தைவானில் சுற்றுலவும் கிரண்குமார்
தாய்போலும் ஊண்பகிரும் பெண்டிர்தரும்
மெய்யன்பு பெற்றயிலும் உண்டியுடன்
மென்னகையே புரிந்தபடி தோன்றுகிறார்
உய்யவழி உலகனைத்தும் வலம்கொள்வீர்
ஓரினமே யாவருமே எனக்கொள்வீர்
ஐய இந்த உலகினியே சுருங்கிவிடும்
ஆனவுற வெங்கணுமே விரிந்துவிடும்!
ஊண் - உணவு
அயிலும் - உண்ணும்
மென்னகை - புன்னகை
உய்யவழி - முன்னேறவழி
எங்கணுமே - எங்குமே
விரிந்துவிடும் - விரிவாகிவிடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.