நட்புலகு நாடுமுனி மோடி யாகம்
பொற்புறுக போர்நிறுத்தம் வேண்டி யுக்ரைன்
நெற்பயிராய்த் தான்- தழைக்கச் செலவு கொண்டார்
கற்கரையும் மண்ணிலவர் எண்ணம் வெல்க. [1]
புத்தினுக்கோ எத்திசையும் பொன்றா ஒண்மை
எத்துணையும் வெல்வகையில் மோடி நீட்டும்
அத்திலகம் ஏற்றணிந்து நாடும் நன்மை
முத்தனைய முனைப்போடும் மூட்டும், வெல்க. [2]
போரின்மை வாராதோ என்றார் ஆட
நேர்புலமே பின் காண்பீர் ஞால நண்பர்
சேருதிசை யாதானும் ஊறும் வென்றி
வாரிமடை ஒன்றில்லை வையம் வெல்க. [3]
----------------------------------------------------------------------------------------------
(1)
நட்புலகு - உலகில் போர்கூடாது என்று விரும்புகிறவர் மோடி
முனி - முனிவர்
யாகம் - அமைதி வேண்டும் என்று தன்னை யாத்து ( கட்டுப்போட்டு)க் கொண்டவர் மோடி. யாகம் என்பதற்கு யாத்தல் ( கட்டுதல்) என்பதே மூலவடி.
பொற்புறுக - அணிபெறுக. அடைவுகொள்க.
நெற்பயிராய் -- பலகாலும் அவர் அமைதியையே பரிந்துரைத்தார். அது பயிர்போல் வளர்ந்து பயன் தரும் என்பது.
செலவு - பயணம்
கல் கரையும் - (கற்கரையும்) - எவ்வளவு கடினமானாலும் இளகி வெற்றியை
மோடி அடைவார்.
மண்ணில் - இவ்வுலகில்.
[2]
புத்தின் - இரசிய அதிபர்
பொன்றா - முடிந்துவிடாத
எத்திசையும் - ( புத்தினின் வெற்றி, திசைக்குத் திசை வேறுபடும். போரின் பரிமாணங்கள் பல பக்கங்கள் உள்ளதாகிறது.} பன்முகத் தன்மை உள்ளது.
ஒண்மை - உலக அங்கீகாரம்
எத்திசையும் - எல்லா நாடுகளிலும்.
எத்துணையும் - எந்த அளவு ஆயினும் அமைதியை நோக்கி.
துணை - அளவு.
அமைதி என்பதும் ஓர் அளவிடற்குரியது. இடம் காலம் நடப்பு என இவையே வெற்றியின் அளவைத் தீர்மானிக்கும்.
அணிந்து - திலகத்தை அணிந்துகொண்டு.
முத்து - இது உள்ளிருந்து முட்டிக்கொண்டு வெளியில் வருவது.
முனைப்பு என்பதும் அத்தகைமை உடையது. உள்ளிருந்து வருவதுதான்..
மூட்டும் - விரிசல்களை ஒன்றுபடுத்திச் சரியாக்கும். முன்வரவர மூட்டுவாய் ஒன்றாகும். வெற்றியாகும்.
நன்மை மூட்டும் என்று வினைமுற்றால் முடிக்க.
[3]
போரின்மை - உலகமைதி
ஆட - களிக்க
பின் - நேர்ந்த பின். இறுதியில்.
ஞாலநண்பர் - விசுவாமித்திரர் ஆகிய மோடி ( பிரதமர்)
நேர்புலமே - நிகழும் இடமே
சேருதிசை - எங்கு சென்றாலும்
ஊறும் - உண்டாவது
வென்றி - வெற்றி.
வாரிமடை - வெள்ளத்தடுப்பு
தொடர்ச்சி:https://sivamaalaa.blogspot.com/2024/08/blog-post_25.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.