இரவில் விழித்தெழுந்தால் == அந்த
இனிமைப் புறாக்களைக் காணாக் கவலையே!
உறவென் றிலையெனினும் == அவை
குமுறிப் பறப்பதும் உண்பதும் ஈர்த்தெனை
வரவழை காலையினை == என்னும்;
வல்லமை இன்மையின் வாளா திருப்பனே!
இரவும் விலகுதற்கு === இனி
இருத்தல் கிடத்தலே அன்றியென் செய்வது?
இருந்திடும் போதினிலோர் == தமிழ்
இன்கவி என்பதே என் துணை ஆனது!
வருந்துதல் நீக்கியதே == நல்ல
வண்ணக் கவின் தனில் எண்ணம் பதிந்தன.
அருந்துகி றேன் தமிழ்த்தேன் === அது
அந்தி இரவினிக் காலை பகலெனப்
பொருந்துமெந் நேரத்திலும் == அந்தப்
புறாக்கள் இவண்சேர் விடியலும் வந்திடும்.
இனிமைப் புறாக்களைக் காணாக் கவலையே!
உறவென் றிலையெனினும் == அவை
குமுறிப் பறப்பதும் உண்பதும் ஈர்த்தெனை
வரவழை காலையினை == என்னும்;
வல்லமை இன்மையின் வாளா திருப்பனே!
இரவும் விலகுதற்கு === இனி
இருத்தல் கிடத்தலே அன்றியென் செய்வது?
இருந்திடும் போதினிலோர் == தமிழ்
இன்கவி என்பதே என் துணை ஆனது!
வருந்துதல் நீக்கியதே == நல்ல
வண்ணக் கவின் தனில் எண்ணம் பதிந்தன.
அருந்துகி றேன் தமிழ்த்தேன் === அது
அந்தி இரவினிக் காலை பகலெனப்
பொருந்துமெந் நேரத்திலும் == அந்தப்
புறாக்கள் இவண்சேர் விடியலும் வந்திடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.