கடாவி னீரெனில் கடிவர் உமையே!
ஏனந்த வம்பு?
வம்போ ? வேண்டாம், வேண்டாம்
வம்பு வளர்ப்பின் பின்புதலை யணையை
தம்பின் முதுகில தன்பின் கட்டணும்.
ஓரலை பேசிப் படமெடுத் தாலே
பேரறி வினரும் கண்டு களிப்பர்.
என்னம சாலா என்பதை அறிந்தீர்
எண்ணம னைத்தும் இனித்திடக் குதிப்பீர்
என்று குழந்தையும் இனித்திட முடிக்கும்.
வாய்ப்பேச் சென்பது தாய்ப்பேச் சினைப்போல்
இனிப்ப தெனப்பா லதுவே
கனிப்பயன் காண்க மென்மை மிகுத்தே.
பொருள்:
சாப்பிடு மன்னர் - சாப்பிடுகிறவர்களை மன்னர் என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறது.
ஆப்பிடுகிறவர்கள் - ஆப்பு இடுகிறவர்கள் ( மசாலை சரியில்லை என்றால் இவர்கள் வரமாட்டார்கள். அதனால் " ஆப்பு இடுவார்கள்" எனப்பட்டது.
முதுகிலதன்பின் - முதுகில் அதன் பின்
அலைபேசி - கைத்தொலைபேசி
கடாவி - கேள்வி கேட்டால்
முடிக்கும் - சொல்லி முடிக்கும்
( பொருள் தொடர்கிறது)
(பொருள் தொடர்ச்சி)
வம்பு என்ற இறுதிச் சொல் அடுத்த அடியிலும் வரும்படி அந்தாதித் தொடையாகத் தொடுக்கப்பட்டுள்ளது. பின்னரும் இதுபோன்றே முயலப்பட்டுள்ளது.
எனப்பாலது - எனப்படுவது. ( என, பான்மை உடையது )
எனற் பாலது என்பது இன்னொரு வகைத் தொடர்.
தாய்ப்பேச்சு --- அன்னையின் பேச்சு
கனிப்பயன் - கனிபோலும் பயன். ( உவமைத் தொகை)
மசாலா : இச்சொல்லுக்கான விளக்கம் இங்கு வாசிக்கவும்:
https://sivamaalaa.blogspot.com/2014/06/blog-post_7508.html
உங்கள் கருத்துக்களைப் பின்னூட்டம் இடுக.
This shop is situated in Sengkang East. Curry (sambar) and chutneys are tasty. You must go early before 10.00 am for chutney to be served. The tasty chutney finishes quickly. Buses 161, 163. nearest MRT is Buangkok.. nearest road junction is Sengkang East Avenue x Sengkang East Rd. LRT is Renjong. There are other good shops too. What they did not hide was what curry powder they are using. ( Perhaps due to lack of space inside their place or temporarily left there).
Written by APM.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.