குப்பை எறிகின்ற முட்டாள் --- பிறரொடு
கூடிவாழ் தன்மையை எட்டான்!
எப்பையி லேனும திட்டு --- அதை
எறிந்திடக் குப்பையின் தொட்டி.
இருப்பதை ஈங்குகண் டானோ --- அவன்
இருப்பி னிறந்தவன் தானோ?
பொறுப்புடன் காரிய மாற்ற --- அவன்
புகுந்திடல் இன்றிலே மாற்றம்.
வீசிய குப்பைகள் தம்மால் --- வெள்ளம்
வீடு வரைமிகுந் தேறி,
நாறிய துண்டடா சென்னை ---- செய்தி
நானிலம் கேட்டது மென்ன?
பொருள்:
எட்டான் - அடையமாட்டான்
எப்பையி லேனும் -- எந்தப் பையிலாவது
(எப்பையிலேனும் அது இட்டு - எப்பையிலேனுமதிட்டு)
குப்பையின் தொட்டி - வேண்டாத, வீசுகிறவற்றை இடும் கலம்
ஈங்கு - இங்கு
இருப்பின் இறந்தவன் - வாழுகையில் பிணமானவன்
இன்றிலேமாற்றம் - இல்லாவிட்டால் ஏமாற்றம்
வீடுவரை - வீட்டினுள்ளும் என்க.
நானிலம் - உலகம்.
கேட்டது - தொலைக்காட்சி முதலியவற்றால் அறிந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.