அம்மா வந்தது, தங்கை பாடியது, அக்காள் காய்கறி வெட்டியது என்றெல்லாம் உயர்திணைப் பாங்கிலன்றி இவர்களைச் சொல்வதென்பது தமிழ் இலக்கணப்படி ஏற்கவியலாதது என்றபோதிலும், தமிழகத்துச் சிற்றூர்களில் இவ்வாறு சில குழுக்களிடையே பேச்சு நிகழ்வது உண்மையாகும். ஆள் என்ற பெண்பால் விகுதி பெண்ணாட்சி குறிக்கும் ஏற்ற நிலையிலிருந்து பணிவின்மை குறிக்கும் நிலைக்கு இறங்கிவிட்டதனால், அப்பணிவினைத் தக்கவைத்துக்கொள்ளும் சிறந்த நோக்குடன் தான் இவர்கள் இவ்வாறு அஃறிணையில் பேசுகின்றனர் என்பது உண்மை. இதனை இலக்கணியரும் ஒப்புவர் என்பதனுடன், அதனை "வழுவமைதி" என்றும் ஏற்றுக்கொள்வர் என்பது நீங்கள் அறிந்ததுதான்.
சமஸ்கிருத மொழி நன்கமைக்கப்பட்டு அப்பெயரில் குறிக்கப்பட்ட காலத்தில், தமிழகச் சிற்றூர்வழக்கையே தன் வினைமுற்றுக்களில் பயன்படுத்திக்கொண்டது. அதே இதே உதே ( உது ஏ ) என்ற தமிழ்வடிவங்களில் உள்ள முதனிலை எழுத்துக்களை விலக்கிவிட்டு, ஈறுகளைச் சமஸ்கிருத இலக்கணம் ஏற்றுக்கொண்டது. மேலும் திணைப் பாகுபாட்டுக்கும் இடந்தரவில்லை. எடுத்துக்காட்டாக:
நந்தனுதே! ஶைலசுதே! ஹர்ஷரதே!
கோஷரதே! ஹாஸரதே! மத்யகதே!
என்பன காண்க.
அள் அன் விகுதிகளைப் பான்மை காட்டுமாறு சங்கதம் பயன்படுத்துவதில்லை. இதனை ஒரு வேறுபட்ட முன்போக்குச் செலவு என்றும் சிலர் கருதலாம்.
அண்ணன் என்ற தமிழ்ச்சொல், ஏ என்னும் விளி பெற்று, அண்ணனே என்று வரும். விகுதி பெறாமல், அண்ணே என்றும் அண்ணா என்றும் விளியில் வரும். என் பிரிய பதியே என்று தமிழில் வருதலைவிட்டு, பிரியபதே என்று சங்கதத்தில் வருவது அண்ணனே என்று வாராமல் அண்ணே என்று சிற்றூர்களில் பேசப்படுவது போலுமே ஆகும்.
வினை எச்சத்தையே முற்றாகப் பயன்படுத்தி மலையாளம் முதலியவை புதுமை மேற்கொண்டன என்னலாமோ? தமிழிலும் வினைமுற்று வளர்ச்சி என்பது பிற்காலத்தது ஆகும்.
( சேர்க்கப்பட்ட கூடுதல் பாகிகள் ( பாரா) காணாமற் போயின. சில தட்டச்சுப் பிறழ்வுகளும் காணப்பட்டன. பின்னவை திருத்தப்பட்டன).
(Different devices were used for additions to the post. This could have been the cause.
This will be monitored. )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.