மது என்ற சொல்லை நாம் அணுகி அதனுட் புகுந்து பொருள்கண்டுள்ளோம். அவை இங்கு உள்ளன:
மது: https://sivamaalaa.blogspot.com/2021/04/blog-post_21.html
https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_12.html
தேன்மது https://sivamaalaa.blogspot.com/2016/10/blog-post_27.html
இன்னும் சிலவும் உள. அவை பட்டியலில் கண்டுகொள்க.
https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_19.html என்னும் இவ்விடுகையிலும் காணலாம்.
மது + உரு + அம் = மதுரம்.
மது - மயங்குவதற்கு, உரு - வெளிப்பாடு, அம் - அமைத்துத்தருவது, மேலும் அம் விகுதி.
து என்பது, வல்லினத் தகர ஒற்றின் மேலேறிய உகரமாதலின், மது உரு என்ற இரு சொற்புணர்ச்சியில் இரட்டிக்கும் என்று வாதிட்டாலும், பின்னர் இடைக்குறையும், மத்துரம் > மதுரம் ஆம் என்பதால் இந்த வாதம் நொடித்த வாதம். மேலும் இது வாக்கியச் சொற்சந்தி அன்று. இரட்டித்தலை எழுப்பாமை நேரத்தை மீத்துத்தரும்.
மயக்குக்கு உருத்தருவதாகிய தேன் இனிமை, மதுரம்.
மலரோடு மதுரம் மேவும் - எனின், மலரில் இனிமை மேலேறிய(து) என்பது.
மனங்காணும் - மவுனமானது என்பது பொருள்.
மோகன இராகம் - காதலைத் தூண்டும் இராகம் அல்லது பாட்டு.
மது உரம் > மதுரம், உகரம் கெட்டது; உரம் - தெம்புதருவது எனினுமாம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.