Pages

சனி, 5 செப்டம்பர், 2020

ஆரோகணம் ( இசைத்துறைச் சொல்)

ஆரோகணம் என்ற இசைத்துறைச் சொல்லை இன்று சுருக்கமாக ஆய்ந்துகொள்வோம்.

[மிக்க நீண்ட எழுத்துப் படைப்புகளை இந்த முடிநுண்மி நோய்க்காலத்தில் வாசிப்பது யாருக்கும் சற்று, துன்பம் தருவதாக அமைந்துவிடும். மனிதருக்குப் பல கவலைகள். அவற்றை யெல்லாம் ஒரேயடியாக மாற்றி மேல்வருதல் யார்க்கும் எளிதன்று. ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாகத் தீர்த்துக்கொள்ளலாம். முடியக் கூடிய  முயற்சிகளை நாம் மேற்கொள்ளுதல் தவறன்று. காலம் கனிந்துவருங்கால் சிரம்ம தரும் தடைகளையும் நாம் நீக்கிக்கொள்ளலாம். இதுவும் ஒரு நல்ல வழியாகும்.

உருவத்தால் நீண்ட உயர்மரங்க ளெல்லாம்

பருவத்தால் அன்றிப் பழா

என்றார் நம் ஒளவைப் பாட்டி. ]

ஆர்தல் என்றால் நிறைதல், நிறைவு என்றும் பொருள்,

பொருந்துதல் என்பதும் பொருளாகும்.

பிற அர்த்தங்களும் உள்ளன. அருத்தம் - அர்த்தம் என்பது சொல்லுக்கு ஊட்டப்பெறும் பொருள். அருத்துதல் எனில் ஊட்டுதல், பிறவினைச் சொல். அர்

என்பது ஒலி என்றும் பொருள்படும். அர்த்தம் என்பது

ஒலி எழுப்புதலால் அறியப்படும் பொருள் என்றும்

விளக்கலாம். அரற்றுதல் ( அர் அடிச்சொல்) - ஒலி

செய்தல். அர் > அரவம் என்பது ஒலி. அரக்கல் - ஒலி எழுமாறு தேய்த்தல், பின் அது தேய்த்தல் என்று

பொருள் குறுகியது. அரட்டுதல் - ஒலி எழுப்பிப் பயமுறுத்தல். அராகம் என்பதும் ஒலி குறித்ததே. கலிப்பாவின் உறுப்புகளில் ஒன்று.


அர் - அரவம் - ஆரவம் இவை ஒலியே. இங்கு

அர் எனற்பாலது ஆர் என்று திரிந்ததும் அறிக. ஆரவாரம் என்பது ஆர் இருமுறை வந்த சொல்.

ஆர் + ஆர் + அம் > ஆர ஆர அம் > ஆரவாரம். இதில் வகரம் உடம்படுமெய். இது ஒலிக்கிளர்ச்சி குறிக்கும் சொல்.இடை இடை வந்த இரு அகரங்களும் அங்கு என்று சுட்டாக வந்ததுடன் உடம்படுத்தும் வேலையையும் செய்து சொல்லாக்கத்துக்கு உதவியது.


ஆரோகணம் என்ற சொல்லில் ஆர் என்பது ஒலியையும் குறிக்க, நிறைவு பொருத்தம் என்பவும் குறித்தது. ஓ என்பது ஓங்குதல் எழுதல் என்பது குறித்தது. ஓங்கு என்பதில் ஓ என்பது பகுதி. கு என்பது வினையாக்க விகுதி. +கு = ஓங்கு ஆனது. கணம் என்பது இடம். கண் = இடம். இதன் கண், அதன் கண் என்ற வழக்குகள் அறிக. மனத்துக்கண் என்றால் மனத்தில். மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்ற தொடர் நோக்குக. ஓ என்பது ஓசையும் ஆகும்.

ஆரோகணம் என்றால் பொருந்துமாறும் நிறைவாகும் படியும் உரிய இடத்து ஓசை எழுதல் என்று முடிக்க.

ஆர் = ஓசை; நிறைவு.

= ஓசை, ஓங்குதல் (மேலெழல்).

கண் - இடம்.

அம் - அமைதல் குறிக்கும் விகுதி.


இவ்வாறு சொல்லில் உள்ளுறுப்புகளைப் பொருத்தி

அமைத்த நம் முன்னோர் தீரபுத்தி உடையோர் ஆவர்.

தீரம் என்பது தீர்த்து நிறுத்தும் ஆற்றல். புத்தி என்பது

புதிய சிந்தனையில் உண்டான அறிவு ஆகும். புது + = புத்தி,

 

குறிப்பு:


அறுத்தம் > அர்த்தம் - சொற்பொருளை வரையறுத்தல்

எனினும் ஆகும். எவ்வாறு நோக்கினும் இச்சொல்

தமிழே ஆம்.


 

 

 

 

 

Edits paragraphing etc lost in this post. This will

be redone later.  Proof reading will be done later.

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.