ஆசிரியப்பா
வாழ்கென வரமருள் குளிர்ந்த மழைத்துளி,
வீழ்கென ம(ன்)னமகிழ் ஆழ்மனம் வாழ்கநீ!
உடலில் வீழ்கென ஓடிமுன் நிற்க,
படலும் குன்றியப் பெயலும் நின்றது;
வானம் நீயே வரையாது வழங்குவை
கானம் இசைத்தனை கடுந்தரை மோதலில்;
ஏன் நின் றனைநீ ஏற்றிடு நீயே
நான்முயல் வேனே நனிஇன் னொருநாள்
கூன்படு நோக்கு குறைத்தே
நnன்மகிழ்ந்திடவே நனைத்திடு கவினே.
பொருள்:
வாழ்கென - வாழ்க என்று
வீழ்கென - பெய்க என்றவாறு
மனமகிழ் - மன்ன மகிழ் ( தொகுத்தல்) -ன் குன்றியது.
--- பொருந்தும்படி மகிழும்.
வாழ்க நீ - மனமே நீ வாழ்க
படல் - உடலை மழைத்துளி தொடுதல்.
வரையாது - குறைவின்றி
மழைத்துளி கானம் இசைத்தனை - தரையில் வீழ்தலில் ஓர் இசை
வந்த என்பது
மழையில் நனைவதும் ஒரு மகிழ்வு தரும்!
ஏற்றிடு நீயே - ஏற்றுக்கொள்வய் நீ
கானம் --- இசை
கூன்படு நோக்கு - நேர்மையற்ற பார்வை அல்லது நடப்பு
நனி - நன்றாக
நனைத்திடு - என்மேல் பெய்திடு
கவினே - அழகே. இது மழையை விளித்தது
மெய்ப்பு - பின்னர்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.