இறைவனைச் சொற்றுணை வேதியன் என்பதால், அவன் நாமத்தின் இருப்பிடம் நம் நாவினால் செய்யும் ஒலியாகிய அவன் பெயரை ஒலிப்பதே ஆகும். இவ்வாறு நாவொலி பெறுபவை நாதன், நாமம், நமச்சிவாயம் என்பனதாம்.
பாடல்: திருநாவுக்கரசர்.
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
(கல்+ தூண் > கற்றுண் என்று குறுகியது எதுகைநோக்கியது.)
ஆதலின் நாமம், நாதன் என்பவை தமிழிலும் அவற்றின் பொருளைத் தருவனவாம்..
நா+ த் + அன் > நாதன்.
இதை நா+ தன் எனினும் இழுக்கில்லை. இங்கு இது, து, த் என்பன சொல்லாக்க இடைநிலைகள். அதாவது சொல்லமைக்கும் உதவி ஒலிகள்.
நா+ ம் + அம்> நாமம்.
ஆனால் நா+ மம் என்று விளக்குவதைத் தவிர்த்து, நா+ ம் + அம் என்றே விளக்குக.
இது என்பதே த் என்று குறுகி ஏற்பட்டது எனினும் நா + இது + அன் என்று விரிக்கவேண்டியதுமில்லை. சில வடிவங்கள் திரிந்தபின் உள்ளபடி காட்டின் நலம். சில திரிதலின்முன் உள்ளவாறு காட்டினும் ஏற்புடையவாகும்.
எப்படி விளக்கினால் ஒவ்வொன்றையும் எளிதாக உணர்ந்துகொள்ளலாம் என்பதே குறிக்கோள்.. அன்+ அம் என்பதை அனம் என்று காட்டுவதுபோன்றதே இது . அனம் என்பது இங்கு இடைச்சொல். அனம் என்று ஒரு தனிச்சொல் ( பெயர்ச்சொல்) இல்லை.
மேலும் அறிய:
https://sivamaalaa.blogspot.com/2016/07/blog-post_32.html
நாதன் நாமம் முதலியவை
https://sivamaalaa.blogspot.com/2017/11/blog-post_6.html
சில சோதிடச் சொற்கள்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.