ஆறவைத்த
நீரே அருந்தியே தாகத்தை
மீற
விடுத்திடா மேலாம் கவனத்தில்
இந்நாள்
வரையிருந்தேம் நேற்றோ
செல்லிடத்து
உண்ணாமை
போற்றி ஒருபுட்டி உண்ணீரைக்
உண்டு
விடாய்கழித்தேம் வந்த
தொருநாளில்;
தும்மலும்
நீர்க்கோவை தானும் துவள்தர
இம்மியும்
இன்பிலா நாளாய் இதுவான
தம்மையே
நீங்கள் தரவேண்டும் தேகநலம்
உம்மைப்
பணிந்தேமும் சேய்.
இது இன்னிசைப் பஃறொடை வெண்பா.
அரும்பொருள்:
உண்ணாமை
= விரதம்.
புட்டி
- பாட்டில் (ஆங்கிலம்)
உண்ணீர்
- புட்டியில்
கிடைக்கும் உண்ணும் நீர்.
விடாய்
- தாகம்.
துவள்தர
– உடல் தளர
இன்பிலா
- துன்பமான.
அம்மையே
- தேவியே.
தேகம் -
உடல்.
தேய்ந்து
அழிதலை உடையது உடல், அதனால்
அது தேய்
> தேய்+கு+அம்
= தேய்கம் என்று
அமைந்து
பின் தேகம் ஆனது. யகர
ஒற்று மறைந்தது.
நிலையாமை
பற்றி ஏற்பட்ட சொல்.
எலும்பு
நரம்பு தசை உறுப்புகள் என்பவால்
கட்டப்பெற்றது
அல்லது
யாக்கப்பட்டது யாக்கை.
யாத்தல் : கட்டுதல்.
உள்ளுறுப்புகளைப் போர்த்தி உடுத்தி யிருப்பது உடல்; உடம்பு.
உடு என்பது அடிச்சொல்.
உறுப்புகள் பலவும் அடங்கி இருப்பது அங்கம்: அடங்கம் என்பதன்
இடைக்குறை. ட கெட்டது.
உடலில் நீர் பாதி; நீரில்லாதது பாதி. ஆகவே: சரி+ஈரம் = சரீரம்1
ஆனது.
மேனி - உடலின் மேற்பகுதி.
===================
சரீரம் :
இதைச் சரிதல் + ஈர + அம் எனக்கொண்டு:
சரிவை அல்லது அழிதலை ஈர்த்துக்கொண்டு இலதாவது என்ற பொருளிலும் கூறலாம். அவ்வாறாயின் தேகம் என்பதன் பொருட்கு ஒத்தது இதுவாகும்.
சரீரம் :
இதைச் சரிதல் + ஈர + அம் எனக்கொண்டு:
சரிவை அல்லது அழிதலை ஈர்த்துக்கொண்டு இலதாவது என்ற பொருளிலும் கூறலாம். அவ்வாறாயின் தேகம் என்பதன் பொருட்கு ஒத்தது இதுவாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.