சென்னைக்கு உரோகிங்கியா
வரவு.
கவிதை.
சென்னைக்கு ரோகிங்கியா
வந்து சேர்ந்தார்;
சீரான மறுவாழ்வால்
உந்தப் பெற்றார்;
தொன்னைக்குள் கஞ்சிகண்ட
நெஞ்சம் கொஞ்ச,
தொல்லையிலா இங்குதானே
தூய வாழ்வே;
இந்நாளே போலஇனி எந்நா ளேனும்
இனிவருமா என்றுரைகள்
மலர்ந்த வாய்கள்;
மண்ணுலகில் இங்குபோல்முன்
மகிழ்ந்த தில்லை!
மகிழ்தலமேல் துன்பமிலை
மான்கள் துள்ளும்.
அதுதானே தமிழர்தம்
விருந்தே ஓம்பல்;
அதற்கீடாய் அகிலத்தில்
நாடொன் றில்லை.
----------------------------
மகிழ்தலமேல் : மகிழ்வுக்குரிய இடமானால் அது
மேலானது என்பது பொருள். - மகிழ் தலம்:
வினைத்தொகை.
மகிழ்தலமேல் என்ற தொடரில் மகர ஒற்று (தல(ம்) )
தொக்கது.
----------------------------
மகிழ்தலமேல் : மகிழ்வுக்குரிய இடமானால் அது
மேலானது என்பது பொருள். - மகிழ் தலம்:
வினைத்தொகை.
மகிழ்தலமேல் என்ற தொடரில் மகர ஒற்று (தல(ம்) )
தொக்கது.
(குறிப்பு: இவர்கள் இங்கேயே வைக்கப்படுவரோ -
தெரியவில்லை.
தெரியவில்லை.
நல்லபடி சாப்பிட்டு நன்றாக இருக்கட்டும்.)
இலக்கணக்குறிப்பு:
என்று யாரும் பேசுவதில்லை. ஆகவே அவ்விலக்கணம்
இப்போது பொருந்தவில்லை. எனினும் “இங்குத்தானே”
என்பதுபோலும் தொடர்கள் பயன்படும் இடங்களும்
பாட்டில் உளவென்று அறிக. இங்குப்போல் என்று
ஈண்டு வராமையும் அன்னதே.
இலக்கணக்குறிப்பு:
"இங்குதானே" : தமிழாசிரியர் சிலர் “இங்குத்தானே”
என்று வல்லெழுத்து மிக்கு வரவேண்டும் என்று
வேண்டுவர். அதுவே இலக்கணம் என்றாலும்
இவ்விடத்து இங்கனம் மிகின் ஒலி கெடும்; ;
இங்குத்தானே என்பது நாலசைச்சீராய் வந்து
பாட்டும் கெடும் என்று அறிக. ஆதலின்
“இங்குதானே” என்பதே சரியாகும். மேலும்
பாட்டில் வேண்டும்வழி தொகுக்கலாம்
(ஓலிகளைக் குறைக்கலாம்) என்பதே யாப்பின் முறை.
அந்த இலக்கணம் உரைநடைக்கு உதவும்.
இங்கு பொருந்தாது.
மேலும்
பேச்சு வழக்கில் “ இங்குத்தானே” என்று வல்லெழுத்து மிக்கு வரவேண்டும் என்று
வேண்டுவர். அதுவே இலக்கணம் என்றாலும்
இவ்விடத்து இங்கனம் மிகின் ஒலி கெடும்; ;
இங்குத்தானே என்பது நாலசைச்சீராய் வந்து
பாட்டும் கெடும் என்று அறிக. ஆதலின்
“இங்குதானே” என்பதே சரியாகும். மேலும்
பாட்டில் வேண்டும்வழி தொகுக்கலாம்
(ஓலிகளைக் குறைக்கலாம்) என்பதே யாப்பின் முறை.
அந்த இலக்கணம் உரைநடைக்கு உதவும்.
இங்கு பொருந்தாது.
என்று யாரும் பேசுவதில்லை. ஆகவே அவ்விலக்கணம்
இப்போது பொருந்தவில்லை. எனினும் “இங்குத்தானே”
என்பதுபோலும் தொடர்கள் பயன்படும் இடங்களும்
பாட்டில் உளவென்று அறிக. இங்குப்போல் என்று
ஈண்டு வராமையும் அன்னதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.