சிங்கைப் பெருநகரிலிருந்து:
போன எமச்சளிநோய் --- இங்கு
புகுந்தது மீண்டுவந்தே,
மானை நிகர்த்த உலா ---- வந்தோர்
மாண்டது துன்பமையா.
என்று தொலையுமிதே --- சனியன்
என்று மனம்பதைத்தோம்,
நன்று செயவெளியில் --- போக
நடுங்கி அடங்கிவிட்டோம்.
மன்றுகளிற் கூடிப் --- பேசி
மனித உறவுமிக,
இன்று விழைவதுவோ --- இல்லா
ஏழையர் நாமாகினோம்.
கன்றுநல் ஆபிரிந்தே --- படுதுயர்
கனவிலும் வேண்டாததே,
ஒன்று படநின்றே--- இத்துயர்
ஒழித்திட ஓடிவாரீர்.
சிவமாலையின் கவிதை.
பொருள்:
எமச்சளிநோய் --- கோவிட் ( முடிமுகி, மகுடமுகி)
துன்பமையோ என்று எழுதி, இப்போது துன்பமையா என்று
வந்துள்ளது. இதுவே நன்றாக இருந்தால் அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.
சனியன் என்றது இந்த நோயை.
செய - செய்ய. (தொகுத்தல் விகாரம்).
மன்று - மக்கள் கூடுமிடங்கள்.
மனித உறவு - படக்காட்சி அது காட்டப்படும் கூடங்களில் பார்த்தல்,
விளையாhttps://sivamaalaa.blogspot.com/2017/05/blog-post_3.htmlட்டுத் திடல்களில் கூடல், உணவகங்களில் கூடல் முதலிய
தொடர்புக் கூடுகைகள்.
ஏழையர் - எளியவர்கள்.
கன்றுநல் ஆ - பசுவைக் கன்று (பிரிதல்), இறத்தல் முதலியவை.
சனி ( சனியன் ஆண்பால் விகுதிபெற்றது மக்கள் பயன்பாட்டில்). இதுபற்றிய இடுகை உங்கள் வாசிப்புக்கு:
தனி - சனி திரிபு.
https://sivamaalaa.blogspot.com/2017/05/blog-post_3.html
https://sivamaalaa.blogspot.com/2021/06/blog-post_24.html
தங்கு > சங்கம் திரிபு
https://sivamaalaa.blogspot.com/2018/10/blog-post_46.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.