திரைதல் என்றால் நேர்மட்டமாக இல்லாமல் மேலும் கீழுமாக வளைந்து செல்லுதல், அல்லது உள்ளும் புறமுமாய் நிலைகெடுதல். மனிதனின் இளமை நாட்களில் உடலின் மேல்தோல் அழகாக சுருக்கம் எதுவுமின்றிக் காட்சிக்கினிமையாக இருக்கும். கிழவனாகிவிட்டபின் தோலில் திரை விழும். அதாவது சுருக்கங்கள் தோன்றி அகவை மிகுதியைத் தெரிவிக்கும். முதிர்வில் நரை, திரை, மூப்பு, மரணம் என்று துன்பங்கள் தோன்றிப் புவி வாழ்வு முடிவுறும். இந்நான்கனுள் நாம் இங்கு கருதுவது திரை என்னும் நிலைமையை.
துணி முதலியவை திரையாகத் தொங்கி சாளரம் முதலியவற்றுக்கும் மேடையின் முகப்புக்கும் அழகு சேர்க்கும். சேலையணிதலிலும், கட்டும்போது அழகிய வளைவுகள் திரைபோலும் தோன்றும்படி கட்டப்படுவதுண்டு.
தவளை வகைகளில் தேரை என்பது ஒன்று. இது கல்லினுள்ளும் வாழுமென்பர். இதன் மேல்தோல் திரைந்திருப்பதால் இது தேரை எனப்பட்ட்து. திரை > தேரை ஆகும். திரை என்பது தீரை என்று நீட்சி பெறாமல் தேரை என்று ஏகாரத்தில் தொடங்குதல் காண்க.
திகை என்ற சொல், திகைதல் அல்லது தீர்மானிக்கப் படுதலைப் பொருளாக உடையது. திகை என்ற வினை, தி என்னும் தொழிற்பெயர் விகுதி பெற்று, திகைதி ஆகி, இடையில் உள்ள ஐகாரம் குறுகி, திகதி ஆகிவிடும். இது பின்னும் திரிந்து, தேதி ஆகும்.
இவ்விரண்டு சொற்களிலும் ( திரை> தேரை; திகை > திகைதி > திகதி > தேதி ) முன் நின்ற இகரம் ஏகாரமாகத் திரிந்து முடிதல் காண்க
திகதி என்ற சொல்லும் இடைக்குறைந்து திதி என்று வரும். சில சொற்களில் பொருள் சிறிது திரிந்தும் சில திரியாதும் வருதல் காண்க.
தேய் என்ற வினை தீ என்று திரிந்ததில் ஏகார முதலெழுத்து ஈகாரமானதும் காண்க.
இவற்றையும் அறிக:
கத் - ஒலி குறிக்கும் அடிச்சொல். கத் > கித் > கீதை; கீதம். கத் > கதம், கதை.
கத் - கதம்; கத் > கதி ( ஒலி). [ சங்கதி ]
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
நல்ல பதிவு
பதிலளிநீக்குநல்ல பதிவு
பதிலளிநீக்குநன்றி திருவாளர் அவர்களே.வணக்கம்.
பதிலளிநீக்கு