இன்று ஆக்கிரமிப்பு என்பதை அறிவோம் - சுருக்கமாக.
கிரமித்தல் என்பது ஒர் பிறழ்பிரிப்புச் சொல் என்பதை யாம்
முன்னர் வெளியிட்டுள்ளேம்.
இதனைப் பழைய இடுகைகளிற் காண்க.
ஆக்கு + இரு + அம் + இ + பு = ஆக்கிரமிப்பு ஆகும்.
தமக்கு ஆக்கம் நேருமாறு ஓரிடத்தில் இருந்துகொண்டு
நிலைமையை அமைத்துக்கொளுதலே ஆக்கிரமிப்பு.
ஆக்கு இரு : ஆக்கம் இருக்குமாறு
அம் - அமைந்து
இ - இது வினையாக்க விகுதி.
உது - முன்னது; + இ ( வினையாக்க விகுதி).
உது + இ = உதி > உதித்தல். முன் தோன்றுதல். இஃது
எடுத்துக்காட்டு.
இதில் உள்ளது எளிமையான கருத்து.
வலிந்துகவர்வு என்றும் இதைக் கூறலாம். வலிமை
காட்டுதற்கு நிலம்/பொருள் இவற்றுக்கு உரியோன்
இடத்தில் இல்லாதவிடத்தும் ஆக்கிரமிப்பு
நிகழலாம். உரியோன் பின்பு வந்து அறியினும்
வலிந்துபற்றுதலின் பாற் படுவதே.
மெய்ப்பு பின்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.