Pages

ஞாயிறு, 24 மார்ச், 2024

கச்சேரி.

 கச்சேரி என்பது ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களின் இடைக்குறைச் சொல் ஆகும். இவற்றில் ஒன்றினை முன்னரே இங்கு விளக்கியுள்ளோம்.  நாலாயிரத்துக்கும் மேற்பட்ட இடுகைகள் இங்கு இருப்பதால் இவற்றைக் கண்டுபிடிப்பதில் தடைகள் சில இருக்கலாம்.  உதவிக்கு இங்கு இதனை எளிதில் அடையக் குறிப்பினைத் தருவோம்.

கச்சேரி என்ற சொல்லுக்குரிய முழுச்சொற்களை இங்குப் பட்டியலிடுவோம்:

கலைச்சேரி:

வேலை முடிந்தவுடன் ஊழியர்கள்  ஒன்றாகக் கலைந்து செல்வது எங்கும் நடைபெறுவதொன்று.  இவர்கள் செல்லும் வண்டிகளில் ஒன்றாக உடன்பயணம் செய்வதும் அடிக்கடி நிகழ்வதே.  கலையும்போது ஒன்றாகச் சேர்ந்து வெளிப்படுதல் என்ற பொருளில் "கச்சேரி" என்ற குறைச்சொல்லின் நிறைவடிவம் அமைந்தது.


கலச்சேரி:-   >  கச்சேரி.

கலைதல் -  கலைந்து தம்தம் இடம் அல்லது இல் நோக்கிச் செல்லுதல். அப்போது கலந்து = வெவ்வேறு இருக்கைகளிலிருந்து வந்து,   சேர் இ >  சேர்ந்தவாறு செல்லுதல். 

வினைச்சொல்: கலைதல் மற்றும் கலத்தல்.

கலைசேரி>  க+ சேரி >  கச்சேரி  ( லை  குறைந்தது)

கல சேரி >  கலச்சேரி >  கச்சேரி  ( ல குறைந்தது )

கலசேரி  >  க(ல)ச்சேரி மற்றும் க(தை)ச்சேரி

பல வித இசைப்பாடல்களும் கலந்து வரிசையாகப் பாடப்பெறும் இடம்.

வினைச்சொல்:  கலத்தல்.

கதைச்சேரி >  கச்சேரி  எனினுமாம்.  பல கதைகளும் சொல்லும் மேடை.

இரு பெயர்ச்சொற்கள்  ஒட்டு.


கருமச்சேரி

கருமச்சேரி > ( கருச்சேரி) >  கச்சேரி.   அலுவலகம்,  வழக்குமன்றம்.

மேலும் காண்க:  https://sivamaalaa.blogspot.com/2019/03/blog-post_43.html

பல முதன்மைக் கருமங்கள் நிறைவேறும் இடம் என்ற கருத்திலோ,  அல்லது தம் முன் கருமவினையின் காரணமாகவோ இங்கு போக நேர்ந்தது என்ற நினைப்பின் காரணமாகவோ இவ் விடைக்குறை ஏற்பட்டிருக்கலாம்.  தமிழ்மக்கள் முன்னாட்களில் காவல்நிலையத்திற்குச் செல்ல விருப்பம் இல்லாதவர்கள்.

கதம் என்பது ஒலி.  இவ்வொலிகள் எழுப்பப்படும் இடமும் கச்சேரி ஆகலாம்.

கத்து >  கது > கதம்.  சேரி என்பதிணைந்து கதச்சேரி >  கச்சேரி ஆகும்.


மேலும் வாசிக்க:  சொடுக்குக

https://sivamaalaa.blogspot.com/2019/03/blog-post_43.html

https://sivamaalaa.blogspot.com/2020/08/thii-and-day.html


மெய்ப்பு:  பின்னர்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.