சுதந்திரம் என்றால் சொந்தத் திறனால் இயங்குதல் என்பதே பொருள். இதனை 23.12.15ல் விளக்கியிருந்தோம். அப்போது சொம் என்ற அடிச்சொல்லை பின்னொரு கால் விளக்குவதாக எழுதியிருந்தோம். முன் எழுதிய இடுகை இங்கு உள்ளது:
https://sivamaalaa.blogspot.com/2015/12/blog-post_22.html
உண்மையில் உலகில் மனிதன் இருக்கிறான், அவனருகே ஒர் நிலமும் இருக்கிறது. யாரும் இது எனது என்று சொல்லாவிட்டால் அது யாருக்கும் சொந்தம் என்று சொல்ல இயலாமல் போய்விடும். ஒன்று அவன் சொல்லவேண்டும்; இல்லையேல் வேறு யாராவது சொல்லவேண்டும். இப்போதெல்லாம் இந்தச் சொல்லும் வேலையை நில இயக்ககம் அல்லது பதிவகம் சொல்கிறது. அதுவும் ஒரு சொல் அல்லது சொலவு ( சொல்லுதல் ) தான். Statements made in a document.. It is also like saying to another.
சொந்தம் என்ற சொல்லில் உள்ள சொ என்பது உண்மையில் மகர ஒற்றுக் குறைந்த ஒரு சொல்லாகும். இதைக் கடைக்குறை என்பர்.
சேனை என்ற சொல்லும் சேர் என்பது கடைக்குறைந்து, சே என்றாகி, (இ)ன்
+ஐ என்று விகுதி பெற்று சொல்லானது. தமிழன் பலகாலமாக சேனைகளை வைத்து நிறுவகித்தவன் ஆவான். சேனை என்று பொருள்படும் பல சொற்கள் தமிழில் உளவாதல் வியப்புக்குரியதன்று. ( இ )ன் என்பது இடைநிலை.. இன்னொரு சொல்: சேர்மித்தல்== >சேமித்தல்.
சொ+ உம் என்பதே சொம் என்ற பழந்தமிழ்ச் சொல்லின் பிறப்புவிளக்கம். இச்சொல் பழந்தமிழில் சொம் என்றே காணப்படுகிறது. இந்த நிலம் அல்லது பொருள் "உமது என்று சொல்கிறீர்" என்பதே அது. நீர் உமது என்று தம் பொருளையே சொல்லலாம். சொ(ல்) + ( உ) ம் + தம்.
நிலம் உமது என்று தாமே சொல்கிறீர். வேறு யாரும் சொல்லவில்லை. ஆகவே உமது என்று ஒத்துக்கொள்வோம். No contestants. So yours.
நிலகளரி அல்லது நிலப்பதிவகம் என்பது பிற்காலத்து ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட உடைமைவழக்குகள் எழுந்து எல்லாமும் நீதிமன்றக் கூடையில் தேங்கிவிடாமல் இருப்பதற்கான ஓர் எளிதான வழியமைப்பே ஆகும். வேறு இணை அல்லது துணைக் காரணங்களும் இருக்கலாம் எனினும் அவை இங்கு வேண்டாதவை. உடைமை வழக்குகள் பல இவ்வாறு தீர்க்கப்படுகின்றன.
அரசன் செய்துவந்த வேலையை இன்றை அரசுகள் செய்கின்றன.
சொம் என்பதையும் சொம்தம் ( சொந்தம்) என்பதன் பொருளையும் இதன் மூலம் அறியலாம். பண்டைத் தமிழரின் சொல்லாக்க நெறியையும் அறியலாம்.. தமிழுக்கு முன் இருந்த மொழிகளிடம் இதற்கான சொல் இருந்திருந்தால், தமிழ் எளிதில் அதையே போற்றிக்கொண்டிருக்கலாம். முன் மொழிகள் திருந்தியவையாய் இல்லாமையால், தமிழ் பண்பட்ட இலக்கியத்துடனும் அதற்குரிய இலக்கணத்துடனும் தன்னை அமைத்துக்கொண்டு பயணித்தது என்பதறிக. தமிழில் காணப்படும் சொற்கள் சில ஆப்ரிக்க மொழிகளிலும் ஆஸ்த்ரேலியப் பழங்குடிகளிடமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது.
சொம் என்பதும் சொந்தம் என்ற சொல்லும் சொல் என்பதனுடன் தொடர்புடைய சொல். அதன் அமைப்பை மேல் விளக்கியுள்ளோம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
Visitors please refrain from making changes or inserting dots into the text.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.