இந்தச் சிறிய நாய், இரவெல்லாம் வீட்டுக்குள் சுற்றி சுற்றி வந்துவிட்டு, காலை வந்தவுடன் களைத்துப் போய்ப் படுத்து உறங்கிவிடுமாம். வீட்டில் யாராவது இரவில் எழுந்தால் உடனே அருகில் வந்துவிடுமாம். பகலில் வீட்டிலிருப்பவர்கள் அங்குமிங்கும் நடமாடுவதை அது கண்டுகொள்வதே இல்லையாம். ( சாப்பாட்டு நேரம் தவிர )
எப்போதும் இரவுநேர வேலையிலே ஈடுபடுவதால், இந்த நாய்க்குட்டிக்குப் பெயர் - "Night shift doggie" என்று அழகாகக் குறிப்பிடுகிறார்கள்.
அனுப்பியவர்: திருமதி ஓ. ரோஷினி. ஹாங்காங். நன்றி/
இவ்விடுகை பற்றிய பல பாராட்டுகள் குறுஞ்செய்திகளாய் வந்தன. அவற்றில் திருமதி ரோஷினி அவர்களின் மாமனாரும் ஒருவர். தமிழ்மொழியின் மூலம் இந்த அருமையான படத்தையும் அதுபற்றி நாம் உரைத்தவற்றையும் "சுவையானவை" என்று அவர் தம் மருமகளுக்குத் தெரிவித்திருந்தார். Night shirt doggie என்பதைக் குறிப்பிட்டு இடுகையின் தரத்தை உயர்த்திவிட்டீர் என்றும் திருமதி ரோஷினி குறிப்பிட்டிருந்தார். சுவைத்துப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி.
பதிலளிநீக்கு