Pages

ஞாயிறு, 30 ஜூலை, 2017

சங்கப் புலவர் பக்குடுக்கை நன்கணியார் ஞானி

பக்குடுக்கைக் நன்கணியார் ஒரு சங்கப் புலவர். தம் வாழ்க்கைத் தொழிலாகச் சோதிடம் கணிப்பதை மேற்கொண்டிருந்தார். பழந்தமிழில் சோதிடர்களுக்குக் "கணியர்என்பர். சோதிடத்தில் வல்லவராதலின் இவர் "நன்கணியார்" என்று போற்றப்பட்டவர்இவர்தம் இயற்பெயர் தெரிந்திலது.

புறநானூற்றில் 194‍வது பாடல் இவருடையது. இப்பாடலில் இவர் உலகில் உள்ள பல்வேறு மாறுபட்ட நிலைகளையும் நிகழ்வுகளையும்காண்கின்றார். இக்காட்சிகள் ஒருவாறு இவரை வருத்துகின்றன.யாரைக் குற்றம்சொல்வது? அந்தக் கடவுளைத்தான் நொந்துகொள்ளலாம்.அவனைப் பண்பிலாளன் என்று சுட்டுகின்றார். ஈவிரக்கம் அற்றவன் அவன்.ஒரு பக்கம் பிண வீடு! இன்னொரு பக்கம் மணப்பந்தல். ஒரு பக்கம் பிணமாலை கழுத்தை அலங்கரிக்கிறது. இன்னொரு பக்கம் பூச்சூடிய மணமகள், இவ்வுலகம்இன்பமயம் என்றெண்ணி ஒப்பனையுடன் காட்சியளிக்கிறாள்.இப்பன்மை நெறிகளை எப்படித்தான் பாராட்டிப் பாடவியலும்?உலகு ஒரு துன்ப ஊற்று என்பது தெளிவாக "இன்னாது அம்ம‌இவ்வுலகம்!" என்கிறார். இவ்வுலக இயல்பு உணர்ந்து, துன்பத்தைநோக்காது இன்பம் மட்டுமே கண்களுக்குப் புலப்படுமாறு வாழ்ந்துகடல்போலும் இதனைக் கடந்து செல்வது கடமை, அறிஞருக்கு ==என்கிறார், அவர்தம் பாடலில். இயல்பு உணர்ந்தோர் இனியவையேகாண்க என்கிறார்.

உலகம் துன்ப மயமானது என்ற எண்ணமே மேலிட்டு, எல்லாவற்றினின்றும் விலகி, பற்றற்று வாழ்ந்து, விடுதலை பெறுக என்று இவர் கூறவில்லை.துன்பம் உண்டு; ஆனால் படைத்தவன்அப்படிப் படைத்துவிட்டான். அதற்கு நாமென்ன செய்யவியலும்?என்செய்தாலும் வருந்துன்பம் வந்துதான் ஆகிறது. அந்தக் கடவுளின்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, உலக இயல்பு இது என்று உணர்ந்து இன்பமே கண்டு பிற மறந்து அதனால் சிறந்து வாழ்க என்பதுஇப்புலவர் நமக்குக் காட்டும் நெறியாகும். பல நிகழ்வுகள் நமக்கும்அப்பால்பட்டவை. அவற்றுக்குரிய நெறிகளில் அவை செல்கின்றன.நம்மால் காக்க முடிந்தவற்றை நாம் காத்துக்கொள்ளலாம்; முடியாதவை உலக இயல்பின்பால் படும். அவற்றைக் கண்டுகொள்ளாதீர். கொள்ளீரெனின்இன்பமே எங்கும் புலப்படும். அதுவே வாழ்நெறியாம்.
இனிப் பாடலைப் பார்ப்போம்.

இனிப் பாடலைப் பார்ப்போம்.
ஓர் இல் நெய்தல்கறங்க , ஓர் இல்ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப,புணர்ந்தோர் பூவணி அணிய, பிரிந்தோர்பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப,படைத்தோன் மன்ற அப் பண்பி லாளன்;இன்னாது அம்ம இவ்வுலகம்,இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே!

இப்புலவர் ஓர் ஞானி. ஞானும் ( நானும் ) நீயும் ( கடவுள் ) ஆயிருப்பதே ஞானமாகும். என்னால் இயன்றவை ஞான் ( நான்)செய்கிறேன். மற்றது நீ (கடவுள் ) ஆள்கிறாய். இப்படிச் செல்பவர்இவர். இனிய செந்தமிழ்ப் புலவர். பலர் வாழ்க்கைகளைக் கணித்துக்கணித்துப் பார்த்து உண்மை கண்டவர். இவர் கூறும் நெறியை ஆய்ந்து தெளிதல் அறிவுடையோர் கடனாகும்.
நான் என்னும் தன்மை ஒருமைச் சொல் ஞான் என்றும் திரியும்,இது ஞான் என்றே மலையாளமொழியில் இன்றும் வழங்குகிறது,நயம் > ஞயம்; ( நய + அம் ) > ( நாயம் ) > ஞாயம்; (முதனிலைநீண்டு விகுதிபெற்றுப் பின்னும் திரிந்தது; ). இவைபோன்ற திரிபேஞான் என்பதும். ஞான் + நீ > ஞானி என்று மருவியது. நோ: பழம் + நீ = பழநி போல.

நெய்தல் ~ சாப்பறை; கறங்க ~ ஒலி மிக எழ;
ஈர்ந்தண் முழவு ~ திருமணப் பறை;பாணி ~ ஆட்ட பாட்டம்;ததும்ப ~ மேலோங்க;புணர்ந்தோர் ~ மணம் செய்துகொண்டோர்;பைதல் உண்கண் ~ துயருற்ற கண்கள்;பனிவார்பு ~ கண்ணீர் வார்த்தல், வடித்தல்.உறைப்ப ~ மிகுந்திட.இன்னாது ~ துன்பம் மிக்கது.
will   edit/


x


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.