உலகமெல்லாம் மகிழும் நம் அன்னைகட்கே,
உலர்விலாத நன்றியிலே ஊறுமகிழ்வே!
பலகற்றார் கல்லாதார் வேறுபடார்,
அன்னையன்பு முன்னெவரும் ஒருமைகொள்வார்
குலவுகுழந் தைகளெனில் ஒன்றுதன்மை
அன்னைபாசம் என்பதிலே உலகம் ஒன்று,
நிலவுமிது படைத்திட்ட ஆண்டவரின்
நேர்நிற்கும் பொருளொன்றோ ஞாலத்தில்லை.
உரை:
உலகமெல்லாம் மகிழும் நம் அன்னைகட்கே ----- நம் அன்னையரைப் பற்றி யாரும் எழுதினாலும் பேசினாலும் நினைத்தாலும் இவ்வுலகம் மகிழ்வு கொள்ளும்;
உலர்விலாத நன்றியிலே ஊறுமகிழ்வே! ---- இந்த மகிழ்ச்சியானது காய்ந்துவிட முடியாத ஒரு இயல்பினதான நன்றியில் ஊறிவருகின்ற மகிழ்வு ஆகும். ( அதாவது நன்றி கலந்த மகிழ்ச்சி ).
பலகற்றார் கல்லாதார் வேறுபடார்,---- இதில் கற்றவர், கல்லாதவர் - தெரிந்தவர் தெரியாதவர் என்று வேற்றுமை இல்லை
அன்னையன்பு முன்னெவரும் ஒருமைகொள்வார்----- தாயன்பு என்பதில் நடவடிக்கை எதுவும் பன்மைநிலை கொள்வதைக் காணமுடிவதில்லை, ( ஒன்றான நிலையே எடுப்பர் ),
குலவுகுழந் தைகளெனில் ஒன்றுதன்மை ---- தாயிடம் பிள்ளை குலவுதலிலும் ஒரு வேறுபாடு இல்லை, எந்தக் குழந்தை ஆயினும் அன்னையின் அணைப்பிலே ஆனந்தம் காண்கிறது.
அன்னைபாசம் என்பதிலே உலகம் ஒன்று,----- அன்னை பிள்ளையின்மேல் கொள்ளும் அன்பிலும் வேறுபாடு இல்லை;
நிலவுமிது படைத்திட்ட ஆண்டவரின்----இதுவே உலகில் நிலவுவதாகும்; படைப்பில்
நேர்நிற்கும் பொருளொன்றோ ஞாலத்தில்லை.--- இதற்கு நிகராக எதையும் கூறமுடியாது, இவ்வுலகில் என்றபடி
இவற்றை எல்லாம் கூட்டிச் சொன்னால்:
அன்னையர்க்கு என்றும்இணை கண்டதில்லை.
எல்லா அன்னையர்க்கும் எம் அன்புவணக்கம்.
I'm Parthasarathy N
பதிலளிநீக்குI read these lines of you,
வானிற் பதிந்தபடி வந்த நிலாமகளும்
தானும் கடலனைக் காதலித்தாள் --- ஏனோ
ஒருமை கடைப்பிடித் தொப்ப ஒழுகாமல்
இருமை இறைகொண் டனள்.
it was absolutely delightful, I feel like having a conversation with you, my mail id partha.designs@gmail.com please let me know how to proceed?! aavaludan kathirukiren nanri!!!
You are welcome to write to bisivamala@gmail.com as well as / or additionally enter your further comments herein. If you want us to publish your comments as a post for other readers we can also do that for you. All free. We welcome you. Our objective is to promote Tamil. Thank you.
பதிலளிநீக்கு