து விகுதி பெற்று அமைந்த சொற்களை இன்று பொதுவாக நோக்குவோம்.
து என்னும் விகுதி வினைச்சொல்லிலும் வரும்:
எடுத்துக்காட்டு: ஓது. மோது. (முக><மோ)
இது பெயர்ச்சொல்லிலும் வரும்:
எடுத்துக்காட்டு: விழுது. பழுது கைது (கையகப்படுதல்)
இதுவே வினை எச்சங்களிலும் வரும்.
எடுத்துக்காட்டு:
அழுது ( அழுதுகொண்டே பாடினான்).
தொழுது ( தொழுது உண்டு பின் செல்பவர் ).
பிசைந்து ( பிசைந்து உருண்டையாகப் பிடி ).
பெயரெச்சத்தில் து என்பது த என்று மாறிவிடும்:
அழுத பையன்.
இதை அழு ( த = த் + அ ) எனலாம்.
இதை அழு ( த = து + அ ) என்றும் சொல்லலாம். இவ்வாறு கூறின் து என்பதில் உகரம் கெடுத்து அகரமேறியதாகக் கொள்ளவேண்டும். இந்த அகரம் அந்த என்ற சுட்டுப் பொருளோடு தொடர்புறும். த் என்பது இறந்தகால இடைநிலை என்று கொள்ளுதல் சிறந்த விளக்கம்.
து என்பது சுட்டுச்சொல்லுடன் வரும்:
அது
ஈது
து என்பது வினாவுடனும் வரும்.
எது
ஏது.
து என்பதில் ஆகாரம் இணைந்தும் வினாவாகும்:
அதுவா. (அது+ ஆ).
இனி, விந்து என்ற சொல்லை ஆய்வு செய்வோம். இதை எம்மிடம் கேள்வியாகக் கேட்டுள்ளனர். இச்சொல்லில் இறுதியில் நிற்பது து என்னும் விகுதி. இது இந்தோ ஐரோப்பியச் சொல் அன்று. இது இந்தோ ஐரோப்பிய மூலமொழிச் சொற்றொகுதியில் உள்ளதா என்று தேடிப்பாருங்கள். து விகுதி இந்தோ-ஐரோப்பியத்தில் இல்லை என்று பொதுவாகக் கருதினாலும், பார்ட் என்ற ஆங்கிலச் சொல்லும் "பாற்று" என்ற தமிழ்போலவே ஒலிப்பதைக் காணலாம். "உணரற் பாற்று" "செய்தற் பாற்று" என்ற சொல்லாட்சிச் சொற்றொடர்களில் ஒலிப்பொருமையைக் காணலாம். ஆடி அல்டராம் பாற்றம் என்ற இலத்தீன் தொடரிலும் பாற்றம் பார்ட்டம் என்று வந்துள்ளது காண்க. வீசும் காற்றைக் குறிக்கும் "விண்ட்" என்ற சொல் எடுத்தொலி பெற்று வேறுபோல் தோன்றினும் தமிழ் முறைப்படி உச்சரிப்பதானால் விந்து என்று உச்சரிக்கவே வேண்டும். ஆதலின் விண்ட் என்பது விந்து என்பதுபோல் ஒப்பொலிச் சொல் எனினும் வேறுபொருள் குறித்தமையின் வேறுசொல் என்றே கொள்ளவேண்டும். இப்பொருளில் விந்து என்பதுபோல் ஒலிக்கும் சொல் அங்கில்லை.
உலகில் 6912 மொழிகள் இருத்தல் சொல்லப்படுகிறது.நேரமெடுத்து இம்மொழிகளில் நீங்கள் தேடிப்பார்கலாம்.
விந்து என்பதில் து விகுதி ஆனாலும் வின் என்பது பகுதி அன்று. வெண் என்ற தமிழ்ச்சொல்லே இதன் பகுதியாகும். இது திரிசொல் ஆதலின், இது வெண்ணிறம் என்று பொருள்பட்டு, நிறத்தைக் குறிக்காமல் அந்நிறத்தை உடைய பிற பொருளைக் குறித்தமையின்:
சொல்லும் திரிந்தது: வெண் என்பது வின் என்று திரிந்தது;
பொருளும் திரிந்தது: நிறம் குறிக்காமல் நிறத்தை உடைய உடற் சாற்றைக் குறித்தது.
ஆகவே தொல்காப்பியரின் கோட்பாட்டின்படி இருவகையாலும் திரிசொல் ஆகும். மூலம் தமிழாகிறது.
வெண்+து > வெண்து > வின் து > விந்து ஆகும்.
பல்>பன் ( லகர னகரத் திரிபு). பன்+து > பந்து. பழங்காலத்தில் பந்துகள் கயிற்றினால் கட்டப்பெற்றவை. தேய்வை என்னும் ரப்பர் பந்துகள் இல்லை. கயிறுகள் ஒன்றை ஒன்று பற்றிக்கொண்டு உருண்டை வடிவு பெற்றுப் பந்தாயின. பல்+து = பற்று > பற்றுதல். பல்+து > பன்+து > பன் து > பந்து ஆகும்.
வேறு -னகர ஒற்று ஈற்றுச் சொற்கள்:
பின் > பின் து > பிந்து > பிந்துதல்.
முன் > முன் து > முந்து > முந்துதல்.
வினையாக்கத்தில் புணர்ச்சித் திரிபுகள்.
ஆனால் சில விடத்தில் 0ன் து என்பது 0ன்று என்று மாறிவிடுதல் காணலாம்:
ஒன் + து = ஒன்று. இங்கு ஒந்து என்று வரவில்லை.
பத்து என்ற சொல்லின் அடி பன் என்பதே. பல என்பது பொருள். பன் இரண்டு எனபது பந்திரண்டு என்றாகும்.
பன் > ப > ப து > பத்து.
பன் > பன் து > பந்து.> பந்து இரண்டு > பந்திரண்டு.
பன் > பன் இரண்டு > பன்னிரண்டு.
முற்கால மனிதனுக்கு ஒன்பதுக்குப் பின் பலவாகிவிட்டபடியால் பத்து என்ற சொல்லைப் பன்மை என்பதிலிருந்தே அவன் உருவாக்கிக்கொண்டான்.
பது , பத்து, பன், பான் என்பவெல்லாம் ஒருசொல்லே வெவ்வேறு வடிவங்கள்.
ஒன்பது > ஒன்பான்.
பத்துக்கு பது இடைக்குறை என்றாலும் து என்பது விகுதிதான். ஒன்றில் சொல் வலித்தது : ப து > பத்து; இன்னொன்றில் ப து > பது. வலிக்கவில்லை ( அதாவது வல்லெழுத்து மிகவில்லை). ப> பல் > பன் > ப து > ப த் து என்பன அமைப்புகள். ஒன்பது குறிக்கும் பழந்தமிழ்ச் சொல் தொண்டு; இது தொள் து ஆகும். தொள் : தொள்ளாயிரம்; தொள் > தொண் > தொண்ணூறு. அல்லது தொள்+ நூறு.
மீண்டும் தமிழ் காண்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.