மருத்துவர்செய் சீர்ச்சைக்கு மாட்டேன்என் றுரைத்தால்
பொருத்தமிதோ புன்விளைவே பொறுத்தல்நோய்ப் பட்டார்
அறுத்தமைவே ஆள்சீர்ச்சை ஆகுமதால் இன்னோர்
உரைத்திடுதல் உலகமிதில் காட்சியென்றே ஆச்சே.
அரும்பதவுரை
சீர்ச்சை: இச்சொல் இந்நாட்களில் “சிகிச்சை” என்று திரிந்து
வழங்குவது ஆகும். இது சீர்ப்படுத்துவது என்ற பொருளில் சீர்ச்சை
என்றே வழங்கிய சொல். அவ்வாறே இது இப்பாடலிற்
பதிவு
பெறுகிறது.
பொறுத்தல் நோய் - நோயைப் பொறுத்துவாழ்தலே உடையவரான
நோயாளி. நோயாளி என்றாலே நோயை ஆள்பவர் என்றும் பொருள்
கொள்ளலாம். நோய்பொறுத்தலுக்குட்பட்டவர். ஆங்கிலத்திலும்
இவர்களுக்குப் “பேஷன்ட்” என்பது காண்க.
அதால் - அதுவால்; அதனால்.
அறுத்தமைவு = அறுவை மருத்துவம்.
ஆள்சீர்ச்சை: சீர்ச்சைகளில் முன்மையானவை.
காட்சி - எங்கும் காணப்படுவன ஆதல்.
ஆச்சே - ஆயிற்றே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.