சாதுரியம் என்ற சொல் அறிவோம்.
முதலில் அறிய வேண்டியது சதசத சொத்சொத என்ற ஒரு வகை " இரட்டைக் கிளவிகள்". கிளவி என்றால் சொல். கிளத்தல் - சொல்லுதல்.
சத சத என்பதும் சொதசொத என்பதும் கெட்டியில்லாத பொருளைக் குறிக்கிறது.
இந்த இடத்தில் மண் சொத சொத என்றிருக்கிறது என்பர். திண்மையற்ற நிலை.
சத சத என்பதும் அதுதான்.
கெட்டியில்லாத எந்தக் கலவையும் தரையில் எறிந்தால் சத் அல்லது சொத் என்ற ஒலியுடன் விழும். தெறிக்கும். மண்ணும் நீரும் கலந்திருப்பதும் கலவைதான்.
இவ் வொலிக்குறிப்புகளிலிருந்து தோன்றிய சில சொற்கள்:
சதி - மென்மையானவள்; பெண்.
சதியுடன் பதிந்து வாழ்பவன் பதி. இதிலிருந்து சதிபதி.
சதி<> சது.
சது > சதுப்பு. (சதுப்பு நிலம்) மெதுமண் நிலம்.
சது > சதை. எலும்புபோலன்றி மென்மையானதாகிய தசை.
சொத > சொதி : மென்மையான தேங்காய்ப்பால் கலந்த உண்ணும் குழம்பு.
சது > சாது. மென்மையான ஆள். ஆண்டி.
சது > சத்து: உள்ளடங்கிய மென்மையான உறைவு.
மென்மாந்தனாகிய ஒரு சாதுவுக்கு உரிய தன்மையைத்தான் சாதுரியம் என்பர்.
சாது + உரி + அம் = சாதுரியம்.
மென்முறையில் ஒன்றைச் சாதித்துக்கொள்பவன் சாதுரியமுடையவன்.வேறு விளக்கங்களும் இச்சொல்லுக்கு உள. அவற்றைப் பின்னொரு முறை காண்போமே.
குறிப்பு:
சாதுரியம் என்பதில் ( சாது + உரி(ய) + அம் )= என்னும் சொல்லமைப்பில் வலி மிகாது அதாவது வல்லெழுத்துத் தோன்றாது, இதற்கு உதாரணம்: முடிகுடி என்ற சொல். முடிமன்னர்குடி என்பது இதன்பொருள். குறுமன்னர் குலம் என்பது குறுமுடிகுடி என்று வலிமிகுதலின்றியே வரும். அன்றியும் சொல்லமைப்புக்கு வாக்கிய இலக்கணம் உரியதன்று.
தட்டச்சுத் திருத்தம் பின்.

நல்ல தமிழ் வளம்
பதிலளிநீக்குதமிழ்மக்கள் பயன்பெற வேண்டுமென்பதே எம் ஆவல்.
பதிலளிநீக்குபாராட்டியமைக்கு நன்றி.