மாதம் என்ற சொல்லின் பொருண்மையைப் பலவாறு ஆய்ந்துள்ளனர். காலத்தை அளவிடற்கு பண்டையர்க்கு ஓர் அளவை அல்லது "அளவுக் கருவி" இருந்ததென்றால் அது நிலவு அல்லது நிலா எனப்படும் மதியமே ஆகும். சைவ ஏடுகளில் மதியம் ( மாலை மதியம்) என்ற சொல்லமைப்பு காணப்படுகிறது. காலத்தை மதிக்க அல்லது மதிப்பீடு செய்ய மனிதற்குக் கிட்டிய கருவி அதுவாம்.
அது புவிக்குத் தெரியாமல் இருக்கும் காலம் "அமாவாசை" எனப்படுகிறது. நிலவு இல்லாமற் போய்விட்டது என்று பண்டை மக்கள் நினைக்கவில்லை. அது இருளில் மூழ்கிவிட்டது என்று அவர்கள் அறிந்திருந்தனர். அது இருட்டிடமாக மாறிவிட்டது, ஆனால் நிலவு அங்குதான்* உள்ளது! இந்த இடுகைகளைப் படித்து அறிந்துகொள்க.
https://sivamaalaa.blogspot.com/2016/01/blog-post_24.html
https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_17.html
இதற்குப் பொருள்: அந்தப் பெரிய இருள் இடம், அழகிய இருள்சூழ் இடம். அ(ம்) என்பது சுட்டாகவுமிருக்கலாம், அழகுப் பொருள் படுவதாகவும் இருக்கலாம், ஏன் இவ்வாறு இருவழியிற் சொல்கிறோம் என்றால் இவை அச்சொற்களிலே காணப்படுவதால். மா என்ற சொல்லும் பெரிது என்றும் பொருள்தரலாம். இருள் என்றும் பொருள்தரலாம். அளவு என்றும் பொருள்தரலாம். மாதம் என்ற சொல்லில் மா என்பது அளவு, பேரளவு என்று பொருள்தரும். அமாவாசை என்ற சொல், கவிதைக்கு உரிய சொல்லாக கையாளப்படவில்லை. இதை "அம்மா வாசெ" என்றே சிற்றூரார் ஒலித்தனர் என்று தெரிகிறது. அமா~ என்று ஒலிப்பது பிற்காலத்தில் வந்த திருத்தம்.
அமாவாசை என்பதில் இடையில் தோன்றும் மா என்ற சொல்லும், மாதம் என்பதில் முதலில் வரும் மா என்ற சொல்லும், அளவுச் சொற்களே. நிலக்கணக்கிலும் " மா" என்பது "ஒரு மா நிலம் "என்று அளவே குறித்தது. மாத்திரை என்ற சொல்லிலும் " மா" என்பது அளவுதான். மா என்பது பல்பொருள் ஒருசொல். பெருமை என்று பொருள்தரும் " மானம் " என்ற சொல்லும் அளவு, மதிப்பீடு என்பவை குறிக்கும் சொல்லே. மதிப்பு என்ற சொல்லிலும் மதி என்பதிலும் மதி என்பது அளவு, அளவிடுதல் என்னும் பொருளதே.
மா - மதிப்பு. மாமன் - மதிக்கப்படுபவன், மாமா. பெரியோன்.
மாகக்கல் - கானகத்தில் கிடைத்த ஒரு கனிமக்கல்.
மாக்கடு - போற்றப்பட்ட ஒரு கடுக்காய் வகை.
மேஷர் , மீட்டர் என்ற பலவற்றிலும் அளவு உள்ளது. அவற்றை இங்கு விட்டுவிடுகிறோம்.
எல்லாம் மகர வருக்கச் சொற்கள்.
மதித்தல் என்பதே இவற்றுக்கெல்லாம் உறவுச்சொல். வினைச்சொல்.
மதி - வினைச்சொல். ஏவல் வினை.
மதி+ அம் = மாதம். [ முதனிலை நீண்டு விகுதி பெற்ற சொல்.]
எடுத்துக்காட்டு: சுடுதல் , வினைச்சொல். verb. சுடு> சூடு ( முதனிலைத் திரிபு), சூடு> சூடம்> சூடன். காம்ஃபர் என்னும் எரிக்கத் தகுந்த வெண்பொருள். அம், அன் விகுதிகள்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
*அங்குத்தான் - not favoured. வலிமிகல்
ஒரு திருத்தம்: 3.11.2022 11.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.