பதாகை என்பது இருவழிகளில் விளக்கத்தக்க சொல்லமைப்புடையது ஆகும்.
பதி (~ தல்) என்ற வினையடியாகவும் இதை விளக்கலாம். சில குறியீடுகள், நிறம், சித்திரவேலைப்பாடுகள் முதலியவை கொடியில் பதிவு பெற்று கொடி அழகுபடுத்தப்படும்.
பதி + ஆகு + ஐ.
இந்தச் சொல்லில் ஐ என்பது விகுதி. பதி + ஆ என்பது பதா என்று வந்தது. பதி என்பதன் இறுதி இகரம் ஒழிந்தது. ( கெட்டது என்பர் இலக்கணத்தில் ). ஆகாரம் வந்து ஏறுவதால் பதா என்றானது முடிவில் இது பதாகை என்றாகும்.
பரத்தல் என்ற வினையினடியாக:
பர + து + ஆகு + ஐ
பரதாகை, இதில் ரகரம் இடைக்குறைந்தும் பதாகை ஆகும். துணி பரவலானதாக வைத்து அதில் எழுத்துக்கள் இருத்தலால் பதாகை என்பதும் பொருத்தமான சொல்லாக்கமே ஆகும். ஆகவே இது இருபிறப்பி ஆகும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.