நோயணுக்கள் விஞ்சி நுழைவரும் எவ்விடத்தும்
பாயடைவு கூட்டும் மகுடமுகி ---- தூயரையும்
விட்டுவைத்தல் இல்லையே வேறிருந்து காக்கதனை
குட்டறிந் திந்நாள் குலவாமல் ----- மட்டுறுத்திப்
பட்டறிவா ளர்வாழ்வார் பாட்டும் தமிழுமே
எட்டுவதால் மேன்மையே என்றென்றும் -------ஒட்டியிங்கு
வந்தே மகிழ்கின்றார் வாழ்க தமிழன்பர்
தந்தேம் இடுகைகள் இங்கு.
பொருள்
நுழைவரும் எவ்விடத்தும் -- புகுவதற்கு இயலாத
எந்த இடத்திலும். (நுழைவு அரும்)
பாயடைவு - பாய்ந்து சென்று அடைந்துகொள்ளுதல்.
மகுடமுகி - கொரனாவைரஸ். (கோவிட் 19)
காக்கதனை - தன்னைக் காத்துக்கொள்க.
குட்டறிந்து - மறைதிறவுகளை அறிந்து
குலவாமல் - நெருங்கிப் பழகாமல்.
பட்டறிவாளர் - அனுபவசாலிகள்
எட்டுவதால் - (வருவோரைச் ) சென்று சேர்வதால்;
தந்தேம் - தந்தோம்
நோய்ப்பரவலால் பல இன்னல்களை அடைந்தாலும்
பாட்டுக்காகவும் தமிழுக்காகவும் அன்பர்கள் வந்தே மகிழ்கின்றனர்
என்பது கருத்து. வாழ்க தமிழ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.