சிவனுக் கமைந்ததிந் நல்லிரவே
செவ்விய வாழ்வினி வெல்வரவே
எவரும் வணங்கி அருள்பெறவே
இவ்வுல கம்ஓர் தெருள்பெறவே .
செவ்வொளி என்பது நம்சிவமே
சீர்பெறச் செய்குவம் இன்
தவமே;
ஒளவியம் பேதம் இவையிலவே;
ஆர்க்கும் உணவே இவணுளதே
கண்விழித் திங்குக் கடனியற்றி
கனிவுடன் பூசை உடனியற்றி
விண்ணாய் விரிந்த ஒளிவிரவும்
வினைநலம் எய்தும் களிப்புறுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.