போதை தரும் தேறல்களை இலாகிரி வஸ்து (பொருள்) என்பர். வஸ்து என்பது விளக்கப்பட்டுள்ளது.
https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_55.html
இதற்கு முன்னும் இதை விளக்கியதுண்டு. அந்த இடுகைகள் இங்கு இல.
சுருங்கக் கூறின், வைத்திருப்பது வஸ்து. வைத்து > வஸ்து. வைத்துக்கொள்ளாதது குப்பை, இங்கு வைத்துக்கொள்ளாதது எனின் வேண்டாதது.
இலாகிரிப் பொருளின் வேலை அல்லது பயன்பாடு என்ன? மனிதனின் கடுமையான நிலையையும் போக்கையும் மாற்றி இலகுவாக இருக்கச்செய்வது. இங்கு இலகு எனின் சற்று நெகிழ்வான நிலை.
இலகு + இரு + இ= இலகிரி. இதில் இரு என்பதிலுள்ள உகரம் கெட்டு இகரமேறி இரி ஆனது. இலக்கணத்தின் பொருட்டு இவ்வாறு கூறினும் இரு என்பதும் ஏனைத் திராவிட மொழிகளில் இரி என்று திரிதலை உடையதே ஆகும். ஆகவே இலக்கண விளக்கங்கள் இல்லாமலே இரி என்பதை இரு என்பதின் மறுவடிவமாக ஏற்றுக்கொள்ளலாம்.
இலகிரி > இலாகிரி > லாகிரி.
லகரத்தின் முன்னுள்ள உயிரெழுத்து மறைதல் சொன்னூலில் இயல்பு ஆகும்.
உலகம் > லோகம் இங்கு உயிர் மறைவுடன் லகரம் லோகாரமாயிற்று.
இலக்குவன் > லக்குமணன். ( இலக்கு அல்லது கோடு போட்டவன்; ஆதலின் காரணப்பெயர்.
https://sivamaalaa.blogspot.com/2018/10/blog-post_14.html
லகர ரகரப் போலியும் உளது. லகரம் போலவே ரகரமும் இவ்வாறு தன்முன் நின்ற உயிரை இழக்கும்.
எ-டு: அரங்கன் > ரங்கன்
அரத்தம் > ரத்தம் >( இரத்தம். )
அர் எனின் சிவப்பு. அடிச்சொல்.
இலாகிரி கொண்டேன் = மயக்கம் கொண்டேன்.
இலகு என்பது இளகு என்பதன் போலியே.
இந்த மயக்கத் தேறல்களைக் கண்டுபிடித்த காலத்தில் அவற்றைக் குடித்து மயங்குவது வியப்பாகவே மக்களுக்குத் தென்பட்டது. பிற்காலத்து இவ்வியப்பு ஒழிந்து குடிப்போன் மேலான நிலையை அடைகிறான் என்று எண்ணப்பட்டது. இந்த வியப்பு, மேன்மை என்ற பொருளெல்லாம் அடங்கியது ஐ என்ற ஓரெழுத்துச் சொல். குடித்தபோது " ஐ" நிலை அடைவதால் போது + ஐ = போதை ஆகி, அச்சொல் அமைந்தது அறிக.
பிழைத்திருத்தம் பின்.
பொழுது > போது > போதை.
குடித்த மாத்திரத்தில் ஐ தருவது எனினும் ஆம்.
மயங்குவது என்பது ம~து என்று சுருங்கிற்று: மது.
அறிந்து மகிழ்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.