இச்சொல் சிற்றூர்களில் தமிழ்நாட்டில் வழங்கப்படுவது. இக்காலத்தில் தமக்குள் ஒப்பந்தத்தில் ஈடுபடுவோர் வழக்கறிஞரிடம் சென்று வேண்டியதை எழுதிக்கொள்வர். முற்காலங்களில் சிற்றூராரே தமக்குள் இத்தகைய ஒப்பந்தகளை வரைந்து வைத்துக்கொள்வார்கள். இவை முச்சலிக்கை எனப்பட்டன. அரசர்காலத்து அதிகாரிகள் அவற்றை ஏற்றுக்கொண்டனர்.
ஒரு காரியத்தைப் பேசி முடித்துக்கொண்டு செய்யப்படும் ஒப்பந்தம் எதிர்காலத்தில் அதை நோக்குவார்க்கு ஓர் அறிக்கை போன்றதே. அது முன் முற்றுப்பெற்ற ஓர் ஒப்புதலைத் தெரிவிக்கிறது.
இப்போது சொல்லைப் பார்ப்போம்.
முடிச்சு - இது முடித்து என்பதன் பேச்சு வழக்குத் திரிபு.
அலிக்கை - இது அறிக்கை என்பதன் பேச்சு வழக்குத் திரிபு.
முடித்து அறிக்கை > முடிச்சு அலிக்கை > முடிச்சலிக்கை > முச்சலிக்கை.
இது நீண்ட நாட்கள் வழக்கிலிருந்து வந்த காரணத்தால் அறிக்கை என்பது அலிக்கை என்று மாறி டி என்ற எழுத்தும் சொல்லில் மறைந்தது.
டகரம் போலும் கடின ஒலிகளும் சிலவேளைகளில் பிற ஒலிகளும் இடைக்குறைதல் இயல்பு ஆகும். எடுத்துக்காட்டு:
பீடுமன் > பீமன் > வீமன். ( டுகரம் மறைந்தது). பொருள்: பீடுடைய மன்னன்.
இராமாயணத் திரிபு.
தருமம் > தம்மம் ( பாலி மொழித் திரிபு).
பெருமான் > பெம்மான் (தமிழ்மொழித் திரிபு).

அருமையான தகவல்
பதிலளிநீக்கு